திட்ட விவரம்

பாதுகாப்பு வேலிகள்: மனஸ்தாபங்களைத் தவிர்த்தல்மாதிரி

Guardrails: Avoiding Regrets In Your Life

5 ல் 4 நாள்

நிதி ரீதியான தடுப்புகளைப் பற்றி நீங்கள் நினைக்கும் போது, ​​கடனில் இருந்து விலகி இருப்பதைப் பற்றி நீங்கள் நினைக்கலாம். கடனில் இருந்து தள்ளி நிற்பது நல்லதுதான், ஆனால் இயேசுவின் கூற்றுப்படி, நீங்கள் கடன் அற்றவராகவும் வங்கியில் ஏராளமான பணம் வைத்திருப்பவராகவும் இருந்தாலும், நிதி ரீதியாக ஒரு பள்ளத்தில் இருக்கலாம். புதிராக இருக்கிறது இல்லையா? தொடர்ந்து படிக்கவும்.



மத்தேயுவிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய வசனத்தில், நாம் அனைவரும் யாரோ அல்லது ஏதோவொன்றால் வெல்லப்பட்டிருக்கிறோம் (அல்லது சொந்தமாக்கி கொள்ளப்பட்டிருக்கிறோம்) என்று இயேசு கூறுகிறார். பின்பு இரண்டு எதிர்பாராத விருப்பங்களை அவர் நமக்குத் தருகிறார்: தேவன் அல்லது பணம் என்று. நாம் தேவன் அல்லது சாத்தானால் வெல்லப்பட்டிருப்போம் என்று அவர் சொல்வார் என்று நம்மில் பெரும்பாலோர் எதிர்பார்க்கலாம். ஆனால் இயேசு பிரதான போட்டியாளராக பணத்தை கூறுகிறார்.



முக்கிய தேவையாக, அவர் நம்மிடம் இந்த கேள்வியை எழுப்புகிறார்: நமக்கு பணம் சொந்தமா அல்லது பணம் நம்மை சொந்தம் கொண்டாடுகிறதா?



நிதி ரீதியான வேலிகள் இல்லாமல், இந்த இரண்டு பள்ளங்களில் ஒன்றுக்குள் நம்மில் பெரும்பாலானோர் முடிவை சந்திப்போம். நாம் செலவழிக்கும் முகட்டில் இருந்து தாவிடுவோம் அல்லது சேமிக்கும் மத்தியில் நாம் மோதி விழுவோம்.ஒன்று அடங்காத ஆசை: வாங்கு, முன்னேறு, மறுபடி செய். மற்றொன்று அடங்காத பயம்: என்னிடம் போதுமான அளவு இல்லாவிட்டால் எப்படி? அது நமக்கு ஏற்பட்டால் என்ன செய்வது?



இரண்டு சந்தர்ப்பங்களிலும், பணம் நமது எஜமான் ஆகின்றது. நாம் அதை உபயோகப்படுத்தும் தேவையில் அதைத் துரத்துகிறோம் அல்லது அதைச் சேமித்து வைத்துவிட்டு பின்னர் நுகரலாம் என அதைத் துரத்துகிறோம்.



தேவனையே நமது எஜமானராக்கும் ஒரு நிதிக் காவல் நமக்குத் தேவை. மத்தேயு 6: 33-ல் நாம் கண்டறிவது இதுதான், நம்முடைய பணத்தை நாம் எவ்வாறு பார்க்க வேண்டும் மற்றும் பயன்படுத்த வேண்டும் என்பதையே ஒரு நீண்ட பேச்சின் முடிவில் இந்த நான்கு வார்த்தைகளால் முன்வைக்கிறார்: "முதலில் அவருடைய ராஜ்யத்தைத் தேடுங்கள்."



தேவனின் ராஜ்யம் மற்றவர்களை-முதன்மைபடுத்தும் ராஜ்யம். அல்லது, நேற்றைய அதே சொற்களில் கூறினால்: தேவனின் ராஜ்யத்தில், மற்றவர்களுக்கு எது சிறந்ததோ அதுவே சிறந்தது. நமது நிதி விஷயத்தில் மற்றவர்களை முதலிடத்தில் வைப்பதே செலவு மற்றும் சேமிப்பு ஆகியவற்றின் குழிகளிலிருந்து நம்மை பாதுகாக்கும் தடுப்புகள்.



முதலில் மற்றவர்களுக்கு கொடுங்கள். உங்கள் எதிர்காலத்திற்கு இரண்டாவதாக சேமியுங்கள். பின்னர், மீதமுள்ளதில் வாழவும்.



முதலில் கொடுங்கள். இரண்டாவது சேமியுங்கள். மீதியில் வாழுங்கள்.



இந்த தடுப்புகளைப் பற்றிய நல்ல செய்தி இங்கே: இது தானாக அமைவதாகவும் இருக்கலாம். நீங்கள் ஒரு நிறுவனத்தை அல்லது ஒரு நோக்கத்தை அடையாளம் கண்டு நீங்கள் அக்கறை கொண்டு, கொடுக்கும் முறையை அமைத்துக்கொண்டால், இந்த தடுப்பு உங்கள் நிதிகளை எந்த அதிக முயற்சியோ சிந்தனையோ இன்றி பார்த்துக்கொள்ளும்.


நாள் 3நாள் 5

இந்த திட்டத்தைப் பற்றி

Guardrails: Avoiding Regrets In Your Life

நமது வாகனங்கள் ஆபத்தான அல்லது வரம்புக்கு மீறிய பகுதிகளுக்குச் செல்லாமல் இருக்க தடுப்புகள் வைக்கப்பட்டிருக்கின்றன. நமக்கு அதன் தேவை ஏற்படும் வரை நாம் அவைகளை கண்டுகொள்வது இல்லை - ஆனால் பின்னர் அவைகள் அங்கு இருந்ததற்காக நாம...

More

நார்த் பாய்ன்ட் ஊழியங்களுக்கும் ஆண்டி ஸ்டான்லி அவர்களுக்கும் இந்த திட்டத்தை வழங்கியமைக்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் தகவல்கள் பெற, பார்க்கவும்: https://www.anthology.study/anthology-app

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்