திட்ட விவரம்

பாதுகாப்பு வேலிகள்: மனஸ்தாபங்களைத் தவிர்த்தல்மாதிரி

Guardrails: Avoiding Regrets In Your Life

5 ல் 5 நாள்

நம் வீட்டிலோ அல்லது வேலை ஸ்தலத்திலோ, நண்பர்களுடன் இருக்கும் போதோ அல்லது நம் குடும்பத்துடன் இருக்கும் போதோ, நம் பழக்கவழக்கங்களை எப்படி கவனித்து பின் மாற்றிக்கொள்வது என்று நாம் கற்றுக்கொண்டிருக்கிறோம்.நேராக உட்கார வேண்டும். பணிவுடன் எதையும் கேட்கவேண்டும். இதை உடுக்கவேண்டும்.அதை செய்யவேண்டும்.



எனினும், சில சமயங்களில், நாம் சில அர்த்தமற்ற காரியங்களை சொல்கிறவர்களாகவும் செய்கிறவர்களாகவும் இருக்கிறோம். ஏதோ ஒன்று சிந்திவிட்டது போன்று இருக்கும் - கோவத்தின் வெளிப்பாடாகவோ அல்லது ஒரு கசப்பான கருத்தாகவோ இருக்கலாம். ஒருவேளை நாம் கொஞ்சம் நேரம் கழித்து, "நான் ஏன் இதை செய்தேன் என்று தெரியவில்லையே!" என்றும் சொல்லலாம்.



நேர்மையாகவும் அதை சந்திக்க தைரியமாகவும் இருந்தால், நமக்கு அது எங்கிருந்து வந்தது என்று தெரியும். அது நம் உள்ளிருந்து வருகிறது. இயேசு கிறிஸ்துவும், சாலமோன் ராஜாவும் நம் இருதயத்தில் என்ன இருக்கிறதோ அது தான் பிரச்சனை என்றே சொல்கிறார்கள்.



நம் இதயங்களுக்கு பாதுகாப்பு வேலி வேண்டும். ஏனெனில், நாளடைவில் நம் (வெளிப்புற) நடத்தையானது நம்முள்ளிருப்பவற்றின் பிம்பமாகவே இருக்கும்.



நான்கு உணர்ச்சிகள் நம் மனசாட்சியை உறுத்தக் கூடியவைகளாய் இருக்கின்றன. அவை நம்மை நிறுத்தி நம் இருதயங்களில் என்ன ஓடிக்கொண்டிருக்கிறது என்று உள்நோக்கி பார்க்கவைக்க வேண்டும். அவை குற்ற உணர்வு, கோபம், பேராசை மற்றும் பொறாமை.



குற்ற உணர்வு சொல்கிறது, "நான் உனக்கு கடமைப்பட்டு இருக்கிறேன்". நான் உனக்கு கடமைப்பட்டு இருக்கிறேன் ஏனென்றால் நான் உன்னிடத்திலிருந்து ஏதோ ஒன்றை எனக்காக எடுத்துக்கொண்டேன். குற்ற உணர்விற்கு பதிலாக ஒப்புக் கொடுங்கள். நீங்கள் தவறிழைத்தவரிடம் உங்கள் தவறை ஒப்புக்கொண்டு, உங்கள் தவறை வெளிச்சத்திற்கு கொண்டுவாருங்கள்.



கோபம் சொல்கிறது, "நீ எனக்கு கடமைப்பட்டிருக்கிறாய்." நீ என்னை காயப்படுத்தினாய் அல்லது என்னிடமிருந்து ஏதோ ஒன்றை எடுத்துக்கொண்டாய். கோபத்திற்கு பதிலாக மன்னியுங்கள். உங்களுக்கு கடமைப்பட்டிருக்கிறவரை மன்னியுங்கள். அவரை கொக்கியிலிருந்து விடுதலையாக்குங்கள்.



பேராசைசொல்கிறது, "நான் எனக்கு கடமைப்பட்டு இருக்கிறேன்." பேராசை என்பது இவை அனைத்தும் எனக்கே நுகர்வதற்கு எனும் எண்ணம். பேராசைக்கு பதிலாக கொடுங்கள். தாராளமாக கொடுப்பவராய் மாறுங்கள். எந்த மறைமுக எதிர்பார்ப்புமின்றி. எந்த கணக்குமின்றி.



பொறாமைசொல்கிறது, "வாழ்க்கை எனக்கு கடமைப்பட்டிருக்கிறது." எனக்கு கிடைக்கவேண்டியவற்றை/கிடைக்கவேண்டிய ஒருவரை வேறு ஒருவர் பெற்றுக்கொண்டார். பொறாமைக்கு பதிலாக, மற்றவரை கொண்டாடுங்கள். அவருக்கு ஒரு குறிப்பு எழுதுங்கள். எந்த காரியத்திற்கு பொறாமை பட்டீர்களோ அந்த காரியத்திற்கு அவரை பாராட்டுங்கள்.



இந்த உணர்வுபூர்வமான பாதுகாப்பு வேலிகளை சந்திக்கும் பொழுது நாம் கவனமாக இருக்கவேண்டும். நாம் ஆபத்தில் இருக்கிறோம் என்று அவை எச்சரிக்கின்றன. நாம் அதை நிராகரித்தால் துன்பம் நமக்காக அந்தப்பக்கத்தில் காத்துகொண்டுடிருக்கும்.



நீங்கள் இந்த தியானத்தை விரும்பினீர்கள் என்றால், ஆண்டி ஸ்டானலியின் பாதுகாப்பு வேலிகளை பற்றிய ஐந்து வேதபாட காணொளிகளையும் - மேலும் பற்பல இலவச வேதபாட காணொளிகளயும் - http://anthology.study இல் பாருங்கள்.


நாள் 4

இந்த திட்டத்தைப் பற்றி

Guardrails: Avoiding Regrets In Your Life

நமது வாகனங்கள் ஆபத்தான அல்லது வரம்புக்கு மீறிய பகுதிகளுக்குச் செல்லாமல் இருக்க தடுப்புகள் வைக்கப்பட்டிருக்கின்றன. நமக்கு அதன் தேவை ஏற்படும் வரை நாம் அவைகளை கண்டுகொள்வது இல்லை - ஆனால் பின்னர் அவைகள் அங்கு இருந்ததற்காக நாம...

More

நார்த் பாய்ன்ட் ஊழியங்களுக்கும் ஆண்டி ஸ்டான்லி அவர்களுக்கும் இந்த திட்டத்தை வழங்கியமைக்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் தகவல்கள் பெற, பார்க்கவும்: https://www.anthology.study/anthology-app

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்