திட்ட விவரம்

பெருந்தோற்று காலங்களில் நம்பிக்கை மாதிரி

Hope During A Global Pandemic

5 ல் 4 நாள்

இந்த இக்கட்டான நேரங்களில் தேவனை நாம் எதிர்கொள்வது எப்படி?



ஒரு நல்ல மேய்ப்பராக தேவன் நம்மை அவருடைய சொந்த மந்தைகளை போல நேசித்து நடத்தி வருகிறார். நமக்கு இன்னது தேவை, இன்ன நேரத்தில் தேவை என்பதை அவர் முற்றும் அறிந்தவராக இருக்கிறார். நாம் எங்கு செல்ல வேண்டுமென்பதையும் அவர் அறிந்திருக்கிறார். ஆபத்து நம்மை சுற்றிலும் இருக்கும்போதும் நம்மை காப்பாற்ற அவர் வருகிறார். அவருடைய மந்தைகளாக நம்முடைய செயல்பாடு என்ன? அவரை விட்டு ஓடி செல்கிறோமா? அல்லது அவருடைய அரவணைப்பிர்க்குள்ளாக ஓடி செல்கிறோமா?



இப்படிப்பட்ட கடினமான சூழ்நிலைகளிலும் நாம் தயக்கமின்றி அவரை நம்பலாம். அவர் சரியானதையே செய்வார். நம்முடைய மரணத்திலும், ஜீவனிலும் அவர் நம்பத்தகுந்தவரே.



நம்மை பாதுகாத்துகொள்ளும் எண்ணத்தில், ஒருவேளை இந்த உலகத்தில் நம்முடைய சுகவாழ்வே பிரதான தேவையாக நமக்கு ஒருவேளை தோன்றலாம். ஆனால் அதை காட்டிலும் முக்கியமானவைகள் இருக்கிறதென்பதை இந்த சங்கீதம் நமக்கு கற்றுக்கொடுக்கிறது. மெய்யான ஆசீர்வதங்களான உன்னத காரியங்களை நாம் பின்தொடர்ந்து, இயற்கைக்கு அப்பாற்பட்ட மகிழ்ச்சியை நாம் சுதந்தரிக்க தேவன் நமக்கு உதவி செய்வராக.



இந்த உலக வாழ்கையில் நமக்கு பிரச்சனைகளும் உபத்திரவங்களும் உண்டு. பிரச்சனைகளை எப்படி எதிர்கொள்வது என்ற வழிமுறையை நீங்கள் அறிந்திருந்தீர்களானால், அவைகளை கண்டு நீங்கள் பயப்படதேவையில்லை. ஆனால், அவைகளை சரியாக எதிர்கொள்வதை குறித்த அறிவு உங்களுக்கு இல்லாத பட்சத்தில் உங்கள் பிரச்சனைகளில் நீங்க துவண்டுபோக நேரிடும். நம்முடைய உபத்திரவங்களை நாம் எவ்வாறு எதிர்கொள்ளவேண்டும் என்பதை குறித்து தேவன் நமக்கு தெளிவுபடுத்தி இருக்கிறார்.



உங்கள் சிந்தனைக்கு சில கேள்விகள்:



  1. இவைகள் தேவனை குறித்து நமக்கு கற்றுகொடுப்பது என்ன?

  2. இவைகள் நம்மை குறித்தும் மற்ற மனிதர்களை குறித்தும் நமக்கு கற்றுகொடுப்பது என்ன?

  3. கொரோனா நோயை நாம் எதிர்கொள்வதை குறித்த காரியத்தை நன்கு புரிந்துகொள்ள இவைகள் எந்த வகையில் உதவி செய்கிறது?

  4. இன்று நீங்க கற்றுக்கொண்ட காரியங்களுக்கு நீங்கள் எந்த வகையில் உங்களை ஒப்புகொடுத்து கீழ்படிய விரும்புகிறீர்கள்?

  5. இந்த வசனங்களை எவர்களிடம் பகிர்ந்துகொள்ள நீங்கள் விரும்புகிறீர்கள்?

நாள் 3நாள் 5

இந்த திட்டத்தைப் பற்றி

Hope During A Global Pandemic

சமீபகாலமாக இதுவரை உலகம் பார்த்திராத ஒரு சூழ்நிலையில் இன்று நாம் கடந்து போய்கொண்டிருக்கிறோம். சர்வத்தையும் படைத்து ஆளுகிற ராஜாதி ராஜாவை அண்டிகொண்டால் பிழைத்துகொள்வோம் என்பதை சரித்திரமும் ஒத்துகொள்ளும். இப்படிப்பட்ட காரியங...

More

இந்த திட்டத்தை வழங்கிய ஜுமே அவர்களுக்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் அறிந்துகொள்ள https://zume.training/ என்ற இணையதள பக்கத்திற்கு செல்லவும்

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்