திட்ட விவரம்

உறுதிமொழிமாதிரி

The Vow

6 ல் 1 நாள்

ஆயத்ததிற்கான உறுதிமொழி


அடுத்த ஆறு நாட்களில், திருமண உறுதிமொழி எடுத்துக்கொண்ட ஆறு திருமணமான தம்பதிகளின் செய்தியை கேட்க போகிறீர்கள் - வெறும் வார்த்தையில் எடுத்த உறுதிமொழி அல்ல. இந்த ஆயத்தம், முன்னுரிமை, தேடுதல், ஐக்கியம் மற்றும் ஜெப உறுதிமொழிகள் திருமண வாழ்வில் இவர்களுக்கு எவ்வாறு உதவியது என்பதை கேட்பீர்கள்.


டைலர் மற்றும் பெத் குறுஞ்செய்தி மூலம் சந்திக்க ஆயத்தமாக இல்லை, ஆனால் திருமணத்திற்கு ஆயத்தமானார்கள். முதல்முறை முகமுகமாக சந்தித்தபோது, நடந்ததெல்லாம் சரித்திரமானது!


பெத்:


இரண்டு இருதயங்கள் சந்திக்கும்போது, அது ஒரு அழகான சம்பவம்-ஆனால் எல்லாம் அழகானவைகள் அல்ல. ஒரு ஆரோக்கியமான உறவிற்கு உண்மைத்தன்மை தேவை, உங்கள் கடந்த தவறுகளை குறித்தும் கூட. என்னுடைய கடந்த தவறுகள் என்னுடைய கடந்த திருமணத்திலிருந்து ஏற்பட்டிருந்த மனதளவிலான காயங்களாக இருந்தன. என் நம்பிக்கை அழிக்கப்பட்டு என் பயங்கள் அதிகமாக ஊதி நிறைத்த பலூனை போல இருந்தது. ஆனாலும் ஏசாயா 43:19இல், தேவன் தம் ஜனத்திடம் கடந்த காலத்தில் சிக்கி இருக்க வேண்டாம் என்றும் அவர் புதிதானதை செய்யவிருந்தார் என்றும் கூறியிருக்கிறார். எனக்கும் தேவன் புதிதானதை கொண்டிருக்கிறார் என்று உணர துவங்கினேன். ஆகவே, நான் ஆயத்தமாக முடிவெடுத்தேன்.


நான் ஜெபித்தேன். மறவாமல் தேவனுடைய வார்த்தையை வாசிக்க துவங்கினேன். ஞானமான நண்பர்கள் சொன்னதை கேட்டேன். ஒரு ஆலோசனை நபரிடம் பேசினேன். குணமாக்குதல் குறித்த புத்தகங்களை வாசிக்க துவங்கினேன். தேவனுடைய நேரத்திற்காக பொறுமையாக காத்திருந்தேன்.


இவை எல்லாவற்றிலும், தேவன் என் எதிர்மாறான அனுபவங்களையும் குணமாக்குதலையும் என்னை வடிவமைக்க உபயோகித்தார். பிறகு என் இருதயம் டைலரை சந்தித்தபோது, நாங்கள் பொருந்தினோம். அவர் அதை செய்தவிதத்தை நான் இன்னமும் ரசிக்கிறேன். இப்போது, என் பழைய பயங்கள் எனக்குள்ளாக வர முயலும்போது, எனக்கு அதைக்குறித்து பேசவும் அதை எதிர்கொள்ள பெலனும் எனக்கு உண்டு.


டைலர்:


நான் வாலிப வயது முதல் என் வருங்கால மனைவிக்காக ஜெபித்து வந்தேன். வருடங்கள் செல்லச்செல்ல, தேவன் ஒரு சில குறித்த வார்த்தைகள் மீது கவனம் செலுத்த கற்றுத்தந்தார்: "நோக்கம்" "பொறுமை" மற்றும் "உறுதியான தன்மை".


நான் பெத்-ஐ சந்தித்தபோது, நான் ஜெபித்தது இவருக்கு தான் என்று உடனடியாக உணர்ந்தேன். அவளும் அதைக்குறித்து நேர்மையாகவும், அவர்களுடைய போராட்டங்கள் மற்றும் கடந்த நாட்களின் வலிகளை குறித்து நேர்மையாகவும் இருந்தாள். நாங்கள் மாறி மாறி ஒருவரை ஒருவர் சங்கீதம் 147:3-இல் காணப்படும் சத்தியத்தை நினைவு ஊட்டுவோம், தேவன் உடைந்தவர்களை குணமாக்குகிறார் என்று. நாங்கள் சந்தித்தபோது, தேவன் எனக்கு கொடுத்த மூன்று வார்த்தைகளை கொண்டு வாழ்ந்தோம். நாங்கள் ஒருவரை ஒருவர் நோக்கம், பொறுமை மற்றும் உறுதியுடன் சினேகித்தோம்.


தேவன் எங்களை திருமணத்திற்கு மாத்திரம் அல்ல, எங்கள் இருவருக்கும் துணையாக உருவாக்கியது மிக ஆச்சரியமானது. நான் ஜெபித்த மணவாட்டியை கண்டுகொண்டேன், நான் தொடர்ந்து ஜெபித்து கொண்டிருக்கிறேன். தேவன் எங்களை ஆயத்த படுத்தி அவருடைய புதிய காரியங்களுக்கு உபயோகிக்க ஜெபிக்கிறேன்.


Watch The Vow messages.


நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

The Vow

இந்த லயிஃப் சபையின் வேதாகம திட்டத்தில், ஆறு தம்பதியினர் சபையில் அதிகாரப்பூர்வமாக சொல்லாத ஆறு திருமண உறுதிமொழிகளைப் பற்றி எழுதுகிறார்கள். ஆயத்தம், முன்னுரிமை, பின்தொடர்தல், ஒற்றுமை, தூய்மை மற்றும் பிரார்த்தனை ஆகிய இந்த உற...

More

இந்தத் திட்டத்தை வழங்கிய LifeChurchக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் விபரங்களுக்கு https://www.life.church/ஐ பார்வையிடுங்கள்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்