YouVersionஐ குறித்து

சம்பந்தபட்டது

கடந்த தலைமுறைகளில், பைபிளை வாசிக்க மக்களுக்கு உண்டாயிருந்த வழிகள் மிகக் குறைவாக மட்டுமே இருந்தது. இன்று, அது போல அல்ல சூழ்நிலை. இருந்தபோதிலும் பைபிளை வாசிக்க வசதி உள்ள மக்கள் பலரும் அதன் செய்தி தங்கள் வாழ்விற்கு பொருந்தாது என்று தான் நினைக்கிறார்கள். அதே நேரத்தில், தங்களுடைய அன்றாட அனுபவங்களுக்கும் பைபிளுக்கும் இடையே ஒரு தொடர்பு உள்ளதாக நினைக்கும் மற்றவர்களும் இருக்கிறார்கள்.

தகவல் புரட்சி

கடந்த தசாப்தத்தில், இதற்கு முன்பு இல்லாத விதத்தில் மக்களை சக்தியூட்டும் ஒரு புரட்சியை இணையதளம் கொண்டு வந்திருக்கிறது. அதன் பகிர்ந்து கொள்ளும், பங்களிக்கும், உருவாக்கும், ஒளிபரப்பவும் மற்றும் தொடர்பு கொள்ளவும் செய்யக்கூடிய ஆற்றலினால் நாம் யாரென்றும் என்ன நம்புகிறோமென்றும் உலகின் மற்றவரோடு வெளிப்படுத்துவது எளிது.

YouVersion

1996 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து, Life.Church இன் நோக்கமானது, கிறிஸ்துவை முழுமையாகப் பின்பற்றுபவர்களாக மக்களை வழிநடத்துவதாக இருந்திருக்கிறது. அவ்வாறு செய்வதன் மூலம், மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையுடன் வேதாகமத்தை இணைக்க உதவும் புதிய வழிகளைத் தேடினோம். நாங்கள் பல்வேறு தொழில்நுட்பங்கள் மற்றும் உத்திகளை ஒருங்கிணைத்திருப்பதால், இந்த வருடங்களில் எங்கள் முறைகளும் மாறியிருக்கின்றன. ஆனால் மையத்தில், வாழ்க்கையில் அவர்கள் எங்கிருந்தாலும், தேவனுடைய வார்த்தை ஒவ்வொருவருடனும் எவ்வாறு தொடர்புடையது என்பதை மக்களுக்கு நிரூபிக்கவும் கற்பிக்கவும் நாங்கள் தொடர்ந்து முயற்சிப்பதால், எங்கள் ஒருமுகப்படுத்தப்பட்ட கவனம் இயைபுடையதாக இருந்து வருகிறது. Life.Church இன் முயற்சிகளில் ஒரு புதிய எல்லையை YouVersion பிரதிநிதிகரிக்கிறது. புதுமையான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உலகைப் பாதிக்கிற ஒரு கருவியை மட்டும் நாங்கள் உருவாக்கவில்லை, அதற்கும் மேலாக, வேதாகமம் அவர்களுடைய வாழ்க்கைக்காக பெற்றிருக்கிற தொடர்பைக் கண்டறிவதால், தேவனுடனான உறவுக்குள் மக்களை ஈடுபடுத்தவும் செய்கிறோம்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்