திட்ட விவரம்

கனவுகள் மீட்கப்பட்டனமாதிரி

Dreams Redeemed

7 ல் 3 நாள்


விசுவாசம் நம்மை வாழ்க்கையின் கடினப்பாடுகளுக்கு மறைத்துக் காப்பதில்லை. வேலையிழப்பது, மனமுடைவது, அல்லது அன்புக்குரியவர்கள் அவர்களின் காலத்திற்கு முன்பே எடுத்துக்கொள்ளப்படுவது ஆகிய தருணங்கள் எல்லோருக்கும் உண்டு.


நம்முடைய கனவுகள் கனிந்திட நாம் காத்துக்கொண்டிருக்க (மேலும் மேலும் காத்துக்கொண்டிருக்க) விடப்பட்ட நிலையில் நாம் இருப்பது போன்ற பிற நேரங்களும் உண்டு. குழந்தைக்காக, வாழ்க்கைத்துணைக்காக, அல்லது ஒரு உறவு மீண்டும் நிலைபெற நாம் கொண்ட கனவுகளுக்காக. ஒரு அன்புக்குரியவர் சுகவீனத்தையோ அல்லது அடிமைத்தனத்தையோ மேற்கொள்ள. நம் தொழிலில் ஒரு முன்னேற்றம் வர. நமது இருதயங்கள் நம்மிடம் இன்னும் இல்லாதவைக்கான ஏங்குதலால் வலியுடன் இருக்கின்றன. சிலநேரங்களில், நாம் நீண்டகாலமாக வலியுடன் இருப்பதால் நமது நம்பிக்கை தேய்ந்துபோய் இனியும் நமக்கு மோசமான இந்த வலிகள் வேண்டாம் என, நாம் கனவுகாண்பதையே நிறுத்தவும் நேரிடலாம். 


தேவன் நம் கனவுகள் மீது அக்கறையுடையவர். உள்ளபடியே, “தேவ கனவுகளை” நம் ஒவ்வொருவருடைய இதயங்களிலும் அவர் வைக்கிறார். ஆனால், நானோ கனவுகளை தருபவராகிய தேவனை விட கனவுகளின்மீது அதிக ஆசையாக இருந்தால், நான் அந்த கனவை ஒரு விக்கிரகமாக்குகிறேன். 


இரு-வயதாக இருந்ததிலிருந்தே, பிரபல நடிகையாக மாறவேண்டும் என்று எனக்கு ஆசை. குழந்தையாக நான், கதாபாத்திரங்களை உருவாக்குவதில் கண்ணாடியின் முன் பல மணிநேரங்கள் செலவு செய்துள்ளேன். தவறான துஷ்ப்ரயோகம் மற்றும் சுரண்டல்கள் இந்த கனவொடு கூட, பிற எல்லா கனவுகளிலுமிருந்தும் என்னை தடம்புரட்டி போட்டது. பின்னர் இயேசுவோடு நான் நடக்க ஆரம்பித்தபோதோ, நடிப்பை மறுபடியும் தொடர முடிவு செய்தேன். 


நான் ஏற்ற வேலைகளில் பதிவுசெய்து என் தொழிலை கட்டியெழுப்ப சிறந்த தருணங்களை பெற்றேன் ஆனால், நான் தற்போது தொடர்வதற்கு மாறான ஒரு கனவை தேவன் என் வாழ்க்கைக்காக வைத்திருக்கிறார் என்பதை சீக்கிரம் அறிந்துகொண்டேன்.  


மெய்யாக, நான் நடிகையாக வேண்டும் எனும் என் ஆசையோ நான் முக்கியத்துவம் வாய்ந்தவளாக உணரவேண்டும் என்பதை அதிகம் சார்ந்திருந்தது. நடிகையாக நான் பெறும் அங்கீகாரம் மற்றும் பிறர் கவனங்களில் என் மதிப்பை உணராமல் நான் அவரில் என் மதிப்பை கண்டுகொள்ளவேண்டும் என ஆண்டவர் நினைத்தார். என் கடந்தகாலத்தின் வலிகளை மற்றவர்களுக்கு நம்பிக்கையும் விடுதலையும் அளிப்பதற்காக பயன்படுத்த அவர் சித்தம்கொண்டிருக்கிறார் என்பதையும் புரிந்துகொள்ள துவங்கினேன். 


நான் என் வாழ்க்கைக்கான தேவனின் கனவை தொடர முடிவு செய்தபின் 2003ல், Treasures(புதையல்கள்) எனும், பாலியல் ரீதியான சுரண்டல் மற்றும் கடத்தல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கான அணுகல் மற்றும் ஆதரவு குழுவை ஸ்தாபித்தேன். என் வாழ்க்கைக்கான தேவ-கனவை தொடர நான் எடுத்த முடிவின் விளைவாக, ஒவ்வொருநாளும் பல வாழ்க்கைகளில் நல்ல தாக்கங்கள் நிகழ்வதை என்னால் காணமுடிகிறது! நான் நடிகையாக ஆகியே தீருவேன் என்று என் கனவில் விடாப்பிடியாக பிடித்துக் கொண்டிருந்திருந்தால், அல்லது இன்னும் மோசமாக, என் வாழ்வில் அதை விக்கிரகமாக மாற விட்டிருந்தால், எனக்காக தேவன் தனது சிந்தனையில் வைத்திருந்த கனவை நான் இழந்திருப்பேன்!


தேவன் நம்மைக்குறித்தும் நமது கனவுகளைக்குறித்தும் அக்கறையோடு இருக்கிறார். நமக்கு என்ன தேவை என்று நாம் சிந்திப்பதிலிருந்து நம்மை வழிமாற்றி, பின் அவர் நமக்காக வைத்திருப்பதை நோக்கி நம்மை வழிநடத்தத் தக்கதான அளவிற்கு போதுமான அக்கறையுடன் இருக்கிறார்.


உங்கள் வாழ்விற்கு தேவகனவு ஒன்று இருக்கிறது. நீங்கள் அதில் இப்போது நடந்துகொண்டிருக்கலாம், அல்லது நீங்கள் சற்றும் எதிர்பாராததாகவும் அது இருக்கலாம். நீங்கள் உங்கள் திட்டங்களையும் கனவுகளையும் திறந்த கரங்களால் அவரிடம் ஒப்படைத்து, அவருடைய செயல்களில் நம்பிக்கை கொண்டிருந்தால், அவர் உங்களுக்காக நினைத்திருப்பதின் பூரணத்தில் உங்களை வழிநடத்துவார் என்பதை நான் விசுவாசிக்கிறேன். 


நாள் 2நாள் 4

இந்த திட்டத்தைப் பற்றி

Dreams Redeemed

நம்முடைய கனவுகள் எட்டாத தூரத்தில் இருப்பதுபோலவோ அல்லது தகர்க்கப்பட்டது போலவோ தோன்றும்போது நாம் என்ன செய்வோம்? அதிர்ச்சியையும் தூஷணங்களையும் மேற்கொண்டதோடு, விவாகரத்தின் மணமுறிவையும் சந்தித்தவளாக, இந்த கேள்வியை நான் அதிகதி...

More

இத்திட்டத்தை வழங்கியமைக்காக ஹார்மொனி கிரில்லோ (நான் ஒரு பொக்கிஷம்) அவர்களுக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் தகவல் அறிய, http://harmonygrillo.com க்கு செல்லவும்

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்