திட்ட விவரம்

வேதாகமத்தை எப்படி வாசிக்க துவங்குவதுமாதிரி

How to Start Reading the Bible

4 ல் 3 நாள்

உன் ஜீவியத்தில் வேதாகம சாத்தியங்களை பொருத்திக்கொள்வது



வேதாகமம் சொல்லாததை செய்துகொண்டே, வேதாகமத்தை வாசிக்கும் தீய பழக்கத்திற்குள் விளாதீர்கள். - பிரான்சிஸ் சான்



முன்னமே சொன்னதுபோல, வேதாகமத்தை வாசிப்பது கிறிஸ்துவோடு இருக்கும் உறவின் ஒரு முக்கிய பகுதிதான். ஆனால் அதை வெறுமனே வாசித்து, அதன் பின்னணியை புரிந்துகொள்வது மாத்திரம் செய்து, அதன் அறிவைக்கொண்டு ஒன்றும் செய்யவில்லை என்றால் அதிக பலன் கிடைக்காது. கிறிஸ்துவின் சீடர்களாக வளர நாம் வாசித்து கற்றதை கடைபிடிக்க வேண்டும்.



தேவனுடைய வார்த்தை அது நமக்கு ஆயுதம். அது உயிருள்ளது, கிரியைசெய்யக்கூடியது, இருக்கருக்குள்ள பட்டயத்தை விட கூர்மையானது. தேவனுடைய வார்த்தையை நம் மனதில் வைத்துவைத்தால், அது பாவத்தை விட்டு நம்மை தூரமாக வைப்பது மாத்திரம் அல்ல, அதோடு போர்செய்யவும் உதவும். நமக்கு ஒரு எதிரி இருக்கிறான், அவன் நாம் தேவனையும் வேதாகமத்தையும் நம்ப விடமாட்டான். நாம் படித்ததை கடைபிடிக்காமல் விட்டுவைடவே அவன் பார்க்கிறான்.



வேதாகமத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடிய மிக வல்லமைவாய்ந்த சத்தியம் என்னவென்றால் நாம் கிறிஸ்துவில் யாரென்றும், இந்த சாத்தியங்களை எவ்வண்ணம் அப்பியாசிப்பதென்றும் கற்றுக்கொள்வோம். கீழே நாம் நம்பிவந்த சில பொய்களும் அதற்கான தீர்வுகளும் உள்ளன:



நாம் நம்பும் பொய்கள் நான் தோல்வியடைந்தவன், என்னால் ஒன்றுமே சரியாக செய்யமுடியாது.

தேவனுடைய சத்தியம் சொல்வது என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு. (பிலிப்பியர் 4:13).



நாம் நம்பும் பொய்கள் — இந்த காரியம் என் வாழ்வில் நடைபெற எந்த தேவன் அனுமதிப்பார்?

தேவனுடைய சத்தியம் சொல்வது — அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம். (ரோமர் 8:28)



நாம் நம்பும் பொய்கள் — நான் என்றும் இதே நிலையில் தான் இருக்கப்போகிறேன்.

தேவனுடைய சத்தியம் சொல்வது — இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின! (2 கொரிந்தியர் 5:17)



நீங்கள் இத்தனை காலம் நம்பிவந்த பொய்களுக்கு மேலாக யோசியுங்கள். பொய்களை நினைத்துக்கொண்டிருப்பது இயற்கையானது, சொல்லப்[போனால் சுலபமானது ஏனென்றால் அவைகள் நம்மில் ஒன்றாக மாறிப்போயிருக்கின்றன. ஆனால் தேவன் அதைக்காட்டிலும் சிறந்தவர். இந்த பொய்களை நீங்கள் உணர்ந்துவிட்டால், வெற்றியின் பாதியை வென்றுவிட்டீர்கள். அவர் சத்தியத்தை நமக்கு கொடுத்திருக்கிறார், நாம் அதை அறிந்துகொள்ளும்படியாக ஏனென்றால் அது அவர் சத்தியம் அதுவே நம்மை விடுதலையாகும்.



நாம் வெற்றிவீரர்களாக வாழுவோம், தேவனுடைய வார்த்தையின் ஜீவன் கொடுக்கும், நம்பிக்கை ஊட்டும், பிசாசை வெல்லும் வல்லமையோடு ஜீவிப்போம்.



தியானிக்க




  • வேதாகமத்தில் வாசிப்பதை உண்மையில் அப்பியாசிக்கிறீர்களா? இல்லையென்றால் உங்கள் பொய்களினால் நிரப்பப்பட்டு அதை விட்டுவிடுகிறீர்களாt?

  • நீங்கள் சந்திக்கும் மிக பெரிய சவால் எது? நீங்கள் வெற்றிபெற தேவனுடைய வார்த்தையில் வசனங்களை தேடியெடுக்க கொஞ்சம் நேரத்தை செலவழியுங்கள். அதன் மூலம் வெற்றிபெறுவீர்கள்.

நாள் 2நாள் 4

இந்த திட்டத்தைப் பற்றி

How to Start Reading the Bible

உண்மையை ஏற்றுக்கொள்வோம்.: நாம் வேதாகமத்தை வாசிப்பது நல்லது என்று உணருகிறோம், ஆனால் எங்கு வாசிக்க துவங்குவது என்று தெரியாமல் இருக்கிறோம். இனி வரும் நான்கு நாட்களில், வேதாகமம் ஏன் முக்கியமானது என்றும், எவ்வாறு தினந்தோறும் ...

More

இந்த வேதாகம திட்டம் YouVersion ஆல் உருவாக்கம் பெற்று வழங்கப்பட்டது.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்