திட்ட விவரம்

வேதாகமத்தை எப்படி வாசிக்க துவங்குவதுமாதிரி

How to Start Reading the Bible

4 ல் 1 நாள்

வேதாகமம் என்றால் என்ன, அது ஏன் முக்கியம் வாய்ந்தது



ஒரு வாசிக்கப்படும் வேதம் ஒரு போஷிக்கப்பட்ட ஆத்துமாவிற்கு அடையாளம் - பெயர் அறியப்படாத எழுத்தாளர் இவ்வாறாக கூறியுள்ளார்



வேதாகமம், என்று சொல்லப்படும்போது தேவனுடைய வார்த்தை அல்லது வேதம், கிறிஸ்துவர்களாகிய நமக்கு வழிகாட்டும் நூல், அது நாம் இயேசுவோடு நெருக்கமாக நடப்பதற்கு ஒரு முக்கிய கருவியாகவும் இருக்கிறது. அது நம்முடைய எல்லா கேள்விகளுக்கும் பதில் தராவிட்டாலும், அது நமக்கு திசையை காட்டுகிறது, தேவன் யாரென்றும், மற்றவர்களோடு எத்தகைய உறவில் இருக்க வேண்டுமென்றும், எப்படி ஒரு தீர்மானத்தோடு வாழவேண்டுமென்றும், நித்திய ஜீவனை எப்படி பெற்றுக்கொள்வதென்றும் நமக்கு காட்டுகிறது.



நமக்கு தரப்பட கூடிய மிக கடினமான வேலை என்னவென்றால் அதை நாம் வாசிக்க வேண்டுமென்பதே இன்னும் அதிகமாக. ஆனால் நாம் வேதாகமத்திலிருந்து அதிக வல்லமையான சத்தியங்களை கற்றுக்கொள்ளமுடியும், அது நம்மை வேதம் வாசிப்பதை நம்முடைய அனுதின பழக்கத்தில் கொண்டுவர உற்சாகப்படுத்தும்.



முதலாவது அது என்ன என்று அறிந்துகொள்வோம்.



வேதாகமம் இவைகளாலானது...




  • 66 வித்தியாசமான புத்தகங்கள்…

  • ...1,500 வருட காலத்தில் எழுதப்பட்டது…

  • ...மூன்று மொழிகளில்…

  • ...40-கும் மேற்பட்ட எழுத்தாளர்களால்…

  • ...மூன்று கண்டங்களில் வாழ்ந்த எழுத்தாளர்கள்…

  • … எல்லோரும் தேவனால் ஊக்குவிக்கப்பட்டவர்களாக.


இந்த புத்தகங்கள் தனித்தனியே எழுதப்பட்டிருந்தாலும்கூட, முழு பழைய மற்றும் புது ஏற்பாடுகளிலும் ஒரே பேச்சுப்பொருளை மையமாக பேசுகிறது: நம்முடைய இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் மனிதகுலத்தின் மீட்பு.



300-கும் மேற்பட்ட பழைய ஏற்ப்பாடு தீர்க்கதரிசனங்கள் இயேசுவின் வாழ்க்கையையும் ஊழியத்தையும் குறித்து உள்ளன, அவைகள் ஒவோன்றும் அவருடைய ஜீவியத்தில் நிறைவேறின. வேதாகமம் எவ்வாறு எப்போது எழுதப்பட்டது என்பதில் இத்தனை வித்தியாசங்கள் உள்ளபோதிலும், இந்த தீர்க்கதரிசனங்கள் எல்லாம் வெறும் எழுத்தாளர்களின் கற்பனையாகவோ அல்லது கூட்டு சதியாகவோ இருக்கமுடியாது.



இந்த சத்தியங்கள் பிரமிக்க வைக்கக்கூடியவை! வேதாகமத்தை வாசித்து படிப்பது ஒரு வாழ்நாள் வேலையாக இருக்கும், ஏனென்றால் நாம் அளவுக்குட்பட்ட மனிதர்கள் அளவில்லாத தேவனை அறிந்துகொள்ள முயல்கிறோம். ஆனால் நாம் இந்த விளங்கிக்கொள்ளுதலில் வளர்ந்து நம்முடைய ஜீவியகாலம் எல்லாம் கற்றுக்கொள்ளலாம்.



நாம் ஒருவேளை வேதாகமத்தை வாசிக்காமல் இருந்தால் நம் வாழ்க்கை எப்படி பாதிக்கப்படும் என்று யோசிக்கலாம். ஒரு நாள் வாசிக்காமல் போனால் பெரிய வித்தியாசத்தை உணராமல் இருக்கலாம். அது நாம் கொண்டிருக்கும் ஒரு நோய்க்கு மருந்து எடுத்து கொள்வது போல - அந்த மருந்து பெரிதாக வேலை செய்வதுபோல உணராமல் இருக்கலாம், ஆனால் அதை நாம் நிறுத்தும்போது, நாம் உணருகிறோம் மிகப்பெரிய வித்தியாசத்தை. நாம் எப்போதும் வேதாகமம் நம்மை பாதிப்பதில்லை என்பதாக என்று யோசிக்கக்கூடும், ஆனால் அதை நம்முடைய அனுதின ஜீவியத்திலிருந்து எடுத்துவிட்டால், நம்முடைய ஆவிகள் எவ்வளவு காலியாக உள்ளது என்று உணருவோம்.



இந்த திட்டத்தை நாம் தியானிக்கும்போது, நாம் எவ்வாறு அனுதின வேத தியானத்திற்காக, பழக்கத்தை உண்டுபண்ணுவது என்பதை மற்றும் வேதாகமத்தை கைக்கொள்வது எப்படி மற்றும் தேவனுடைய வார்த்தையை நம் வாழ்வில், விசுவாசித்து தேவனை இன்னும் நேர்த்தியாக வழிபாடுவது குறித்து கற்றுக்கொள்வோம்.



தியானி




  • வேதாகமத்தின் சத்தியம் மற்றும் முக்கியத்துவத்தை நீ நம்புகிறாயா? ஏன்?

  • இந்த தலைப்பில் இன்னும் அதிகம் அறிய விரும்பினால், வேதாகமத்தை பற்றிய சத்தியங்களை தேடி அறிந்த அநேகருடைய எழுத்துகள் இணையதளத்தில் உள்ளது.

நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

How to Start Reading the Bible

உண்மையை ஏற்றுக்கொள்வோம்.: நாம் வேதாகமத்தை வாசிப்பது நல்லது என்று உணருகிறோம், ஆனால் எங்கு வாசிக்க துவங்குவது என்று தெரியாமல் இருக்கிறோம். இனி வரும் நான்கு நாட்களில், வேதாகமம் ஏன் முக்கியமானது என்றும், எவ்வாறு தினந்தோறும் ...

More

இந்த வேதாகம திட்டம் YouVersion ஆல் உருவாக்கம் பெற்று வழங்கப்பட்டது.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்