திட்ட விவரம்

குறிக்கோள் நிறைந்த வாழ்க்கையை வாழுங்கள்!மாதிரி

குறிக்கோள் நிறைந்த வாழ்க்கையை வாழுங்கள்!

7 ல் 4 நாள்

"மற்றவர்களுக்கு நம் அன்பை விரிவாக்குவது"


நமது வாழ்வில் தேவனோடுள்ள அன்பு வளருவதாகவும்,   உயிரோட்டமுள்ளதாகவும் இருக்குமானால், மற்றவர்களை நேசிப்பதற்கான நம்   சத்துவமும் வளரும். மற்றவர் மீது நம் அன்பு வளர வளர, அவர்களுக்கு ஏதாவது   செய்யவேண்டும் என்கிற ஆர்வமும் கூடிக்கொண்டேயிருக்கும்; இப்படியாக, நம்மைப்படைத்ததற்கான   முக்கியமான நோக்கமாகிய பிறருக்கு நற்கிரியை செய்வதையும் நிறைவேற்றுவோம். 


எப்போதுமே, நமது அன்பும் கிரியையும் இணைந்தே செயல்பட வேண்டும் என்பது தேவனுடைய   திட்டம். நற்கிரியை மூலமாக பிறரின் வாழ்வைத் தொடுவது என்கிற தேவனின் மாபெரும்   திட்டத்தில் நம் ஒவ்வொருவருக்கும் பங்குண்டு.


ஓர் அன்பான வார்த்தையினால், சிலரின் தேவைகளைச் சந்திப்பதால், துயரிலிருப்போர்   புலம்பும் வார்த்தைகளைக் கவனித்துக் கேட்பதால் இன்னொருவர் வாழ்வைத் தொடும்   போதெல்லாம், அவர்களுக்கான நமது அன்பை மட்டுமல்ல, தேவன் அவர்கள் மீது   கொண்டுள்ள அன்பையும் நம் மூலமாகக் காட்டுகிறோம். இருளும், நம்பிக்கையின்மையும்   நிறைந்துள்ள இந்த உலகுக்கு தேவனுடைய மகிமையைப் பிரகாசிக்கப் பண்ணுகிறதற்கு   அவருடைய பிரதிநிதிகளாய்ச் செயல்படுகிறோம்.


நமது ஒளியைப் பிரகாசிக்கப்பண்ணுவது என்பது, தேவனுடைய ஒளியை நம்   மூலமாகப் பிரகாசிக்கப்பண்ணுவதே ஆகும். தேவனுடைய ஒளியை மற்றவர்களுக்குப்   பிரகாசிக்கப் பண்ணுவதற்கு மூன்று முக்கிய வழிகள் உள்ளன:


1. உயிருள்ள சாட்சியாக   வாழுங்கள்


2. பிறருக்குச் சேவை   செய்யுங்கள்


3. கிறிஸ்தவரோடு   ஐக்கியம் கொள்ளுங்கள்


இந்த மூன்று வழிகளில் நமது விசுவாசத்தைச் செயலில் காட்டினால், மற்றவர்கள் தேவனுடைய   அன்பு, கிருபை, இரக்கத்தை அனுபவித்து தேவனுக்கு மகிமை உண்டாகும்.

நாள் 3நாள் 5

இந்த திட்டத்தைப் பற்றி

குறிக்கோள் நிறைந்த வாழ்க்கையை வாழுங்கள்!

மகிழ்ச்சியான, குறிக்கோள் நிறைந்த வாழ்க்கை, உறவுகளின் மேலும், அன்பு, விசுவாசத்தின் மேலும் கட்டியெழுப்பப்படுகிறது. உங்கள் வாழ்க்கைக்கான திட்டத்தைக் குறித்து   அதிகத்தெளிவு தேவையானால், உங்களது தேடுதலும், வெளிப்பாடுகளும் இன்...

More

இந்த திட்டத்தை வழங்குவதற்காக நாங்கள் ட்வெயின் 20 நம்பிக்கைக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, செல்க: http://www.twenty20faith.org/yvdev2

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்