திட்ட விவரம்

உண்மை ஆன்மீகம்மாதிரி

உண்மை ஆன்மீகம்

7 ல் 7 நாள்

தொடரும் உங்கள் பயணம்


இந்த செய்தியை உங்களிடம் சொல்ல எனக்கு விருப்பம் இல்லை தான் ஆனாலும் நான் சொல்லியே ஆகவேண்டும். இந்த வாழ்வில் நீங்கள் பரிபூரணமானவராக மாறப்போவதில்லை. இது ஏற்கனவே உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். நீங்கள் எவ்வளவு தான் கிறிஸ்துவில் மறுரூபமாக்கப்பட்டிருந்தாலும், அவரை முகம் முகமாகப் பார்க்கும் நாள் வரை நீங்கள் தொடர்ந்து உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு முழுமை பெறாத நபராகவே இருப்பீர்கள். 


இதில் நற்செய்தி என்னவென்றால், உங்கள் வளர்ச்சியை ஆசீர்வதித்து உங்களுக்கு ஆற்றலைக் கொடுப்பது தான் கர்த்தரின் வாஞ்சையான சித்தமாக இருக்கின்றது. இதன் மூலமாக நீங்கள் இயேசுவின் அழகு, அன்பு, பரிசுத்தம் போன்றவற்றை பிரதிபலிக்க முடியும். 


அவரது நன்மையும் பரிபூரணமானதுமான சித்தம் என்பது உங்களை மகிழ்ச்சிக்கு நேராக நடத்துவது மட்டுமல்ல. அது இந்த உலகத்துக்கான அவரது கிருபை, ஞானம், அன்பு, வல்லமை போன்றவற்றையும் வெளிக்காட்டுகின்றது. அவருடனான உறவின் மூலம்  உண்மையான ஆன்மீகப்பயணமானது இறுதியில் நிறைவேற்றப்படும் என்றும் இந்தப் பயணத்தின் வழியிலேயே அது நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கும் என்றும் அவர் வாக்குக் கொடுக்கின்றார். 


அதே நேரத்தில் நீங்கள் எடுக்க வேண்டிய அடிகளைப் பற்றியும் நினைவில் வைத்திருங்கள்: 


·  நீங்கள் முழுவதுமாக கர்த்தருக்கு அர்ப்பணித்திருக்கிறீர்கள் - ஒரே ஒரு தடவை மட்டுமல்ல, ஒவ்வொரு நாளும். 


·  உலகத்தின் வழிகள் மற்றும் மதிப்பீடுகளில் இருந்து தனித்து வாழுகிறீர்கள்.


·  உங்களை நீங்களே துல்லியமாகக் காணக் கற்றுக் கொள்கிறீர்கள் - பெருமையினாலோ, மாயமான தாழ்மையினாலோ அல்ல, கர்த்தர் பார்க்கிறவிதமாக. 


·  நீங்கள் மற்ற விசுவாசிகளுக்கு அன்புடன் சேவை செய்கிறீர்கள்.


·  தீமையை நன்மையால் வெற்றி பெருவதற்காக, தீமைகளை எதிர்கொள்ளும் போது இயற்கைக்கு அப்பாற்பட்ட அன்பினால் பதிற்செயல் செய்வீர்கள். 


இந்தப் படிகள், ஒவ்வொரு நாளும் கர்த்தருடன் உங்களுக்கு இருக்கும் உறவை வெளிப்படுத்தும் என்றால், நீங்கள் ஒரு அதிகாரப்பூர்வமான கிறிஸ்தவ வாழ்க்கையை வாழ்வீர்கள். அந்த வாழ்வானது, கர்த்தரை மதிக்கின்றதாகவும், பிறரது வாழ்வுகளைப் பாதிக்கின்றதாகவும் இருக்கும். 


இது ஒரு வாக்குத்தத்தம் ஆகும் - இது என்னிடம் இருந்து அல்ல, கர்த்தரிடமிருந்து அவர் தந்திருக்கும் வேதாகமத்தின் மூலமாக வருகின்றது. உங்களை, உங்கள் வாழ்வின் ஒவ்வொரு பகுதியையும் தினமும் பலியாக அவருக்கு அர்ப்பணியுங்கள். நீங்கள் உண்மையான ஆன்மீகத்தை அனுபவிப்பீர்கள், பரிபூரணமான வாழ்வை அதன் முழு வளமையோடும் அனுபவிப்பீர்கள்.

வேதவசனங்கள்

நாள் 6

இந்த திட்டத்தைப் பற்றி

உண்மை ஆன்மீகம்

உண்மை கிறிஸ்தவ வாழ்க்கை எப்படி இருக்கும்? வேதத்தின் ஆற்றலுள்ள பகுதியாகிய ரோமர் 12ஆம் அதிகாரம் நமக்கு ஒரு படத்தைக் கொடுக்கின்றது. இந்த வாசிப்புத் திட்டத்தில், நம் சிந்தனைகள், நம்மைப் பற்றிய நம் பார்வை, பிறருடன் உள்ள உறவுக...

More

இந்த திட்டத்தை வழங்கிய லிவிங் ஆன் தி எட்ஜுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு வருகை: https://livingontheedge.org/

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்