திட்ட விவரம்

தேவனோடு உரையாடல்மாதிரி

Conversations With God

14 ல் 6 நாள்

தேவனுடைய சத்தம் அநேக வேளை சத்தமாக இருப்பதில்லை. பரிசுத்த ஆவியானவர் பெரும்பாலும் மெல்லிய குரலில் பேசுவார். சில வேளைகளில் அவர் ஒரு காரியம் சரியில்லை என்று மெல்லிய குரலில் சொல்லும்போது, அந்த காரியத்தை விட்டு நாம் நம்மை பிரித்து கொள்வது சரியான முடிவாக இருக்கும். அதேபோல, அவர் ஆசீர்வாதமான ஒரு காரியத்தை மெல்லிய குரலில் காட்டும்போது, அந்த தருணத்தை விசுவாசத்தோடு கீழ்ப்படிந்து பெற்றுக்கொள்ளலாம். தேவன் இந்த மெல்லிய குரல் உரையாடல்களை திரும்ப திரும்ப சொல்வதில், அவருடைய சத்தத்திற்கு நாம் கவனமாக இருந்து கிரியை செய்யவேண்டும்.



ஒரு வெயில்கால மத்திய வேளையில், என் திசையை மாற்றிய ஒரு சத்தத்தை உணர்ந்தேன். என்னுடைய பிள்ளைகளில் அநேகர் எங்கள் பகுதியில் இருந்த ஒரு சிறிய கிறிஸ்துவ பள்ளியில் படித்துவந்தார்கள். அந்த பள்ளியின் தலைமை பொறுப்பிலிருந்த எங்கள் குடும்ப நண்பர், என்னை அழைத்து அந்த பள்ளியில் ஒரு ஆசிரியர் பொறுப்புக்கு விண்ணப்பிக்க விருப்பமா என்று கேட்டார்.



என்ன ஒரு எதிர்பாராத அழைப்பு. நான் கொண்ட மன குழப்பம் எனக்கு நன்கு நியாபகம் உள்ளது. முதலில் இந்த வேலை கூடாது என்ற நினைவுகள்: நான் இந்த வேலைக்கு தகுதியில்லாத பட்டப்படிப்பு பெற்றவர். எனக்கு பள்ளி படிப்பு குறித்து ஒன்றும் தெரியாது. நான் வீட்டை விட்டு வெளியே சென்று வேலைசெய்ததே இல்லை. வீட்டிலிருந்து வேலைக்கு சென்றால் வீட்டின் வேலைகளை தாறுமாறாக்கி விடும். இந்த வேலை அதிக பளுவாக இருக்கும் - ஐயோ! எனக்கு என்ன செய்வதென்றே தெரியாது. நான் எப்படி என்னைக்காட்டிலும் அதிக தேர்ச்சிபெற்றவர்களை காட்டிலும் இந்த வேலையை பெற்றுக்கொள்வது?



பிறகு இந்த வெளிக்கொண்டுவரும் தருணங்களை யோசித்தேன்: இந்த வேலை என் பிள்ளைகளின் படிப்பு செலவை தீர்த்தால் என்ன? சிறிய சம்பளமாக இருந்தாலும் குடும்ப பளுவை அது குறைக்குமே. எனக்கு பாடம் நடத்தவும் பிடிக்குமே. வீட்டை விட்டு வெளியே சென்று பாடம் நடத்துவது ஒரு நல்ல தருணமல்லவா. தேவன் எனக்கு இந்த பொறுப்பை தெரிந்தெடுத்தால், அவர் ஞானமும் வல்லமையும் எனக்கு கூட வராதா?



அந்த குழப்பமான நேரத்தில், தேவன் பேசினார். அவர் கரம் என் தோளின்மீது வைத்து அழுத்தியதுபோல இருந்தது. அவ்வளவுதான். இந்த வேலைக்கு விண்ணப்பிப்பது ஆசீர்வாதத்தின் வழியென்று சொன்னார்.



அந்த மாதமே அந்த வேலைக்கு சேர்ந்தேன். இரண்டு மாதங்களில் தேவன் அந்த பாட அட்டவணையை உருவாக்க வெளிப்பாடு தந்தார். மூன்றாவது மாதம், நான் பாட திட்டம் எழுதி, மாணவர்களோடு உரையாடி, ஆச்சரியமான விதமாக - இந்த முழு பொறுப்பையும் விரும்பி செய்தேன். இந்த சவால் மாத்திரம் இல்லையென்றால், நான் அதற்குப்பின் எழுதிய ஜெபத்தை குறித்த புத்தகத்தை எழுதியிருக்கவே மாட்டேன். அந்த ஒரு கீழ்ப்படித்தலின் படியினால் உண்டான ஆசீர்வாதங்கள் அநேகம்.


நாள் 5நாள் 7

இந்த திட்டத்தைப் பற்றி

Conversations With God

'தேவனோடு உரையாடல்' என்னும் இந்த திட்டம் உங்களை ஜெப ஜீவியத்தில் இன்னும் அதிக சந்தோஷத்தோடு தேவனைச் சேரவும், தேவனுடைய சத்தத்தை கேட்கவும் செய்வதான விதிமுறைகளை கொண்டுள்ளது. தேவன் நம்முடைய ஜீவிய நாளெல்லாம் நாம் ஒரு உரையாடலை அவ...

More

இந்த திட்டத்தை வழங்கிய சூசன் எக்ஹோஃப் க்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் தகவல் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை அனுகவும் https://www.amazon.com/Prayer-That-Must-Power-Conversational/dp/1496185560/ref=sr_1_1?ie=UTF8&qid=1498693709&sr=8-1&keywords=prayer+that+must%2C+the+power+of+conversational+prayer

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்