திட்ட விவரம்

சங்கீதம் 27ன் வழியாக ஆண்டவர் உன்னுடன் பேச விரும்புகிறார்மாதிரி

சங்கீதம் 27ன் வழியாக ஆண்டவர் உன்னுடன் பேச விரும்புகிறார்

13 ல் 5 நாள்




ஆண்டவர் உன் கன்மலையானவர்!

இன்று, நாம் சங்கீதம் 27வது அதிகாரத்தின் 5வது வசனத்திலிருந்து நமது தொடரைத் தொடர்கிறோம். “தீங்குநாளில் அவர் என்னைத் தம்முடைய கூடாரத்தில் மறைத்து, என்னைத் தமது கூடார மறைவிலே ஒளித்துவைத்து, என்னைக் கன்மலையின்மேல் உயர்த்துவார்". (சங்கீதம் 27:5)

  • எல்லாமே மோசமாக நடக்கும் நாட்களும் உண்டு. ஆனால், துன்ப காலங்களில் ஆண்டவர் நமக்கு அடைக்கலம் என்று வேதாகமம் சொல்கிறது. (எரேமியா 17:17ஐப் பார்க்கவும்)
  • கர்த்தர் உன்னைத் தம்முடைய வாசஸ்தலத்தில் வைத்துப் பாதுகாப்பார். தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமுமான துணையுமானவர். (வேதாகமம், சங்கீதம் 46:1)
  • புயல் வீசும்போது அவரே உன் புகலிடம்!
  • அவர் உன்னைத் தம்முடைய பரிசுத்த கூடாரத்தில் மறைத்து வைத்து அடைக்கலம் தருகிறார். உன் ஜீவனையும் உன் ஆத்துமாவையும் காப்பவர் ஆண்டவர் ஒருவரே ஆவார். (வேதாகமம், சங்கீதம் 121:7)
  • தேவன் நான் நம்பியிருக்கிற துருகமும், என் கேடகமும், என் இரட்சண்ணியக் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமும், என் புகலிடமும், என் இரட்சகருமானவர்; என்னை வல்லடிக்கு நீங்கலாக்கி இரட்சிக்கிறவர் அவரே. (வேதாகமம், 2 சாமுவேல் 22:3)

இந்த வசனம் எப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது என்பதைக் கவனித்தீர்களா?

  1. அவரது வாசஸ்தலத்தில் பாதுகாப்பு உண்டு
  2. அவரது கூடாரத்தில் மறைவு உண்டு
  3. கன்மலையின் மேல், உயரத்தில் நிறுத்தப்படுகிறோம்

“கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகரும், என் தேவனும், நான் நம்பியிருக்கிற என் துருகமும், என் கேடகமும், என் இரட்சணியக் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமுமாயிருக்கிறார்." (வேதாகமம், சங்கீதம் 18:2)

அவர் மீது நம்பிக்கை வைத்துவிடு... ஆண்டவர் உன்னைத் தள்ளாட விடமாட்டார்.

என்னுடன் சேர்ந்து ஜெபி: “ஆண்டவரே, என் தேவையில், நீர் என்னைக் காப்பாற்றுகிறீர். என் தேவையில், நீர் என்னை மறைத்துவைக்கிறீர். என் தேவையில், நீர் என்னை ஒரு கன்மலையின் மீது உயர்த்தி வைக்கிறீர். நீரே என் கோட்டை! என்னை ஒருபோதும் விழாதபடி காப்பதற்காக உமக்கு நன்றி. இயேசுவின் நாமத்தில், ஆமென்."

நாள் 4நாள் 6

இந்த திட்டத்தைப் பற்றி

சங்கீதம் 27ன் வழியாக ஆண்டவர் உன்னுடன் பேச விரும்புகிறார்

சங்கீதம் 27 தாவீதின் ஒரு அற்புதமான சங்கீதம், இதில் உள்ள வசனங்களின் ஆழங்களை அறிவது சாலச்சிறந்தது மற்றும் இது நிச்சயமாக உன்னை ஊக்குவிக்கும்! அடுத்த சில நாட்களில் இதை தொடர்ந்து வாசி… ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்!

இந்த திட்டத்தை வழங்கியதற்காக tamil.jesus.net க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=psalm27

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்