திட்ட விவரம்

பெருந்தோற்று காலங்களில் நம்பிக்கை மாதிரி

Hope During A Global Pandemic

5 ல் 2 நாள்

இந்த பாதிக்கப்பட்ட உலகத்திற்கு தேவனின் தீர்வு என்ன?



இந்த உலகம் பாவத்தினால் பாதிக்கபட்டிருந்தாலும், மக்கள் அனைவரும் பாவத்தின் விளைவினால் பாதிக்கப்பட்டிருந்தாலும், தம்மை நோக்கி பார்க்கிற தமது பிள்ளைகள் யாவருக்கும் மீட்பையும், நம்பிக்கையையும், நற்செய்தியையும் அளிக்க வல்லவராக இருக்கிறார்.



பாவத்தினால் மனிதகுலத்திற்கு நேரிடும் இத்தகைய பேரிடர்களை கண்டு நாம் சோர்ந்துபோக வேண்டியதில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலைகளே, தேவனின் மனிதர்களுக்கு அளித்த மகிமையான, நேர்த்தியான தீர்வாம் இயேசுவை கண்டடைய நம்முடைய கண்களை தெளிவாக்கும்!



பாவத்தின் விளைவு அதாம் துவங்கி அனைவரையும் பாதித்தது. ஆனால், இயேசுவுக்குள்ளாக பாவத்தின் விளைவு முற்றுப்பெற்றது. இயேசுவை விசுவாசிக்கிற அனைவரும் புதிய மனுஷனாக கிறிஸ்துவுக்குள்ளாக மறுபடியும் பிறக்கின்றனர். பாவத்தின் விளைவுகளால் பாதிக்கப்படக்கூடிய அந்த பழைய வாழ்வை இயேசு தமது சிலுவை மரணத்தினால் அழித்து, பாவத்தின் விளைவுகளால் பாதிக்கப்பட கூடாத புதிய மனிதனாக உங்களை மாற்றுகிறார்!



பாவத்தில் இருந்து நமக்கு கிடைத்த இந்த இரட்சிப்பு, பாவத்தின் விளைவுகளிடமிருந்து நமக்கு கிடைத்த இந்த விடுதலை அனைத்தும் நமக்கு இயேசுவின் தியாகத்தினால் வந்தது. பாவத்திற்காக தண்டிக்கப்படவேண்டிய நம்முடைய இடத்தை இயேசு எற்றுக்கொண்டபடியினால், இந்த இரட்சிப்பையும், விடுதலையையும் நாம் பெற்று அனுபவிக்கிறோம். இயேசுவினுடைய இந்த சிலுவை மரணமும், அதனால் நமக்கு கிடைக்கும் இரட்சிப்பும் நூற்றுகணக்கான வருடங்களுக்கு முன்பிலிருந்தே முன்னறிவிக்கப்பட்டது. 



நம்முடைய உடைக்கப்பட்ட சூழ்நிலைகளிலும் நம் மீது தேவன் கிருபையும், இரக்கமும் மனஉருக்கமும் கொண்டிருக்கிறார். நாம் உடைக்கப்பட்டிருப்பது தேவனுடைய கிருபையை இரக்கத்தை பெறுவதற்காகவே. தேவனால் நாம் தண்டிக்கப்பட்டிருகிறோம், அல்லது ஒதுக்கபட்டிருக்கிறோம் என்ற எண்ணம் ஒருநாளும் நமக்கு வந்துவிட கூடாது. மாறாக, கிருபையின் விரித்த கரங்களோடு காத்துகொண்டிருக்கும் தகப்பனிடம் ஓடி வந்து தஞ்சமடையவேண்டும்.



இந்த உலகமே தேவன் முதன்முதலில் படைத்த அந்த ஆதிநிலைக்கு திரும்பவேண்டுமென்று ஆவலோடு காத்துகொண்டிருக்கிறது. அந்த நாட்கள் வெகுதொலைவில் இல்லை. இந்த பாதிக்கப்பட்ட உலகத்திற்கு தேவன் தீர்வாக சகலதையும் புதிதாக்குகிறார். அவர் செயல்களிலே வல்லவர், அவர் குறித்த நேரத்தில் தமது செயலை இந்த பூமியில் பூரணப்படுத்துவார்!



உங்கள் சிந்தனைக்கு சில கேள்விகள்:



  1. இவைகள் தேவனை குறித்து நமக்கு கற்றுகொடுப்பது என்ன?

  2. இவைகள் நம்மை குறித்தும் மற்ற மனிதர்களை குறித்தும் நமக்கு கற்றுகொடுப்பது என்ன?

  3. கொரோனா நோயை நாம் எதிர்கொள்வதை குறித்த காரியத்தை நன்கு புரிந்துகொள்ள இவைகள் எந்த வகையில் உதவி செய்கிறது?

  4. இன்று நீங்க கற்றுக்கொண்ட காரியங்களுக்கு நீங்கள் எந்த வகையில் உங்களை ஒப்புகொடுத்து கீழ்படிய விரும்புகிறீர்கள்?

  5. இந்த வசனங்களை எவர்களிடம் பகிர்ந்துகொள்ள நீங்கள் விரும்புகிறீர்கள்?

நாள் 1நாள் 3

இந்த திட்டத்தைப் பற்றி

Hope During A Global Pandemic

சமீபகாலமாக இதுவரை உலகம் பார்த்திராத ஒரு சூழ்நிலையில் இன்று நாம் கடந்து போய்கொண்டிருக்கிறோம். சர்வத்தையும் படைத்து ஆளுகிற ராஜாதி ராஜாவை அண்டிகொண்டால் பிழைத்துகொள்வோம் என்பதை சரித்திரமும் ஒத்துகொள்ளும். இப்படிப்பட்ட காரியங...

More

இந்த திட்டத்தை வழங்கிய ஜுமே அவர்களுக்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் அறிந்துகொள்ள https://zume.training/ என்ற இணையதள பக்கத்திற்கு செல்லவும்

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்