திட்ட விவரம்

இயேசுவின் வழியில் ஜெபிக்கக் கற்றுக் கொள்ளுதல்மாதிரி

இயேசுவின் வழியில் ஜெபிக்கக் கற்றுக் கொள்ளுதல்

5 ல் 5 நாள்

நீங்கள் ஜெபிக்க ஆயத்தமாக இருக்கிறீர்களா?


இந்த மூன்று வகையான ஜெபங்களையும் நடைமுறையில் பார்ப்பதற்கான சிறந்த வழியானது, இயேசுவே செய்த சில ஜெபங்களைப் பார்ப்பது தான். சிலுவைக்குப் போவதற்கு முன் கெத்சமனே தோட்டத்தில் அவர் ஜெபித்தார். சிலுவையில் தொங்கும் போது ஜெபித்தார். கெசமனேயில் அவர் தனது பெரும் துக்கத்தை வெளிப்படுத்தினார், ஆனாலும் கர்த்தரின் சித்தமே நடக்கட்டும் என்ற நெம்புகோல் ஜெபத்தைச் செய்தார். இதுவே அவரது விடாப்பிடியான ஜெபமாகவும் இருந்தது. ஏனென்றால் அவர் அதே வார்த்தைகளைச் சொல்லி மூன்று தடவைகள் ஜெபித்தார். இயேசு சிலுவையில் தொங்கி மரித்துக் கொண்டிருந்த நேரத்தில், அவர் தீர்க்கதரிசன ஜெபத்தை சத்தமாகச் செய்தார். அவரைச் சுற்றி இருந்தவர்களுக்குக் கேட்க வேண்டும் அவர்களுக்கு பயன் தரவேண்டுமென்றே அப்படிச் செய்தார்.  முழு உலகத்தின் பாவங்களைத் தன் மீது ஏற்றுக் கொண்டதால், பாவிகளுடன் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டதால், அவர் தன் பரம பிதாவுடனான தொடர்பை இழந்தார்.  அது சிறுபிள்ளைத்தனமானதாகவோ, சுய பரிதாபமானதாகவோ, முறுமுறுப்பதாகவோ இல்லை. நோக்கத்தை அறிக்கை செய்யும் வல்லமையானதாக இருந்தது. 


நீங்கள் ஜெபிப்பதற்கு எவ்வளவு ஆயத்தமாக இருக்கிறீர்கள்? 


கர்த்தரைப் பற்றி இன்னும் அதிகமாக அறிந்து கொள்ள, அவருடன் நட்புடன் இருக்க நீங்கள் எந்த அளவுக்கு ஆயத்தமாக இருக்கிறீர்கள்?


நீங்கள் எல்லாவற்றுக்காகவும் ஜெபிப்பீர்களா? எல்லாவற்றையும் அவர் சித்தத்தின்படி ஜெபிப்பீர்களா? 


நீங்கள் ஜெபத்தில் விடாப்பிடியாக இருப்பீர்களா, நெம்புகோல் ஜெபத்தையும், தீர்க்கதரிசன ஜெபங்களையும் செய்வீர்களா?


இந்த வேதாகமத் திட்டத்தை நீங்கள் வாசிக்கும் போது / கேட்கும் போது, விடாப்பிடியாக, நெம்புகோல் தத்துவத்தில், தீர்க்கதரிசனமாக ஜெபிப்பதற்கான ஒரு எளிய வழி இருக்கிறது. இந்த வேதாகம செயலியில் இருக்கும் ஜெபம் என்னும் முறையை பயன்படுத்துங்கள். 


1. நீங்கள் ஜெபிக்கின்றதற்கான பதிலின் துவக்கம் காணப்படும் வரைக்கும் விடாப்பிடியாக ஜெபிப்பதற்கான நினைவுக் குறிப்புகளை உருவாக்குங்கள். இது எல்லாக் காலத்திலும் எல்லா நேரத்திலும் ஜெபிக்கும் பழக்கத்தை உங்களுக்குள் உருவாக்கும். ⏰


2. தனியாக ஜெபிப்பதற்கு நீங்கள் போராடிக் கொண்டிருப்பீர்கள் என்றால் நம்பிக்கைக்குரிய ஒரு நண்பரை அல்லது குடும்பத்து உறுப்பினரை சேர்த்துக் கொண்டு நெம்புகோல் ஜெபத்தை செய்யுங்கள். பிறருடன் ஜெபிக்கும் போது ஒருவரை ஒருவர் நீங்கள் பலப்படுத்துவதுடன் அதிக பதில்களையும் சுதந்தரித்துக் கொள்ள முடியும். 👥


3. தினமும் உங்களுக்கு ஊழியம் செய்யும் வேத வார்த்தைகளை குறித்துக் கொண்டு அவற்றை ஜெபமாக்குங்கள். ஜெபிப்பதற்கான ஒரு சிறந்த வழியானது, வேத வசனங்களையே சுதந்தரித்து, அவற்றை உங்கள் சூழ்நிலையின் மீது அறிக்கையிடுவது ஆகும். 📝



நாள் 4

இந்த திட்டத்தைப் பற்றி

இயேசுவின் வழியில் ஜெபிக்கக் கற்றுக் கொள்ளுதல்

நமது கிறிஸ்தவ வாழ்வில் ஜெபம் என்பது அடிக்கடி கண்டு கொள்ளப்படாமல் போய்விடுகிறது. ஏனென்றால் கர்த்தர் ஏற்கனவே எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருக்கிறார் என்று நினைத்துக் கொள்கிறோம். ஆகவே அவரிடம் நாம் பேச வேண்டியதில்லை என்கிற...

More

இந்த திட்டத்தை வழங்கியதற்காக நாங்கள் ஆர் சீயோனுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.wearezion.co/bible-plan

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்