திட்ட விவரம்

உண்மை ஆன்மீகம்மாதிரி

உண்மை ஆன்மீகம்

7 ல் 2 நாள்

கர்த்தர் விரும்புவதைக் கொடுத்தல்


ரோமர் 12 ஆம் அதிகாரம் ஒரு சரணடைத்தலுடன் துவங்குகிறது - நமக்காக அல்ல, கர்த்தருக்காக மட்டுமே வாழ கொடுக்கப்படும் புரட்சிகரமான அழைப்பு ஆகும் அது. நேர்மையாகச் சொல்வதானால், இது அவருடனான நம் உறவுக்கு இருக்கும் பெரும் தடையாகவே இருக்கின்றது. 


கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட பின்னர், இவ்வாறாக சரணடையும் ஒரு இடத்துக்கு வந்து சேர்வதற்கு பெரும் போராட்டத்தை சந்திக்க வேண்டியதாக இருந்தது. நான் நம்பியிருந்தவைகளை எல்லாம் விட்டுவிடுவது தான் என் வாழ்க்கையைக் கர்த்தருக்கு என்றூ கொடுப்பது என்று நான் நினைத்திருந்தேன். 


நான் திருமணம் செய்து கொள்ள விரும்பியிருந்தேன். கர்த்தர் என்னைதனியனாகவே இருக்கச் சொல்லிவிடுவாரோ என்று பயந்தேன். அல்லது நான் விரும்புகிற பெண்ணை திருமணம் செய்து கொள்ள விடாமல் தடுத்துவிடுவாரோ என்று பயப்பட்டேன். கூடைப்பந்து விளையாடுவதைத் தடுத்துவிடுவாரோ என்று நினைத்தேன். ஒரு மிஷனரியாக அனுப்பிவிடுவாரோ என்று யோசித்தேன். அவரது சித்தம் என்பது நல்லதாக இருக்கும் ஆனால் மகிழ்ச்சியாக அனுபவிப்பதாக இருக்காது என்று நினைத்தேன். 


என் நண்பர்களுடன் இரவு உணவுக்குப் பின்னர் வீட்டுக்கு காரில் சென்று கொண்டிருந்த ஒரு சூழ்நிலை வரைக்கும் இந்தப் போராட்டம் எனக்கு இருந்தது. நான் விரும்பிய அனைத்தும் அவர்களுக்கு இருப்பதாகத் தோன்றியது - நல்ல வாழ்க்கைத் துணை, மகிழ்ச்சியான குடும்பம்,  கர்த்தரை நேசிக்கும் இதயங்கள் - ஆனால் நானோ போராடிக் கொண்டிருந்தேன். 


அப்போது கர்த்தர் இந்த வசனத்தை எனது நினைவுக்குக் கொண்டுவந்தார்:  


தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரைஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்குஅருளாதிருப்பதெப்படி?


(ரோமர் 8:32)


கர்த்தர் நம் வாழ்வின் முழுக் கட்டுப்பாட்டையும் எடுத்துக் கொள்ள விரும்புகிறார். ஆனால் அவர் நம் இதயங்களையும் அறிந்திருக்கிறார். அவர் நம் விரும்பங்களையும் நிறைவேற்றவே விரும்புகிறார்.  


நம்மைப் பற்றிய அவரது சித்தமானது நன்மையானதாகவே இருக்கின்றது.இதை நிரூபிப்பதற்காக, அவர் ஏற்கனவே தனது மகன் என்னும் விலைமதிப்பில்லாத பரிசைக் கொடுத்திருக்கிறார். 


நம்மை ஜீவபலியாகப் படைக்கும்படியாகக் கொடுக்கப்பட்டிருக்கும் அழைப்பைசரணடைதல் என்று சொல்லாமல் முழுமையான அர்ப்பணிப்பு என்றே நான் அடிக்கடி  சொல்கிறேன். அதற்குக் காரணம் இது தான்: 


·  சரணடைதல் என்பது நாம் எவற்றை விட்டுவிடுகிறோம் என்பதையேகவனப்படுத்துகிறது. இது நம் செலவையும், லாபத்தையும் சொல்வதாகத் தோன்றுகிறது.  


·  முழு அர்ப்பணிப்பு என்பது எது முக்கியம் என்பதைப் பற்றிய மறு பரிசோதனையாக இருக்கின்றது. கர்த்தர் யார் என்பதை நாம் அறிகிறோம். அவர் நமக்காக என்ன செய்திருக்கிறார் என்பதை உணருகிறோம். நம்மை என்ன செய்யும்படி அழைக்கிறார் என்பதைப் புரிந்து கொள்கிறோம்.


நித்திய காலத்துக்கும் பலன் தரும் ஒன்றுக்காக இந்த அழிந்து போகும் வாழ்வை விட்டுக் கொடுக்க நீங்கள் விருப்பமுடன் இருக்கிறீர்களா? கிறிஸ்துவுக்கு முழுமையாக அர்ப்பணியுங்கள். ஒரு ஜீவபலியாக உங்களையேஅவருக்கு ஒப்புக் கொடுங்கள். உங்களுக்கு மகிழ்ச்சியான வாழ்வும், உண்மையான ஆன்மீகமும் பரிசாக வழங்கப்படும். 

வேதவசனங்கள்

நாள் 1நாள் 3

இந்த திட்டத்தைப் பற்றி

உண்மை ஆன்மீகம்

உண்மை கிறிஸ்தவ வாழ்க்கை எப்படி இருக்கும்? வேதத்தின் ஆற்றலுள்ள பகுதியாகிய ரோமர் 12ஆம் அதிகாரம் நமக்கு ஒரு படத்தைக் கொடுக்கின்றது. இந்த வாசிப்புத் திட்டத்தில், நம் சிந்தனைகள், நம்மைப் பற்றிய நம் பார்வை, பிறருடன் உள்ள உறவுக...

More

இந்த திட்டத்தை வழங்கிய லிவிங் ஆன் தி எட்ஜுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு வருகை: https://livingontheedge.org/

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்