திட்ட விவரம்

குறிக்கோள் நிறைந்த வாழ்க்கையை வாழுங்கள்!மாதிரி

குறிக்கோள் நிறைந்த வாழ்க்கையை வாழுங்கள்!

7 ல் 3 நாள்

" தேவ அன்பை வளர்ப்பது"


தேவன் மேலுள்ள அன்பில்   வளர்வது என்பது மனிதரோடுள்ள அன்பில் வளர்வதை விடச் சிரமமானதுதான். ஓர்   அடிப்படைக் காரணம், நாம் தேவனை நேரடியாகப் பார்க்கமுடியாது. ஆகவே, தேவனோடுள்ள அன்பில் நிலைக்கவும், வளரவும், விசுவாசம் தேவை.


நமது கண்களால் தேவனைப்   பார்க்கமுடியாவிட்டாலும்,   நமது இருதயத்திலிருந்து தேவனை நோக்கி அன்பு எழும்புவதற்கு விசுவாசம் உதவுகிறது.   தேவனோடு அன்பில் நாம் வளர்வதற்கு, நமது கிறிஸ்தவ   வாழ்வில் விசுவாசம்   "செயல்படுவதாக" இருக்கவேண்டும். 


வேதத்தை வாசிப்பதாலும், நம்வாழ்விலும் பிறர்வாழ்விலும் தேவனின் அன்பையும்   ஈடுபாட்டையும் கவனிப்பதாலும், ஜெபத்தில் அவரோடு உறவு   கொள்வதாலும் தேவனைப்பற்றி அதிகதிகமாய்த் தெரிந்துகொள்ளத் துவங்குகிறோம். அவரை   அறிந்து கொள்ள அறிந்து கொள்ள, நமது வாழ்வில் அவர்மேலுள்ள   அன்பு வளந்துகொண்டேயிருக்கும்.


தேவன் மேலுள்ள விசுவாசத்தால்   அவர் மேலுள்ள அன்பை வளர்ப்பது போல, அந்த அன்பை செயல்களின்மூலம்   வெளிப்படுத்துவதும் உதவும். தேவனோடு வெற்றியுள்ள, வளரும் உறவு வேண்டுமென்றால், விசுவாசத்தால் அவர் மீது அன்பு   செலுத்துவதும், நமது செயல்கள் மூலமாக தேவனுக்கு நம்மை   ஒப்புக்கொடுப்பதும் இணைந்து செயல்படும் சூத்திரம் வேண்டும். 


நமது விசுவாசக்கிரியைகளால் தேவ   அன்பு வளரும் என்பது எவ்வளவு உண்மையோ, நமது கிரியைகள் தேவ அன்பையும், ஆதரவையும் 'சம்பாதிக்க' உதவாது என்பதும் அதற்குச் சமமான உண்மை. 


உண்மை என்னவெனில், நாம் தேவனை அறிவதற்கு வெகுகாலத்துக்கு முன்பே தேவன் நம்மை ஆழமாகவும், நிபந்தனையின்றியும் நேசிக்கிறார் என்பதே. தேவன் நம்மேல் கொண்டுள்ள அன்பே   நாம் அவர் மீது கொண்டுள்ள அன்புக்கும், பிறர் மீது கொண்டுள்ள   அன்புக்கும் ஆதாரம்.

நாள் 2நாள் 4

இந்த திட்டத்தைப் பற்றி

குறிக்கோள் நிறைந்த வாழ்க்கையை வாழுங்கள்!

மகிழ்ச்சியான, குறிக்கோள் நிறைந்த வாழ்க்கை, உறவுகளின் மேலும், அன்பு, விசுவாசத்தின் மேலும் கட்டியெழுப்பப்படுகிறது. உங்கள் வாழ்க்கைக்கான திட்டத்தைக் குறித்து   அதிகத்தெளிவு தேவையானால், உங்களது தேடுதலும், வெளிப்பாடுகளும் இன்...

More

இந்த திட்டத்தை வழங்குவதற்காக நாங்கள் ட்வெயின் 20 நம்பிக்கைக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, செல்க: http://www.twenty20faith.org/yvdev2

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்