திட்ட விவரம்

சங்கீதம் 27ன் வழியாக ஆண்டவர் உன்னுடன் பேச விரும்புகிறார்மாதிரி

சங்கீதம் 27ன் வழியாக ஆண்டவர் உன்னுடன் பேச விரும்புகிறார்

13 ல் 13 நாள்




கர்த்தரிடத்தில் நம்பிக்கையுடன் காத்திரு!

“கர்த்தருக்குக் காத்திரு, அவர் உன் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார், திடமனதாயிருந்து, கர்த்தருக்கே காத்திரு.” (வேதாகமம், சங்கீதம் 27:14)

கடந்த சில வாரங்களாக, சங்கீதம் 27ஐ நாம் ஒன்றாக சேர்ந்து ஆராய்ந்தோம். வேதாகமத்தின் இந்த மகத்தான வாக்குத்தத்தங்களை மீண்டும் பார்க்க ஏன் சிறிது நேரம் ஒதுக்கக்கூடாது? நாம் தெரிந்துகொண்டவை…

  • நீ பயப்பட வேண்டியதில்லை (வசனம் 1)
  • தேவன் உன்னைக் காத்து நடத்துகிறவராய் இருக்கிறார் (வசனம் 2)
  • நீ தனியாக இல்லை (வசனம் 3)
  • நீ அவருடைய வீடு! (வசனம் 4)
  • ஆண்டவர் உன் கன்மலையாய் இருக்கிறார் (வசனம் 5)
  • உன் மனப்பான்மை உன் உயர்வைத் தீர்மானிக்கிறது (வசனம் 6)
  • ஆண்டவர் உன் சத்தத்தைக் கேட்கிறார் (வசனம் 7)
  • ஆண்டவர் உன்னை உற்று நோக்கி கவனிக்கிறார் (வசனங்கள் 8 மற்றும் 9)
  • ஆண்டவர் உன்னை ஒருபோதும் கைவிடமாட்டார் (வசனம் 10)
  • பின்பற்ற வேண்டிய பாதையை ஆண்டவர் உனக்குக் காட்டப் போகிறார் (வசனம் 11)
  • உன்னை விடுவிப்பவர் எழும்புவார்! (வசனம் 12)
  • ஆண்டவரின் நன்மைகளை நீ எதிர்பார்க்கலாம் (வசனம் 13)

தேவன் உனக்காக யாவற்றையும் வைத்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா? கடைசியாக, நம்பிக்கையுடன் கர்த்தருக்காக காத்திருக்க தாவீது நம்மை அழைக்கிறார்.

தைரியமாய் இரு! மற்ற மொழிபெயர்ப்புகள் கூறுவது... பலமுள்ள நபராய் இரு! ஆண்டவருடன் இரு! திடமனதாய் இரு. மனமுடைந்து போய்விடாதே! ஆம், நம்பிக்கையோடு கர்த்தருக்குக் காத்திரு!

இந்த திட்டத்தின் உரைகள் "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்க மின்னஞ்சல்களிலிருந்து இங்கே வழங்கப்பட்டுள்ளது. "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற ஊக்கமளிக்கும் தினசரி மின்னஞ்சலை இலவசமாக பெறுவதற்கு இங்கே பதிவு செய்யலாம்: https://tamil.jesus.net/

வேதவசனங்கள்

நாள் 12

இந்த திட்டத்தைப் பற்றி

சங்கீதம் 27ன் வழியாக ஆண்டவர் உன்னுடன் பேச விரும்புகிறார்

சங்கீதம் 27 தாவீதின் ஒரு அற்புதமான சங்கீதம், இதில் உள்ள வசனங்களின் ஆழங்களை அறிவது சாலச்சிறந்தது மற்றும் இது நிச்சயமாக உன்னை ஊக்குவிக்கும்! அடுத்த சில நாட்களில் இதை தொடர்ந்து வாசி… ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்!

இந்த திட்டத்தை வழங்கியதற்காக tamil.jesus.net க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=psalm27

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்