திட்ட விவரம்

கனவுகள் மீட்கப்பட்டனமாதிரி

Dreams Redeemed

7 ல் 1 நாள்


நான் என் இருபத்து ஒரு வயதை அடையும் வரை உயிர்வாழ்வேன் என்று நினைத்தது இல்லை. பாலியல் வன்முறை, பலாத்காரம், மற்றும் குழப்பம் மிகுந்த சூழலில் நீண்ட காலத்தை கழித்தபின், என்னுடைய பதிமூன்றாம் வயதில், என் எட்டு வயது தம்பியுடன் கூட என் தாய் இந்த போக்கிரி-கும்பல்கள் நிறைந்த சுற்றுப்புறத்தில், மூன்று மாதங்களுக்கு எங்களை நாங்களே கவனித்துக்கொள்ளும்படி விட்டு சென்றுவிட்டார். அந்த கோடைகாலத்தில், எங்களுக்கு உணவும் பாதுகாப்பும் அளித்த என்னை விட மூத்த வாலிபன் ஒருவனிடம் நான் சம்பந்தம்கொண்டான். அந்த உறவு துஷ்ப்ரயோகமும் சுரண்டலுமாக மாறி, கடைசியில் என்னை பாலியல் தொழிலில் வேலை செய்யும்படி கொண்டுபோய்விட்டது. தேவையின்நிமித்தமாக, என் ஆண்நண்பனே என்னுடைய தொழில் கூட்டாளியானான் இவ்வாறு என் வாழ்க்கை கட்டுப்பாடின்றி சுழன்றுகொண்டிருந்தது. 


இயேசுவின் நுழைவு


நான் அவரில், கிருபை, குணமாக்குதல் மற்றும் விடுதலைக்கான பாதையையும் தெரிந்துகொண்டேன். மீண்டும் கனவு காண துவங்கினேன். ஒரு நாள் நான் வெள்ளைநிற வேலியும், குழந்தைகளின் விளையாட்டுப்பொருட்கள் சிதறிக்கிடக்கும் பச்சைப் புல்வெளியும் கொண்ட, ஒரு வீட்டை உடையவளாக இருப்பேன் என்று கனவுகொண்டேன். எல்லோருக்கும் ஒரே கடைப்பெயருடையவாறு பழுதில்லாத என் குடும்பத்தைக்குறித்து கனவுகொண்டேன். என் கனவு - நான் என் குழந்தைப்பருவத்தில் என்றும் அனுபவித்திடாத பாதுகாப்பையும் நிலைத்தன்மையையும் குறித்ததாக இருந்தது.


ஞாயிற்றுக்கிழமைகளில் தேவாலயத்திற்கு சென்று, சரியான புத்தகங்களைப் படித்து, சரியான காரியங்களை செய்துவந்தால் என்னுடைய எல்லாக் கனவுகளும் நினைவாகும் என்றும் வாழ்க்கையின் போராட்டங்களில் எனக்கு இயேசுவின்-தடைக்காப்பு இருக்கும் என்றும் நான் தவறாக நம்பிக்கொண்டிருந்தேன். 


சில வருடங்களுக்குள்ளேயே, என் திட்டங்களுக்கு ஏற்றவாறு எல்லாம் நடந்துகொண்டிருந்தது. நான் மணவாழ்வில் அழகான குழந்தையுடன், முற்றம் கொண்ட ஒரு வீட்டிலும் வாழ்ந்துவந்தேன். நான் என்னிடமே பொறாமைகொள்ளும் அளவிற்கு வாழ்க்கை மிக நன்றாக இருந்தது! 


என் கணவர் வேறு சில உறவோடு இருப்பதையும், முடிவாக எங்கள் மணவாழ்வின் மறுசீரமைப்பில் துளியும் அவருக்கு ஈடுபாடு இல்லாததையும் நான் அறிந்தபோது, என் வாழ்க்கையில் நான் கொண்டிருந்த எல்லா நம்பிக்கையும் சுக்குநூறாகிப் போனதுபோல் உணர்ந்தேன். நான் கனவுகண்ட வாழ்க்கை வீழ்ந்துகொண்டிருந்தது. 


"ஹார்லெம்", எனும் அவருடைய கவிதையில், லாங்ஸ்டன் ஹுக்ஸ் எனும் அமெரிக்க கவிஞர் ஒரு கேள்வியெழுப்புகிறார், “ஒத்திவைக்கப்பட்ட கனவிற்கு என்ன நேரிடும்?”  


 “Does it dry up


      like a raisin in the sun?


      Or fester like a sore—


      And then run?”


(தமிழாக்கம்:

“சூரியனில் விழுந்த திராட்சைப்பழம் போல்


கருகிக்காய்ந்து போகுமா?


ரணத்தைப்போல குணமாகி


பின் எழுந்து ஓடுமா?”

)

நம்முடைய கனவுகள் ஒத்திவைக்கப்படும்போதோ, எட்டாதூரத்தில் உள்ளபோதோ, அல்லது நொறுங்கிப்போனாலும் கூட அவற்றுக்கு என்ன நேரிடும் என்பது கனவுகாண்பவரை சார்ந்தது என்றே நான் நம்புகிறேன். நாம் எவ்வாறு எதிர்வினையாற்றுகிறோம் என்பதே நாம் தேவ-கனவை நோக்கி உந்தப்படுகிறோமா அல்லது அதை விட்டு தொலைவாகி செல்கிறோமா என்பதை தீர்மானிக்கும்.


என் கணவர் உண்மையை ஒப்புக்கொண்டதன் பின், நான் ஒரு முடிவெடுக்கும் நிலையில் இருந்தேன்…


என் நம்பிக்கையை எதன் மீது வைக்கப் போகிறேன்? வாழ்க்கைக்கான என்னுடைய கனவில் நான் என் நம்பிக்கையை வைக்க போகிறேனா? அல்லது தேவனின் மீது என் நம்பிக்கையை வைக்கப் போகிறேனா?


வேதாகமத்தின் அடிப்படையில், நெடுங்காலமாய்க் கனவுகளில் காத்திருத்தல் இருதயத்தை இளைக்கப்பண்ணும், இயேசுவின் மீதான நம்பிக்கையோ நமக்கு ஆத்தும நங்கூரமாயிருக்கிறது. என்னால் நினைத்தபடியெல்லாம், என் சூழ்நிலைகளை மாற்றியமைக்க முடியவில்லை, ஆனால், என்னால்முடிந்ததோ அவற்றுக்கு எவ்வாறு நான் எதிர்விணைசெய்கிறேன் என்பதே. 


பின்வரும் வினாக்களில் கொஞ்சம் சிந்திக்க நான் உங்களை அழைக்கிறேன்: இன்று உங்கள் நம்பிக்கை எங்கே? உங்களுடைய வாழ்வின் கனவில் உங்கள் நம்பிக்கை இருக்கிறதா? அல்லது உங்கள் நம்பிக்கை கனவுகளைத் தருபவரிடத்தில் இருக்கிறதா? 


நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

Dreams Redeemed

நம்முடைய கனவுகள் எட்டாத தூரத்தில் இருப்பதுபோலவோ அல்லது தகர்க்கப்பட்டது போலவோ தோன்றும்போது நாம் என்ன செய்வோம்? அதிர்ச்சியையும் தூஷணங்களையும் மேற்கொண்டதோடு, விவாகரத்தின் மணமுறிவையும் சந்தித்தவளாக, இந்த கேள்வியை நான் அதிகதி...

More

இத்திட்டத்தை வழங்கியமைக்காக ஹார்மொனி கிரில்லோ (நான் ஒரு பொக்கிஷம்) அவர்களுக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் தகவல் அறிய, http://harmonygrillo.com க்கு செல்லவும்

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்