திட்ட விவரம்

உறுதிமொழிமாதிரி

The Vow

6 ல் 3 நாள்

பின்தொடர்தலுக்கான உறுதிமொழி


ரியான்மற்றும் ஆஷியா உயர்நிலைப் பள்ளி காதலர்கள். மூன்று வருட காதலுக்கு பிறகு, அவர்கள் பரஸ்பர பின்தொடருதல் பற்றி அதாவது இன்றைய பகுதியை எழுதுவதற்கு 5 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் செய்துகொண்டார்கள்!


ரியான்:


திருமணத்தில் நான் கற்றுக் கொள்ள வேண்டிய முதல் விஷயம், சபையோடு எனது நாட்டம் முடிவதில்லை. நான் எப்போதும் என் குடும்பத்துடன் நேரம் செலவழிக்காத ஒரு வேலைக்காரனாக இருக்க மாட்டேன் என்று எனக்கு நானே சொல்லிக் கொள்வேன். அந்த வலையில் விழுவது எவ்வளவு எளிது என்பதை நான் உணரவில்லை. எங்கள் திருமணத்திற்கு சில வாரங்கள் கழித்து, எனது வேலையில் நான் சந்திக்கும் ஏமாற்றங்கள், வேலை பட்டியல்கள் மற்றும் எனது கணினியைக் கூட எப்போதும் வீட்டிற்கு கொண்டு வரக் கூடாது என்று நான் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. தேவனின் உதவிக்காக வீட்டிற்கு செல்லும் வழியில் நான் ஜெபம் செய்யத் தொடங்கினேன், என் மனதையும் இருதயத்தையும் என் வேலையிலிருந்து என் மனைவியிடம் வேண்டுமென்றே மாற்றினேன். மனைவியையும் வேலைகளையும் குழப்புவது - வேலை செய்யாது. "என் மனைவி எப்போதும் இங்கே இருப்பாள். நான் இப்போது வேலைக்கு அதிகமாக கொடுக்க வேண்டும், அப்போது தான் பின்னர் அவளோடு அதை அனுபவிக்க முடியும். ” என்று உங்களுக்கு நீங்களே சொல்வது மிகவும் எளிது. ஆனால் நீங்கள் இப்போது எதை பொக்கிஷமாகப் பின்தொடர்கிறீர்களோ அதில் தான் உங்கள் ஓட்டத்தை நீங்கள் பின்னர் முடிப்பீர்கள். உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்.
என்று மத்தேயு 6:21 இல் இயேசு நமக்குக் கற்பித்தார். பின்தொடருதலுக்கான சபதம் என்பது உங்கள் புதையல் எங்கே இருக்கிறது என்பதை அறிந்து கொள்வதோடு அதைத் தேடுவதை ஒருபோதும் கைவிடாது.


ஆஷியா:


ரியானுக்கும் எனக்கும், திருமணமானது எங்களது இருதயங்களை எப்போதும் தேவனைப் பின்தொடர்வதற்கு ஒரு பொறுப்பு மனப்பான்மையை கொண்டு வந்தது. தேவன் மற்றும் அவருடைய வார்த்தையின் மீதான எங்களது அன்பையும் ஆர்வத்தையும் வளர்க்க நாங்கள் ஒருவருக்கொருவர் தொடர்ந்து சவால் விடுவோம். இதன் விளைவாக, ரியான் மீது எனது அன்பு அதிகரித்தது. அதே சமயம், அவர் என் மீது கொண்டுள்ள அக்கறையையும் ஆர்வத்தையும் அவரது இதயம் திறந்திருப்பதை நான் காண்பேன். தேவனை பின்தொடர்வதற்கான இந்த வாக்கு, பின்னர் ஒருவருக்கொருவருக்கான, காதலை சிறப்பாகவும் எங்கள் திருமணத்தை வலுவாகவும் ஆக்கியுள்ளது.


சரியானதாகத் தெரிகிறது, இல்லையா? சரி, இந்த இலட்சியத்தை நாங்கள் இழக்கிறோம் என்பதை உணர எங்களுக்கு திருமணத்திற்கு பிறகு சில மாதங்கள் மட்டுமே ஆனது. ரியானின் அனைத்து தேவைகளையும் நானே பூர்த்தி செய்ய முயற்சிப்பதன் மூலம் அவரைத் தொடர நான் விரும்புகிறேன். பின்னர், நான் எதிர் திசையில் போக ஆரம்பிக்கிறேன், அதாவது ஒரு சமயத்தில் என்னை மட்டுமே கவனித்துக் கொள்ள முயற்சிக்கிறேன். இது பல வேளைகளில் எங்களை காயப்படுத்தியுள்ளது. தேவனை முதலில் தொடர நாங்கள் கொண்டிருந்த எங்கள் சவாலை நான் நினைவில் கொள்ளும் வரை இது முன்னும் பின்னுமாக முடிவற்றதாக இருந்தது. நான் தேவனை பின்தொடரும் போது, தேவனுக்கும்​​ ரியானுக்கும் சேவை செய்யவும் அவரை பின்தொடரவும் எனக்கு ஒரு விருப்பத்தை தேவன் என் மனதில் உருவாக்குகிறார். நான் தேவனையும் ரியனையும் நம்பும்போது, ​​என் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதை நான் காண்கிறேன். இது ஒரு பக்க வகை நாட்டம். பிலிப்பியர் 1:27 இலிருந்து அப்போஸ்தலன் பவுல் உரைப்பது போல, ரியான் மற்றும் நான் ஒரே ஆவியோடு உறுதியாக நிற்கிறோம், நற்செய்தியின் விசுவாசத்திற்காக ஒரு மனம் அருகருகே பாடுபடுகிறது. இந்த பின்தொடர்தல் எல்லாம் எப்படி நன்றாக வேலை செய்கிறது? எப்படியென்றால் தேவன் முதலில் நம்மைத் தெரிந்தெடுத்தார்.


திட்டமிடுங்கள்: நீங்கள் திருமணமானவராக இருந்தால், ஒரு தேதியை, மதிய உணவை சேர்ந்து அருந்தவோ அல்லது ஒரு உரையாடலைத் திட்டமிடுங்கள். நீங்கள் திருமணமாகதவர் என்றால், உங்கள் திருமணத்தில் தேவனோடு ஒருவருக்கொருவர் எப்படி இருக்க விரும்புகிறீர்கள் என்பதை எழுதுங்கள்.


நாள் 2நாள் 4

இந்த திட்டத்தைப் பற்றி

The Vow

இந்த லயிஃப் சபையின் வேதாகம திட்டத்தில், ஆறு தம்பதியினர் சபையில் அதிகாரப்பூர்வமாக சொல்லாத ஆறு திருமண உறுதிமொழிகளைப் பற்றி எழுதுகிறார்கள். ஆயத்தம், முன்னுரிமை, பின்தொடர்தல், ஒற்றுமை, தூய்மை மற்றும் பிரார்த்தனை ஆகிய இந்த உற...

More

இந்தத் திட்டத்தை வழங்கிய LifeChurchக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் விபரங்களுக்கு https://www.life.church/ஐ பார்வையிடுங்கள்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்