திட்ட விவரம்

சங்கீதம் 27ன் வழியாக ஆண்டவர் உன்னுடன் பேச விரும்புகிறார்மாதிரி

சங்கீதம் 27ன் வழியாக ஆண்டவர் உன்னுடன் பேச விரும்புகிறார்

13 ல் 8 நாள்




ஆண்டவர் உன்னை உற்றுநோக்கி கவனிக்கிறார்...

“என் முகத்தைத் தேடுங்கள் என்று சொன்னீரே, உம்முடைய முகத்தையே தேடுவேன் கர்த்தாவே, என்று என் இருதயம் உம்மிடத்தில் சொல்லிற்று. உமது முகத்தை எனக்கு மறையாதேயும், நீர் கோபத்துடன் உமது அடியேனை விலக்கிப்போடாதேயும்..." (சங்கீதம் 27:8-9)

உன் இருதயம் பேச ஏங்குகிறது. உன் உள்ளம் ஆண்டவரைச் சந்திப்பதற்காக தாகமாக உள்ளது.

வேதாகமம் சொல்கிறது, "மனுஷன் அப்பத்தினால் மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படும் ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்”. (மத்தேயு 4:4). அவரது வாய் அவரது முகத்தின் ஒரு அங்கம் தானே?

  • அவருடைய முகம்தான் அவருடைய பிரசன்னம்.
  • அவரது முகம்தான் அவரது கனிவான மற்றும் மென்மையான குரல்.
  • அவருடைய முகம்தான் அவருடைய உற்றுநோக்கும் கண்.
  • அவரது முகம்தான் கவனமாய் உற்று கவனிக்கும் காது.

அன்பால் நிறைந்து தன் குழந்தையின் தொட்டிலைப் பார்க்கும் தாயைப் போல, ஆண்டவர் உன்னை மென்மையான ஒரு புன்னகையுடன் பார்க்கிறார்.

அவர் உன்னிடம் பேசுகிறார், உனக்குத் தேவையான சமயங்களில் உன்னை ஆறுதல்படுத்துகிறார், மேலும் இன்று நீ மீண்டும் ஜீவனால் நிரப்பப்படுவதற்காக அவருடைய ஜீவ சுவாசத்தை உன் மீது ஊதுகிறார் (ஆதியாகமம் 2:7 ஐப் பார்க்கவும்).

அவருடைய முகத்தைத் தேடு. அவர் உன்னை விட்டு விலக மாட்டார். அவருடைய உயிரூட்டும் பிரசன்னம் உன்னை சூழ்ந்து மூடவும், அவர் உன்மீது வைத்துள்ள எல்லையில்லா அன்பை இன்று நீ உணரவும் நான் ஜெபிக்கிறேன்.

நாள் 7நாள் 9

இந்த திட்டத்தைப் பற்றி

சங்கீதம் 27ன் வழியாக ஆண்டவர் உன்னுடன் பேச விரும்புகிறார்

சங்கீதம் 27 தாவீதின் ஒரு அற்புதமான சங்கீதம், இதில் உள்ள வசனங்களின் ஆழங்களை அறிவது சாலச்சிறந்தது மற்றும் இது நிச்சயமாக உன்னை ஊக்குவிக்கும்! அடுத்த சில நாட்களில் இதை தொடர்ந்து வாசி… ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்!

இந்த திட்டத்தை வழங்கியதற்காக tamil.jesus.net க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=psalm27

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்