திட்ட விவரம்

தேவனோடு உரையாடல்மாதிரி

Conversations With God

14 ல் 5 நாள்

கடந்த 1900-ஆம் ஆண்டுகளின் துவக்கங்களில், ரிச்சர்ட் (என் கணவர்) மற்றும் நான் எங்களின் பத்து வருட சபையிலிருந்து மாற யோசித்தோம். நாங்கள் ஒரு நவீனகால ஆராதனை முறையை கொண்டிருக்க விரும்பினோம், ஆனால் எங்கள் சபையில் அது நடப்பதற்கான எந்த அடையாளமும் இல்லை. அநேக மாதங்களுக்கு பிறகு, இரண்டு மூன்று சபைகளில் ஒன்றை தெரிந்தெடுக்க முடிவெடுத்து எதிர்பார்த்துக்கொண்டிருந்தோம்.



இதே வேளையில், நாங்கள் ஒரு ஆவிக்குரிய எழுப்புதல் கூட்டத்தில் கலந்துகொள்ள ஒப்புக்கொண்டிருந்தோம். ஆண்கள் முதலில் கலந்துகொண்டார்கள், பிறகு இரண்டு வாரம் கழித்து பெண்கள் ரிட்ரீட் நடைபெற்றது. இந்த 'சபைகளின் நடுவில்' இருந்த நிலையில் தேவனை தேட கிடைத்த தருணத்திற்காக நன்றியுள்ளவர்களாக இருந்தோம்.



ரிச்சர்ட்-இன் எழுபத்தி இரண்டு மணி நேரம் ஒரு தனிப்பட்ட எழுப்புதலை கொண்டுவந்தது - அந்த ஞாயிறு இரவு அவரின் முகத்தில் என்னால் காணமுடிந்தது. அவர் நடந்ததை கூறியபோது, என்னுடைய தருணம் எப்போது வருமோவென்று நான் உண்மையில் ஏங்க துவங்கினேன்.



அநேக காரியங்களை கூறியபிறகு, அவர் கடைசியாக ஒரு காரியத்தை சொன்னார். நேரடியாக பேசி, தேவன் இந்த ரிட்ரீட்டின் பொது இந்த எங்கள் சபையை விட்டு செல்லக்கூடாது என்று வெளிப்படுத்தினதாக சொன்னார் - நாங்கள் நாட்டப்பட்டவர்களாக இருக்கவேண்டும். நான் சிறிது நேரம் யோசித்து எனக்கு, இவ்வாரு தேவன் வெளிப்படுத்தவில்லை, ஆகவே எனக்கு இதில் நம்பிக்கையில்லை என்று சொன்னபோது, அவர் நாம் காத்திருந்து பாப்போம் என்றார்.



என்னுடைய ரிட்ரீட்டின் கடைசி நாளில், தேவன் என்னோடும் பேசினார். ஒரு நிமிடம் எனக்கு ஒன்றும் தெரியவில்லை, அனால் அடுத்த நிமிடம் எனக்கு அனைத்தும் புரிந்தது: நாங்கள் எங்கள் சபையிலேயே தொடர வேண்டும். அவ்வளவுதான். என்னுடைய ஏற்கனவே முடிவெடுத்த சித்தம் தேவனுடைய நிச்சயமான அசைக்கமுடியாத சித்தத்தை சந்தித்து அதை நொறுக்கியது.



உலுக்கப்பட்டவளாக, நான் அழ துவங்கினேன், உண்மையான துக்கத்தின் கண்ணீர். என் கீழ்ப்படிதல்
எதிர்ப்பார்க்கப்பட்டது. நாங்கள் இங்க்கேயே இருக்க கேட்டுக்கொள்ளப்பட்டோம், ஆனால் என்னால் தேவனுடைய புரிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. அநேக ஆண்டுகளின் பின்னர் தான் புரிந்தது ஏனென்று. ஆனாலும் நாங்கள் தேவனுக்கு கீழ்ப்படிய தீர்மானித்து அங்கேயே தங்கினோம்.



தொடர்ந்தது என்னவென்றால் என்னுடைய எதிர்மறையான சுபாவங்கள் வெட்டப்பட்டது, எனக்கு தாழ்மையின் பாடம் கற்று -தரப்பட்டது இரண்டுமே வலித்தது. நான் கீழ்ப்படிந்ததினால் என்னுடைய ஜீவியத்தின் மிக முக்கிய பாடங்களை நான் கற்றுக்கொண்டேன்.



ஆச்சரியப்படும் காரியம் என்னவென்றால் தேவனுடைய சரியான வேளையில் எங்கள் ஆலயமும் சீரமைப்பு அடைந்தது. இப்போது என்னுடைய அனுபவத்தின்மூலம் நான் அறிவேன் - தேவன் என்னைப்போன்ற ஒருவரையும்கூட மாற்றமுடியும். எங்கள் சபையின் எழுப்பத்தலை காண்பது எல்லாவற்றிலும் சிறந்ததாக இருந்தது. கீழ்ப்படித்தலை எப்போதும் ஆசீர்வாதம் தொடரும்.


நாள் 4நாள் 6

இந்த திட்டத்தைப் பற்றி

Conversations With God

'தேவனோடு உரையாடல்' என்னும் இந்த திட்டம் உங்களை ஜெப ஜீவியத்தில் இன்னும் அதிக சந்தோஷத்தோடு தேவனைச் சேரவும், தேவனுடைய சத்தத்தை கேட்கவும் செய்வதான விதிமுறைகளை கொண்டுள்ளது. தேவன் நம்முடைய ஜீவிய நாளெல்லாம் நாம் ஒரு உரையாடலை அவ...

More

இந்த திட்டத்தை வழங்கிய சூசன் எக்ஹோஃப் க்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் தகவல் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை அனுகவும் https://www.amazon.com/Prayer-That-Must-Power-Conversational/dp/1496185560/ref=sr_1_1?ie=UTF8&qid=1498693709&sr=8-1&keywords=prayer+that+must%2C+the+power+of+conversational+prayer

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்