திட்ட விவரம்

கனவுகள் மீட்கப்பட்டனமாதிரி

Dreams Redeemed

7 ல் 2 நாள்


என்னுடைய முதலாவது அன்னையர் தினம் - பூக்களும் உணர்ச்சிகளின் பெருக்கும் நிறைந்த ஒரு நாளாக இருக்கும் என எண்ணியிருந்தேன். மாறாக, என்னுடைய மணவாழ்வின் முடிவை நோக்கி கொண்டு செல்லும் ஒரு ஒப்புதல் அறிக்கையை நான் கேட்டுக்கொண்டிருந்தேன். அதிர்ச்சியாலும் துக்கத்தாலும், முதல் 24 மணிநேரங்ககுக்கு என்னுடைய குழந்தை மகளை சரியாக சீராட்ட முடியாத நிலையில் நான் இருந்தேன். என் நெருங்கிய நண்பர்கள் மிகவும் கரிசனையுடையவர்களாய் அந்த இரவு அவளை எடுத்துச்சென்று பார்த்துக்கொண்டனர். 


மறுநாள் அவளை அழைத்துவர நான் அங்கே சென்றபோது, அவர்களுடைய வாழ்வரையின் தரைக்கம்பளத்தில் நான் கண்ணீரின் குட்டையில் அமர்ந்து, "நான் அவனுடைய மணப்பெண்ணாக இருந்தேன். நாங்கள் உறுதிமொழிகளை எடுத்தோம். குழந்தைகளை ஒன்றாக வளர்த்து பின் பேரக்குழந்தைகளை ஒன்றாக பெறுவதாக எண்ணினோம். எங்கள் குடும்பங்களில் இருந்த விவாகரத்தின் தொடர்ச்சியான நிலையை நாங்கள் முறியடிக்க இருந்தோம். நாங்கள் எண்ணியபடி ஒன்றாக வயோதிபமடைவதாக குறிக்கோளுடன் இருந்தோம்.” என்று புலம்பினேன். 


அவள் கவனித்ததை கருத்தாக சொல்லும் முன் அவள் மிக கரிசனையோடு நான் சொல்வதை கவனித்துக் கொண்டிருந்தாள். அவள் "ஹார்மொனி, உன் வாழ்க்கை பார்ப்பதற்கு எவ்வாறு இருக்கவேண்டும் என்று நீ ஒரு ஓவியத்தை மனதில் வரைந்துள்ளாய் என்று தோன்றுகிறது. கேட்பதற்கு இது கடினம்தான் என்று நானும் அறிவேன், ஆனால் வரையப்படும் காகிதத்தை ஆண்டவரிடம் ஒப்புவித்து அவர் அதில் புதிய ஒன்றை ஓவியமாக தீட்ட நம்பிக்கை கொள்ள இது தக்க நேரமாக இருக்கலாம்" என்று கூறினாள்.”.


அவள் சரியாகத்தான் கூறினாள். எனக்குமுன் தெரிந்த வாழ்க்கையோடு சேர்த்து, நான் மனதில் இவ்வாறு இருக்கும் என்று எண்ணிக்கொண்டிருந்த வாழ்க்கைக்கும் துக்கித்துக் கொண்டிருந்தேன். துக்கத்தின் மேல் துக்கமாக. நம்மில் பலரும் நம்முடைய வாழ்வு எவ்வாறு இருக்கும் என்பதை கற்பனை செய்வதில் நேரம் செலவழித்துள்ளோம். நாம் எண்ணத்தில் உள்ள வரைகாகிதத்தில் நம்முடைய கல்யாணங்கள், குழந்தைகள், பணிகள், நட்புகள், மேலும் சில சமயங்களில் அனைத்திற்கும் உரிய சரியான காலங்களையும் கற்பனை செய்கிறோம். 


தொலைநோக்கு சிந்தனை நல்லதுதான், அனால் நம்முடைய கனவுகளும் எதிர்பார்ப்புகளும் வாழ்க்கையின் ஏமாற்றங்களால் உடையும்போது என்ன நேரிடும்? அன்புக்குரியவரின் மரணத்தால், மணவாழ்வின் முறிவால், அல்லது வேலையிழப்பால்? நாம் எவ்வாறு எதிர்வினையாற்றுவோம்? நாம் தேவனின் மேல் கோபம் கொண்டு கசப்பான எதிர்வினையோடு நடந்துகொள்வோமா? நம்பிக்கை வைப்பதின்பொருட்டு மிகவும் காயமடைவதால், இனியும் கனவு காண்பதில்லை என்று நாம் சபதம் ஏற்போமா? அல்லது, நாம் நம் கரங்களை திறந்து நம்முடைய வாழ்க்கையின் வரைகாகிதத்தை அவரிடம் ஒப்படைக்க நினைக்கிறோமா.


நானும் என் வாழ்க்கை எவ்வாறு இருக்கும் என்பதை வரைந்திருந்தேன், ஆனால் என்னுடைய ஓவியம் தேவன் எனக்காக வரையும் முடிவான ஓவியத்துடன் ஒத்ததாக இல்லாமல் போகலாம் என்பதை நான் கண்டறிந்தேன்.


கற்பனைவாழ்வில் இருப்பது விக்கிரக வாழிபாடாக இருக்கலாம். நம்முடைய சிந்தனையால் செதுக்கப்பட்ட ஒரு காட்சியின் மீது நமது நம்பிக்கையை வைப்பதால் இது நிகழ்கிறது. காரணம் நாம் கண்டு கட்டுப்படுத்தக்கூடிய ஒன்றின்மீது நமது நம்பிக்கையை வைப்பது, நாம் காணவியலாத கட்டுப்படுத்தமுடியாத கடவுளின் மீது நம்பிக்கை வைப்பதை விட மிகவும் சுலபமாக இருக்கலாம்.


மெய்யான உறவும் நெருக்கமும் அச்சுறுத்தலாக இருக்கலாம். குணமாகுதல் அச்சுறுத்தலாக இருக்கலாம். இவற்றுக்கு நாம் ஆண்டவருடன் தெரியாத பாதைகளில் நினைத்திராத வகையில் நடக்கக்கூடிய நம்பிக்கையும் தைரியமும் தேவை. ஆனால் ஆண்டவராகிய, நம்முடைய தேவன், இந்த பயணத்தில் நம்மையும் கூட்டிச் செல்ல நினைக்கிறார். அவர் நம்முடைய கரடுமுரடான இடங்களை மென்மையாக்கி, ஒளியற்ற இடங்களில் ஒளியைக் கொண்டுவருவார்.


கர்த்தரின் ஒளிவெள்ளம் நம்முடைய இருதயத்தை ஊடுருவ அனுமதிப்போமானால், நம்முடைய வலியின் உண்மையான ஆதாரத்தை அவரால் வெளிப்படுத்த முடியும், அதனால் குணமாகுதலும் நடக்கும். அதன்பிறகே நம்மால் நம்மை கற்பனை வாழ்விற்குள் தப்பித்து அடைக்கலம் கொள்ள உந்தியது என்னவென்பதை தெளிவாக பார்க்கமுடியும். அதன்பிறகே நல்ல தேவன், நாம் கேட்பதற்கும், நினைப்பதற்கும், கற்பனை செய்வதற்கும் மேலாகவும் பூரணமாகவும் நமக்கு செய்வார் என்பதை உணர்ந்து நம்முடைய வரைகாகிதத்தை அவரிடம் முழுமையாக ஒப்புவிக்கமுடியும்!


வேதவசனங்கள்

நாள் 1நாள் 3

இந்த திட்டத்தைப் பற்றி

Dreams Redeemed

நம்முடைய கனவுகள் எட்டாத தூரத்தில் இருப்பதுபோலவோ அல்லது தகர்க்கப்பட்டது போலவோ தோன்றும்போது நாம் என்ன செய்வோம்? அதிர்ச்சியையும் தூஷணங்களையும் மேற்கொண்டதோடு, விவாகரத்தின் மணமுறிவையும் சந்தித்தவளாக, இந்த கேள்வியை நான் அதிகதி...

More

இத்திட்டத்தை வழங்கியமைக்காக ஹார்மொனி கிரில்லோ (நான் ஒரு பொக்கிஷம்) அவர்களுக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் தகவல் அறிய, http://harmonygrillo.com க்கு செல்லவும்

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்