திட்ட விவரம்

வருகை: கிறிஸ்துமஸ் பயணம்மாதிரி

Advent: The Journey to Christmas

25 ல் 25 நாள்


ஒளி வந்துது


இதோ கிறிஸ்துமஸ் வந்துவிட்டது! உலகத்தின் ஒளி—நமது இரட்சகர் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடும் நேரமிது!


படைப்பின் முதல் நிகழ்வாக ஆதியாகமத்தில், தேவன் கூற ஒளியானது இருளிலிருந்து உடனடியாக பிரிக்கப்பட்டது. ஆனால் அதன்பின் சீக்கிரமாகவே ஆதாமும் ஏவாளும் பாவத்தை தேர்ந்தெடுத்ததால், கடவுளின் பிரசன்னமாகிய, அவரது ஒளி, மாந்தரிடத்திலிருந்து பிரிக்கப்பட்டது. அந்த தருணத்தில், மீட்பின் கதையானது எழுதப்பட வேண்டியிருந்தது: இரவிற்கும் பகலிற்கும் வேண்டி மட்டும் ஒளியானது இருளுக்கு மத்தியில் வீசுவது மாறி, அது வாழ்விற்கும் சாவிற்கும் மத்தியில் வந்தது. தேவனுடைய அதிகப்படியான ஆசையோ நம்மோடு உறவிலிருப்பது, அதனாலேயே அவர் நம்மை இருளிலிருந்து வெளியேற்றி அவரண்டை மீண்டும் அழைத்து செல்லும் ஒளியை அனுப்பினார்.


இதுவே கிறிஸ்துமஸ்: “மெய்யான ஒளியாகிய ஒருவர், எல்லாருக்கும் ஒளிதரும் ஒருவர், இந்த உலகிற்குள் வந்திருக்கிறார்!”


கடவுளின் ஒரேபேரான குமாரன் பாவமன்னிப்பினால், அவரிடம் நாம் சமாதானமாக கிட்டசேருவதற்காக பிறந்துள்ளார். நம்மை இருளிலே வைத்திருந்த அந்த பிரிவானது இயேசுவின் ஒளியினால் மேற்கொள்ளப்பட்டது. இயேசு, “நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான்" என்று கூறுகிறார்.


நீங்கள் இன்று எங்கே இருக்கிறீர்கள் என்பது அவசியமில்லை, என்ன செய்தீர்கள் என்பதும் தேவையில்லை, உலகத்தின் இரட்சகர் வந்திருக்கிறார்! உங்களுக்காக! உங்கள் வாழ்வின் இருளடைந்த எல்லா இடங்களிலும் அவரது ஒளிவீசி இருளில் தொலைந்துபோன எல்லாமும் அதனால் மீண்டு வரட்டும். ஒளி இங்கே இருக்கிறது, மேலும் அவர் நீங்கள் இருளிலே இனியும் நடக்க தேவையில்லை என்று அறிவித்துள்ளார். அவரது அன்பை பெற்றுக்கொண்டு இதற்கு முன்னில்லாத அளவிற்கு கிறிஸ்துமஸை அனுபவித்திடுங்கள்!


ஜெபம்: பரம தந்தையே, உம்மிடம் நாங்கள் மீண்டும் நெருங்கி சேர காலத்தின் துவக்கமுதலே வழியை உருவாக்கியதற்காக உமக்கு நன்றி. நான் வாழ்வைப்பெற, உம்முடைய குமாரன் பிறந்து, பின் மரிக்கும்படி அனுப்பியதற்காக உமக்கு நன்றி! கிறிஸ்துமஸை நான் கொண்டாடும் இந்நாளில், நீர் என்மீது வைத்திருக்கும் அன்பையும் என் வாழ்வில் நீர் கொண்டு வந்த ஒளியையும் வியந்து துதிக்க எனக்கு
உதவிடும். நான் இனி என்றும் இருளில் நடக்காமல் இருப்பதை வாய்க்கச்செய்ததற்காக உம்மை நான் ஸ்தோத்தரிக்கிறேன்! 


இன்றைய படத்தை இங்கே தரவிறக்குங்கள்


நாள் 24

இந்த திட்டத்தைப் பற்றி

Advent: The Journey to Christmas

உண்மையிலேயே கிறிஸ்துமஸ் கதையே இதுவரை சொல்லப்பட்டத்தில் மிக சிறந்த கதை: தேவனின் உண்மை, வல்லமை, இரட்சிப்பு, மாறாத அன்பு பற்றியது. உலகத்தை பாவத்திலிருந்து காப்பாற்றுவதற்கான தேவனின் திட்டத்தையும் அவருடைய குமாரின் பிறப்பில் ந...

More

இந்த திட்டத்தை வழங்கியதற்காக Church of Highlands க்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் தகவல் அறிய: https://www.churchofthehighlands.com க்கு செல்லவும்

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்