திட்ட விவரம்

கனவுகள் மீட்கப்பட்டனமாதிரி

Dreams Redeemed

7 ல் 7 நாள்


12-கட்டமாக நடக்கும் சுவிஷேச கூடுகைகளில் சொல்லப்படும் அமைதி ஜெபத்தில் "கஷ்டங்களை சமாதானத்திற்கான வழிகளாகவும்; இந்த பாவம் நிறைந்த உலகை, நாம் நினைப்பது போலின்றி, இயேசுவானவர் எவ்வாறு ஏற்றுக்கொண்டாரோ, அப்படியே நாமும் மனதில் எடுத்துக்கொள்ளவும்" உதவுமாறு கடவுளிடம் விண்ணப்பிக்கும் ஒரு வாக்கியம் வரும்.


இந்த ஒரு பகுதி எப்போதும் தனிச்சிறப்பாக எனக்கு தோன்றியது ஏனென்றால் நான் நினைப்பதுபோல வாழ்க்கையை மாற்றும்படியாக... என்னுடைய கனவுகளை நினைவாக்கும் முயற்சிகளில் என்னுடைய ஆற்றல் பிற மக்களையும் சூழல்களையும் சரிப்படுத்தவும் கட்டுப்படுத்தவும் அதிகமாக வீணாகியுள்ளது. தெளிவாகப் பார்த்தால் இது வேலைசெய்யவில்லை.


என்னுடைய விவாகரத்தின் பின்விளைவுகளாக, நான் என்னுடைய வீட்டை இழந்தேன், என் நன்மதிப்பு கெட்டுப்போனது, மேலும் நான் எனக்காக ஏற்படுத்தியிருந்த பாதுகாப்புகளும் நான் கட்ட முயற்சித்துக்கொண்டிருந்த வாழ்க்கையும் ஒன்றன் பின் ஒன்றாகமுழுமையாக அகற்றப்பட்டது. வாழ்க்கை நான் நினைத்ததுபோல் இல்லை.


ஒரு சமயத்தில், இந்த எண்ணத்தில் நான் மிகவும் துக்கமடைந்து ஆண்டவரிடம் “நான் நினைத்ததுபோல இந்த வாழ்க்கை மாறவில்லை" என்று அழுதேன். தேவன் அதை கேட்டார். அதன்பின், என் இருதயத்திடம் பேசினார்.


நான் உன்னை மீட்டேன்


இந்த வாக்கியம் மிகவும் அபத்தமாக சிரிப்பை ஏற்படுத்தக் கூடியதாக இருந்தது. மீட்பதை சிறிதளவாவது குறிக்கும் எதுவும் நான் இருந்த நிலையில் இல்லை.


ஹார்மொனி, நான் உன்னை உன்னுடைய சொந்த கருத்துக்களின் கனவிலிருந்து மீட்டிருக்கிறேன்... நான் கனவை மீட்பேன்.


ஆண்டவர் என் கனவை மீட்பார், குடும்பத்தை மீண்டும் எனக்கு தருவார், என்னும் இந்த சத்தியவாக்கு, நான் இருக்கும் இந்த நிலை என்றென்றும் இப்படியே இருக்காது எனும் நம்பிக்கையை அளித்தது. 


கடவுள் மீட்பராக இருப்பதை நான் அறிவேன். முதலில், அவர் என் வலியும் சுரண்டலும் மிக்க கதையை மீட்டு treasures(புதையல்கள்) மூலமாக மற்றவர்களை சந்திக்க அதை அவர் பயன்படுத்தினார். இன்று, விவாகரத்திற்கு பல ஆண்டுகள் கழித்து, குடும்பம் மீட்கப்பட வேண்டும் என்ற எனது கனவை அவர் மீட்டெடுத்தார் என்று நான் உங்களுக்கு சொல்ல முடியும். 2014 மார்ச் மாதத்தில், என் அழகான மகளுக்கு ஒரு அற்புதமான, அன்பான, இரண்டாவது தந்தையாக இருக்கும் ஒரு நம்பமுடியாத மனிதனை நான் திருமணம் செய்து கொண்டேன்! 2018 ஜனவரியில், வீட்டிற்கு பெரும் மகிழ்ச்சியை கொண்டுவந்த ஆண் குழந்தை ஒன்றும் எங்களுக்கு பிறந்தது.


யோசேப்பின் கதையை நான் மிகவும் விரும்புகிறேன், ஏனென்றால் அது அவனுடைய எல்லா கனவுகளும் தகர்க்கப்பட்டது போன்று தோன்றினாலும், தேவனை இன்னும் நம்பிய கனவுகாண்பவனின் ஒரு எடுத்துக்காட்டு. அவன் தன்னுடைய குடும்பத்தினரால் துரோகம் இழைக்கப்பட்டான், கைவிடப்பட்டான், அடிமையாக்கப்பட்டான், சிறையிலடைக்கப்பட்டான், மேலும் மறக்கப்பட்டான். இவை எல்லாவற்றிக்கும் மத்தியிலும், தேவன் யோசேப்புடனே இருந்தார். இறுதியில், கடவுளின் மீதான அவனது உண்மையால் அவன் தன்னுடைய சூழ்நிலைகளை மேற்கொண்டு அவனுடைய குடும்பத்தையும், எகிப்தின் முழுமையையும் பஞ்சத்திலிருந்து காப்பாற்ற அவனால் முடிந்தது. யோசேப்புடைய வாழ்வு மற்றும் கதையின் ஒவ்வொரு துளியையும் நன்மைக்காக ஆண்டவர் பயன்படுத்தினார். ஆண்டவர் கனவை மீட்டார். 


கனவினை கைவிடும்படி என்றாவது யோசேப்பு சோதிக்கப்பட்டாரா? என்று நான் ஆச்சரியத்துடன் யோசித்திருக்கிறேன் அதற்குமாறாக, அவருடைய எல்லா சூழ்நிலைகளிலும் எப்பேர்ப்பட்ட காலங்களிலும் அவர் விசுவாசத்தில் நிலைத்துநின்றார், ஆண்டவர் அவரை பயன்படுத்திக்கொள்ள ஒப்புக்கொடுத்தார், மற்றும் கனவு கண்டுகொன்டே இருந்தார். அவருடைய விசுவாசத்தினால் ஒரு தேசமே காப்பாற்றப்பட்டது.


நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று எனக்கு தெரியாது. உங்களின் வாழ்க்கைக்கான தேவனின் கனவுகள் மீது எந்த வகையான சோதனைகள் அல்லது தாக்குதல்கள் நடந்திருக்கிறது என்பதும் எனக்குத் தெரியாது. அனால் ஒன்று எனக்கு தெரியும் - கடவுள் ஒரு மீட்பர். உண்மையுள்ளவர். நீங்கள் கனவு காணும்போது, ​​நம்பிக்கையுடன் இருங்கள், விடாமுயற்சியுடன் இருங்கள்…


தேவன் கனவை மீட்பார். 


 


ஹார்மொனியின் குறிப்பு:


இந்த தியானத்தை நீங்கள் ரசித்தீர்கள் என்று நம்புகிறேன்! விடுதலைப்பெற்று வாழவும், பெரியதாக கனவு காணவும், நல்லது செய்யவும் உங்களை தொடர்ந்து ஊக்குவிக்க விரும்புகிறேன்! எனது வலைப்பதிவை இங்கே வாசிக்க உங்களை அழைக்கிறேன் www.HarmonyGrillo.com. Treasures (புதையல்கள்) குறித்து மேலும் அறிந்துகொள்ள, இங்கே செல்லுங்கள் www.iamatreasure.com


 


நாள் 6

இந்த திட்டத்தைப் பற்றி

Dreams Redeemed

நம்முடைய கனவுகள் எட்டாத தூரத்தில் இருப்பதுபோலவோ அல்லது தகர்க்கப்பட்டது போலவோ தோன்றும்போது நாம் என்ன செய்வோம்? அதிர்ச்சியையும் தூஷணங்களையும் மேற்கொண்டதோடு, விவாகரத்தின் மணமுறிவையும் சந்தித்தவளாக, இந்த கேள்வியை நான் அதிகதி...

More

இத்திட்டத்தை வழங்கியமைக்காக ஹார்மொனி கிரில்லோ (நான் ஒரு பொக்கிஷம்) அவர்களுக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் தகவல் அறிய, http://harmonygrillo.com க்கு செல்லவும்

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்