திட்ட விவரம்

வருகை: கிறிஸ்துமஸ் பயணம்மாதிரி

Advent: The Journey to Christmas

25 ல் 9 நாள்


நோக்கத்திற்காக உருவாக்கப்படுதல்


கடைசியாக இது தேவனின் முதலாம் வாக்குத்தத்தம் நிறைவேறுவதற்கான நேரம். பாவம் சீக்கிரத்தில் அளிக்கப்படலாம், ஆனால் முதலில், இரட்சகர் அவருடைய தாயின் கருவில் தோன்ற வேண்டும். மரியாவுக்கு தனது திட்டத்தை வெளிப்படுத்த வானத்திலிருந்து ஒரு தேவதூதரை அனுப்பியதால் தேவன் எவ்வளவு சந்தோஷமாக இருந்திருக்க வேண்டும் என்று உங்களால் கற்பனை செய்ய முடியுமா? இது ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் ஒரு தருணம்!


மரியாளைப் பற்றி சிந்தியுங்கள்: கன்னிகை மற்றும் தாழ்மையானவள், மேலும் தேவனால் விரும்பப்பட்டவள். அவள் இடத்திற்கு தேவ தூதனை அவர் அனுப்பியபோது, அவர் அன்பின் செய்தியுடன் அவனை அனுப்பினார். அவள் தெரிந்தெடுக்கப்பட்டவள் அவள் பயப்படுவதற்கு ஒன்றுமில்லை என்பதை அவர் தெரியப்படுத்தினார். அவளுக்கு சந்தேகம் அல்லது பாதுகாப்பின்மை வரும் முன்பு, தேவன் மரியாள் வாழ்க்கைக்கான தனது நோக்கத்தை வெளிப்படுத்த தேவையான நம்பிக்கையை அளித்தார். 


இந்த கிறிஸ்மஸ் நெருங்கும் நேரத்தில் உங்களை மரியாவின் இடத்தில் வைத்து இந்த தருணத்தை குறித்து யோசித்துப் பாருங்கள். தேவன் கொடுத்த நோக்கத்தின் அவளுக்கு எவ்வளவு நம்பமுடியாதது, எவ்வளவு மிகப்பெரியது என்று யோசித்துப் பாருங்கள். மரியாவுக்கு தெய்வீக நோக்கம் இருந்ததைப் போலவே, தேவன் உங்களுக்காக தெய்வீக நோக்கத்தையும் கொண்டிருக்கிறார் என்பதை உணர வேண்டியது அவசியம். அவர் அவளைத் தேர்ந்தெடுத்து, அவளுக்கு பெரிய திட்டங்களை ஒப்படைத்ததைப் போலவே, அவர் உங்களைத் தேர்ந்தெடுத்து உங்களுக்கு அற்புதமான ஒன்றை ஒப்படைத்துள்ளார்! அவர் உங்களை படைத்த நோக்கத்தை வெளிப்படுத்தும்படி தேவனிடம் கேளுங்கள், அதைச் செய்ய அவர் உங்களைச் பல படுத்துவார் என்று நம்பிக்கையுடன் இருங்கள்.


ஜெபம்: பிதாவே, இயேசுவுக்காக நன்றி. அவரை உலகிற்கு கொண்டு வர மரியாளைப் போன்ற ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி. உன்னுடைய மிகப் பெரிய அதிசயத்திற்காக அவளை ஒரு பாத்திரமாகப் பயன்படுத்தினீர். எனக்கு ஒரு தெய்வீக நோக்கத்தை தந்ததற்காக நன்றி. இந்த பருவத்தில் அமைதியாக இருக்கவும், உங்களைத் தேடவும், மேலும் தெரிந்துகொள்ளவும் எனக்கு உதவுங்கள். கிறிஸ்மஸின் நோக்கத்தில் நான் கவனம் செலுத்துவதால், உங்கள் நோக்கத்தைப் பற்றி மேலும் வெளிப்படுத்த இந்த நேரத்தைப் பயன்படுத்தவும் உதவுங்கள்.


இன்றைய படத்தை பதிவிறக்கம் செய்ய


நாள் 8நாள் 10

இந்த திட்டத்தைப் பற்றி

Advent: The Journey to Christmas

உண்மையிலேயே கிறிஸ்துமஸ் கதையே இதுவரை சொல்லப்பட்டத்தில் மிக சிறந்த கதை: தேவனின் உண்மை, வல்லமை, இரட்சிப்பு, மாறாத அன்பு பற்றியது. உலகத்தை பாவத்திலிருந்து காப்பாற்றுவதற்கான தேவனின் திட்டத்தையும் அவருடைய குமாரின் பிறப்பில் ந...

More

இந்த திட்டத்தை வழங்கியதற்காக Church of Highlands க்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் தகவல் அறிய: https://www.churchofthehighlands.com க்கு செல்லவும்

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்