திட்ட விவரம்

இயேசுவின் வழியில் ஜெபிக்கக் கற்றுக் கொள்ளுதல்மாதிரி

இயேசுவின் வழியில் ஜெபிக்கக் கற்றுக் கொள்ளுதல்

5 ல் 3 நாள்

விடாப்பிடியாக ஜெபிக்கக் கற்றுக் கொள்ளுதல்


விடாப்பிடியான ஜெபம் என்பது ஒரு போதும் விட்டுவிடாமல் இருக்கும் மனப்பான்மையுடன் ஜெபிப்பது ஆகும். நம்பிக்கையே இல்லை என்னும் சூழலிலும் கூட நெருக்கி ஜெபிப்பது ஆகும். அல்லது எதுவும் மாறவே இல்லை என்று தோன்றுகிற சூழலிலும் கூட விடாமல் ஜெபிப்பது ஆகும். இது ஒரு தீர்மானத்துடனும், சொன்னவற்றையே சொல்லி கர்த்தரிடன் இது வேண்டும் என்று சொல்லி ஜெபிப்பதாகவும் இருக்கலாம். இப்படிப்பட்ட ஜெபங்களுக்கு அடிப்படையாக இருப்பது, நமக்கு ஒரு பரிபூரணமான பரம தகப்பன் இருக்கிறார் என்பதும் அவர் தன் பிள்ளைகளுக்கு நன்மையான ஈவுகளைக் கொடுப்பார் என்பதும் தான். 


ஜெபம் என்னும் தொடர் நிகழ்வைத் தூண்டி, உந்தித் தள்ளி விடுவது விடாப்பிடியான குணமாகும். ஏற்கனவே கர்த்தருக்கு நம் தேவைகளும் ஆசைகளும் தெரியும் என்பதால் விடாப்பிடியான குணம் தேவையா என்று நீங்கள் நினைக்கலாம்.  நாம் ஏன் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும்? லூக்கா 11 ஆம் அதிகாரத்தில் இயேசு தன் சீடர்களுக்கு தாங்கள் ஜெபித்தவற்றைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றால் கேட்கவும், தேடவும், தட்டவும் சொல்கிறார். இந்த மூன்று வினைச் சொற்களுக்குமான எபிரேய சொற்கள் நிகழ் காலத் தொடர் நிகழ்வாக கொடுக்கப்பட்டிருக்கின்றன. அதாவது அவர்கள் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும், தேடிக் கொண்டே இருக்க வேண்டும், தட்டிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதுவே அதன் பொருளாகும். விடாப்பிடியாக ஜெபிக்க வேண்டும் என்பதை விளக்க இயேசு இரு உவமைகளைச் சொன்னார். இது ஒரு முக்கியமான ஆன்மீக ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்பதைத் தான் இது குறிக்கிறது.


இப்படிப்பட்ட ஜெபங்களுக்குத் தடையாக இருப்பது, நமக்கு எல்லாமே உடனடியாகக் கிடைக்க வேண்டும் என்று இருக்கும் ஆசை தான். ஆம் அல்லது இல்லை எதுவாக இருந்தாலும் உடனடிப் பதிலாக இருக்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். தாமதம் ஆவதையும் குழப்பத்தையும் நாம் வெறுக்கிறோம். இன்ஸ்டன்ட் காஃபி, உடனடி உணவுப் பொருட்கள் போல, நாம் ஜெபித்த நாளிலேயே நமக்கு பதில்கள் வேண்டும் என்று விரும்புகிறோம்.


நாம் சந்திக்க வேண்டிய உண்மை என்னவென்றால், சில ஜெபங்களுக்கு பதில் கிடைக்க மாதக்கணக்கிலோ, வருடக்கணக்கிலோ ஆகலாம். 


விடாப்பிடியான ஜெபங்கள் மற்றவர்களையோ, சூழ்நிலைகளையோ மாற்றாமல் இருக்கலாம். ஆனால் அது ஜெபிக்கின்ற நம்மை மாற்றுகின்றது. அவை நம் இதயத்தை, நம் நிலையை, நம் மனநிலைகளை மாற்றி இயேசுவில் மட்டுமே காணப்படக் கூடிய நம்பிக்கையை உறுதிப்படுத்துகின்றன.



நாள் 2நாள் 4

இந்த திட்டத்தைப் பற்றி

இயேசுவின் வழியில் ஜெபிக்கக் கற்றுக் கொள்ளுதல்

நமது கிறிஸ்தவ வாழ்வில் ஜெபம் என்பது அடிக்கடி கண்டு கொள்ளப்படாமல் போய்விடுகிறது. ஏனென்றால் கர்த்தர் ஏற்கனவே எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருக்கிறார் என்று நினைத்துக் கொள்கிறோம். ஆகவே அவரிடம் நாம் பேச வேண்டியதில்லை என்கிற...

More

இந்த திட்டத்தை வழங்கியதற்காக நாங்கள் ஆர் சீயோனுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.wearezion.co/bible-plan

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்