திட்ட விவரம்

பெருந்தோற்று காலங்களில் நம்பிக்கை மாதிரி

Hope During A Global Pandemic

5 ல் 1 நாள்

இவைகள் ஏன் சம்பவிக்கின்றன?


ஆதியாகமம் முதல் அதிகாரத்தில் நாம் வாசிக்கும் அந்த மகிமையான வாழ்வே தேவன் நமக்காக படைத்த உலகம். நாம் இப்போது காண்கின்ற பாவ உலகமும் ஒருநாள் மறுபடியும் தேவன் ஆதியில் படைத்த உலகம் போலவே மாற இருக்கிறது என்பதையும் வெளிபடுத்தல் 22ஆம் அதிகாரத்தில் வாசிக்கிறோம். ஆனால் இதற்கு இடைப்பட்ட நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த உலகத்திற்கு நேரிட்டது என்ன? ஏன் இத்தனை பாவங்கள், பாடுகள், வியாதிகள், யுத்தங்கள்? இவைகள் அனைத்திற்கும் பதில் ஆதியாகமம் 3:1-24ல் நம்மால் வாசிக்க முடியும்.



ஆதியாகமம் 3:1-24ன் விளைவு அதாம் ஏவாளை மாத்திரம் பாதிக்கவில்லை. அவர்கள் மூலமாக அவர்கள் பிள்ளைகள் என்று அந்த சந்ததியில் பெருகியிருக்கும் நம் அனைவரையும் அது பாதித்திருக்கிறது. சகல சிருஷ்டிகளும் இந்த பாவத்தின் விளைவிற்கு (சாபத்திற்கு) ஒப்புவிக்கப்பட்டு மீட்புக்காக ஆவலோடு காத்திருக்கிறது என்று ரோமர் 8:18-23ல் வாசிக்கிறோம். பாவத்தின் நிமித்தம் சபிக்கப்பட்டதின் ஒரு விளைவு தான் இந்த உலகத்தில் நாம் சந்திக்கும் பேரிடர்களும் வியாதிகளும்.



நாம் வாழுகிற இந்த காணக்கூடிய உலகத்தை போலவே, காணப்படமுடியாத உலகம் ஒன்று இருக்கிறது. அந்த காணப்படமுடியாத உலகத்தின் நிஜம் என்னவென்றால், ஆவிக்குரிய போராட்டம்! தேவனை மறுதலிக்கிற, வெறுக்கிற சத்துருவான ஆவிகள், தேவனை வேதனைபடுத்துவதற்காக அவர் நேசிக்கும் அவர் பிள்ளைகளான மனிதர்களை பிரச்சனைக்குட்படுத்துவதும் அழிப்பதுமாக இருக்கின்றன. இவைகள் அனைத்தையும் கடந்து, தேவன் சர்வ வல்லமை கொண்டிருக்கிறார்!



தேவனால் படைக்கப்பட்ட இந்த உலகத்தை நாம் கண்டு ஆராயும்போது தேவன் எவ்வளவு வல்லமையும் ஞானமும் உடையவர் என்பதை நாம் உறுதியாக அறிந்துக்கொள்ள முடிகிறது. ஆனால், தேவனை குறித்த இந்த சத்தியத்ததின் வெளிப்பாட்டிற்கு மனிதகுலம் தனது காதுகளை மூடிகொள்ளும்போது இப்படிப்பட்ட பேரழிவுகளை இந்த உலகம் சந்திக்கிறது.



ஒரு ஆறுதலான உண்மை என்னவென்றால், இப்படிப்பட்ட கடினமான சூழ்நிலைகளிலும், தேவன் மனிதர்கள் மத்தியில் தமது வல்லமையை, மகிமையை ஸ்தாபிக்க வல்லவராக இருக்கிறார். அவரால் தீர்வு கொண்டுவரப்படமுடியாத சூழ்நிலை ஒன்றுமில்லை!



உங்கள் சிந்தனைக்கு சில கேள்விகள்:



  1. இவைகள் தேவனை குறித்து நமக்கு கற்றுகொடுப்பது என்ன?

  2. இவைகள் நம்மை குறித்தும் மற்ற மனிதர்களை குறித்தும் நமக்கு கற்றுகொடுப்பது என்ன?

  3. கொரோனா நோயை நாம் எதிர்கொள்வதை குறித்த காரியத்தை நன்கு புரிந்துகொள்ள இவைகள் எந்த வகையில் உதவி செய்கிறது?

  4. இன்று நீங்க கற்றுக்கொண்ட காரியங்களுக்கு நீங்கள் எந்த வகையில் உங்களை ஒப்புகொடுத்து கீழ்படிய விரும்புகிறீர்கள்?

  5. இந்த வசனங்களை எவர்களிடம் பகிர்ந்துகொள்ள நீங்கள் விரும்புகிறீர்கள்?






நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

Hope During A Global Pandemic

சமீபகாலமாக இதுவரை உலகம் பார்த்திராத ஒரு சூழ்நிலையில் இன்று நாம் கடந்து போய்கொண்டிருக்கிறோம். சர்வத்தையும் படைத்து ஆளுகிற ராஜாதி ராஜாவை அண்டிகொண்டால் பிழைத்துகொள்வோம் என்பதை சரித்திரமும் ஒத்துகொள்ளும். இப்படிப்பட்ட காரியங...

More

இந்த திட்டத்தை வழங்கிய ஜுமே அவர்களுக்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் அறிந்துகொள்ள https://zume.training/ என்ற இணையதள பக்கத்திற்கு செல்லவும்

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்