திட்ட விவரம்

சங்கீதம் 27ன் வழியாக ஆண்டவர் உன்னுடன் பேச விரும்புகிறார்மாதிரி

சங்கீதம் 27ன் வழியாக ஆண்டவர் உன்னுடன் பேச விரும்புகிறார்

13 ல் 6 நாள்




உன் மனப்பான்மை உன் உயர்வைத் தீர்மானிக்கிறது!

இன்று, 27ஆம் சங்கீதத்தின் 6ஆம் வசனமாகிய, விசுவாசம் மற்றும் கிரியையைப் பற்றிய வசனத்தைப் பார்க்கப் போகிறோம்.

“இப்பொழுது என் தலை என்னைச் சுற்றிலும் இருக்கிற என் சத்துருக்களுக்கு மேலாக உயர்த்தப்படும், அதினிமித்தம் அவருடைய கூடாரத்திலே நான் ஆனந்த பலிகளையிட்டு, கர்த்தரைப் பாடி, அவரைக் கீர்த்தனம்பண்ணுவேன்.” (வேதாகமம், சங்கீதம் 27:6).

"உன் தகுதி அல்ல, உன் மனப்பான்மையே உன் உயர்வைத் தீர்மானிக்கும்" என்று ஒரு எழுத்தாளர் கூறியது போல், தாவீது இந்த வசனத்தில் அப்படிப்பட்ட முன்மாதிரியான மனப்பான்மை எந்த அளவிற்கு வெளிப்படுத்துகிறான் என்பதை நீ உணரலாம்.

  • அவன் நம்புகிறான் மற்றும் விசுவாசத்தால் தன்னை சுற்றியுள்ள எதிரிகளுக்கு மேலாக தனது தலை ஏற்கனவே உயர்த்தப்படுவதை அவன் சிந்தனையில் காண்கிறான். இனி ஒருபோதும் அவன் எதிரிகளை அவன் காணமாட்டான். ஆண்டவர் அவனை உயர்த்துவதையும், ஆசீர்வதிப்பதையும், அவனை மீட்டெடுப்பதையும், அவனுக்கு வெகுமதி அளிப்பதையும் அவன் காண்கிறான்!
  • அவன் தன்னை எதிர்காலத்தில் நிறுத்துகிறான். நான் அர்ப்பணிப்பேன்... பாடுவேன்... துதிப்பேன்... என்று சொல்வதன் மூலமாக அவனுடைய எதிர்கால நாட்களை உறுதிசெய்கிறான். ஆண்டவர் தன்னை உயர்த்தப் போகிறார் என்பது அவனுக்குத் தெரிந்திருந்தது.
  • அவனுக்குக் கொடுக்கப்படவிருக்கும் ஆசீர்வாதங்களுக்காக அவன் ஏற்கனவே ஆண்டவருக்கு நன்றி சொல்லத் தொடங்கினான். ஏற்கனவே அவனது இருதயமும் வாயும் துதிகளால் நிறைந்திருந்தது!

உனக்கு ஏற்படும் சூழ்நிலைகளை நீ தேர்வு செய்ய முடியாது, ஆனால் அவற்றுக்கு எவ்வாறு பதிலளிப்பது என்பதை நீ தீர்மானிக்கலாம்! புயல், மேகங்கள் மற்றும் கொந்தளிப்பு ஆகியவற்றிற்கு மேலே உயர உன்னை அனுமதிக்கும் மனப்பான்மையை தேர்வுசெய். மேகங்களுக்கு மேலே, வானம் இன்னும் நீலமாக இருப்பதை நினைவில் கொள்!

உன் உயர்வை தீர்மானிக்கும் சரியான மனப்பான்மையை இன்றே தேர்ந்தெடுத்துவிடு!

வேதவசனங்கள்

நாள் 5நாள் 7

இந்த திட்டத்தைப் பற்றி

சங்கீதம் 27ன் வழியாக ஆண்டவர் உன்னுடன் பேச விரும்புகிறார்

சங்கீதம் 27 தாவீதின் ஒரு அற்புதமான சங்கீதம், இதில் உள்ள வசனங்களின் ஆழங்களை அறிவது சாலச்சிறந்தது மற்றும் இது நிச்சயமாக உன்னை ஊக்குவிக்கும்! அடுத்த சில நாட்களில் இதை தொடர்ந்து வாசி… ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்!

இந்த திட்டத்தை வழங்கியதற்காக tamil.jesus.net க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=psalm27

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்