திட்ட விவரம்

இயேசுவின் வழியில் ஜெபிக்கக் கற்றுக் கொள்ளுதல்மாதிரி

இயேசுவின் வழியில் ஜெபிக்கக் கற்றுக் கொள்ளுதல்

5 ல் 1 நாள்

நாம் ஏன் ஜெபிக்க வேண்டும்?


மனிதனாக வந்த இயேசுவே ஜெபிக்க வேண்டியதாக இருந்தது. அவர் ஜெபிப்பதற்காக தனியே சென்றார். மக்களுக்கு உணவளிக்கும் போதும், அவர்களுக்கு சுகமளிக்கும் போதும் இயேசு ஜெபித்தார். அவர் அவமானப்படுத்தப்பட்ட போதும், மரித்துப் போவதற்காக தனிமைப்படுத்தப்பட்ட போது ஜெபித்தார்.  இயேசு இந்த உலகத்தில் செய்த ஊழியத்தின் இரகசியம் ஜெபம் தான். அவர் ஜெபிப்பதற்கான மாதிரியாக இருந்தது மட்டுமல்ல, நாம் எப்படி ஜெபிக்க வேண்டும் என்று கற்றுக் கொடுக்கவும் செய்தார்.


ஜெபம் என்பது ஒரு கலை அல்ல, அது ஒரு வாழ்க்கை முறை. அது தகவல் தொடர்பும், கர்த்தரை அறியவும் அவர் பேச்சைக் கேட்க வேண்டும் என்றும் இருக்கின்ற ஒரு ஆசையில் ஊறிப்போன ஒன்றாகும். நாம் ஏற்கனவே ஜெபித்துக் கொண்டிருப்பவர்களாக இருக்கலாம். அல்லது ஜெபிப்பது எப்படி என்று புரிந்து கொள்ள முயற்சிப்பவராக இருக்கலாம். உங்கள் பின்னணி எதுவாக இருந்தாலும், உங்கள் அனுபவங்கள் எப்படிப்பட்டவைகளாக இருந்தாலும், ஜெபம் என்பது நமது கிறிஸ்தவ வாழ்வில் பின்னிப்பிணைந்ததாக இருக்க வேண்டும். 


ஜெபம் என்பது தகவல் தொடர்பு என்றால், அது ஒரு வழித் தகவல் தொடர்பு மட்டும் அல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இது உங்களை உருவாக்கியவருக்கும் உங்களுக்கும் இடையில் நடக்கின்ற உரையாடல். இது மிகவும் நெருக்கமானதாகவும், உங்களுக்கு மட்டுமே உள்ள தனிப்பட்ட அனுபவமுமாகும். ஜெபத்தில் இரு பக்கங்களில் இருப்பவர்களும் பேசவும், கேட்கவும் வாய்ப்பு இருக்கின்றது. அறியாததும் எட்டாததுமான  பெரிய காரியங்களை நமக்குச் சொல்லும் வகையில் கர்த்தரிடம் கேட்க வேண்டும் என்று எரேமியா தீர்க்கதரிசி நம்மை வலியுறுத்துகிறார். உலகத்தைப் படைத்த, சர்வ வல்லமையும் உள்ள அரசன் நம்முடன் தனிப்பட்ட வகையில் உரையாட விரும்புகிறார் என்பது மாபெரும் பாக்கியமும் மதிப்பும் அல்லவா? 


நாம் கர்த்தரிடம் எதையும் கேட்கலாம் என்பதுவும் மிகவும் முக்கியமானது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஆனால் இதற்கு அவர் எல்லாவற்றையும் கொடுத்துவிடுவார் என்று பொருள் அல்ல. அதாவது கர்த்தரின் பார்வையில் எந்த ஒரு ஜெபமும் மிகச் சிறியதாகவோ, அல்லது மிகவும் பெரியதாகவோ இருக்காது. அனைத்து ஜெபங்களும் கர்த்தரிடம் ஏறெடுக்கப்படாமல் இருப்பது தான் உலகத்திலேயே மிகவும் சோகமானதாகும் என்று ஒருவர் கூறியிருக்கிறார். தன் பெயரில் எதையும் கேட்கலாம் என்று இயேசுவே தன் சீடர்களிடம் சொல்லியிருக்கிறார்.


நாம் செய்கின்ற ஒவ்வொரு ஜெபமும் நமது நித்தியமான கர்த்தருக்கு நறுமணமானதாக இருக்கும். ஆகவே உங்கள் ஜெபங்களை செய்யாமல் விட்டுவிடாதீர்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள மிகப் பெரியவற்றில் இருந்து மிகச் சிறியவை வரைக்கும் ஜெபியுங்கள். ஜெபம் என்பது நம் வாழ்வின் ஒவ்வொரு நாளின் ஒவ்வொரு நொடியிலும் கர்த்தரை இணைத்துக் கொள்வதாகும். 



நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

இயேசுவின் வழியில் ஜெபிக்கக் கற்றுக் கொள்ளுதல்

நமது கிறிஸ்தவ வாழ்வில் ஜெபம் என்பது அடிக்கடி கண்டு கொள்ளப்படாமல் போய்விடுகிறது. ஏனென்றால் கர்த்தர் ஏற்கனவே எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருக்கிறார் என்று நினைத்துக் கொள்கிறோம். ஆகவே அவரிடம் நாம் பேச வேண்டியதில்லை என்கிற...

More

இந்த திட்டத்தை வழங்கியதற்காக நாங்கள் ஆர் சீயோனுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.wearezion.co/bible-plan

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்