திட்ட விவரம்

இயேசு யார்?மாதிரி

Who Is Jesus?

5 ல் 2 நாள்

இயேசு பாவிகளின் சினேகிதர்


மதிய உணவு இடைவெளியின் போது உணவருந்தும் இடம் அவ்வளவு விரும்பத்தக்கது அல்ல. 



பந்தி சிலரை சேர்க்கவும் சிலரை ஒதுக்கவும் வாய்ப்பை ஏற்படுத்துகிறது தெரிகிறது. பந்தி தடைகளை உருவாக்கும் அல்லது தடைகளை தகர்க்கும். பந்தியில் நீங்கள் யாரோட அமர்கிறீர்கள் எவ்விதமான மக்களோடு உணவருந்துகிறீர்கள் என்பது பார்வையாளர்களுக்கு நீங்கள் யாரை ஏற்றுக் கொள்கிறீர்கள் யாரைத் தழுவுகிறீர்கள் என்பதை சொல்லும். 



இயேசுவின் காலத்தில் நடந்த பந்தியும் இதே விதமான சம்பவத்தை சொல்லுகிறது. 



இயேசு சிலரோடு உணவருந்தியதைக் குறித்து மதத் தலைவர்கள் அவரை விமர்சித்தனர், ஏனெனில் அவர்களது கலாச்சாரத்தில் ஒருவரோடு உணவருந்ததுல் ஏற்றுக் கொள்ளுதலையும், நட்பையும் குறிக்கும், மேலும் மற்றவர்களை மிகவும் ஆச்சரியப்படுத்தியது என்னவெனில் தகுதியற்றவர்களோடும், பாவிகளோடும், தேவனை விட்டு தூரம் போனவர்களாய் தோன்றுகிறவர்களோடும் இயேசு உணவருந்தினார். 



“நியாயப்பிரமானத்தை போதிக்கிறவர்களான பரிசேயர்கள் இயேசு “பாவிகளோடும்” வரி வசூலிப்பவர்களான ஆயக்காரரோடும் உணவருந்தியதைக் கண்டபோது, இயேசுவின் சீஷர்களிடம்: “அவர் ஆயக்காரரோடும் பாவிகளோடும் போஜனபானம் பண்ணுகிறதென்ன?" என்று கேட்டார்கள். (வ. 16).



ஆனால் இயேசு இப்படியாக பதிலளித்தார், “பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன்” (வ. 17).


‭‭

இயேசுவின் அடையாளத்தில் ஒரு பகுதி அவர் "பாவிகளின் சிநேகிதர்" என்னும் புகழ். 



தேவ ராஜ்ஜியத்தை ஒரு விருந்தினர் கூட்டமாக கற்பனை செய்தால், பரிசேயர்கள் சமுதாயத்தால் அங்கீகரிக்கப்பட்டவர்களை மாத்திரமே அழைக்க விரும்புவார்கள், அன்றைய நாட்களில் சட்டதிட்டத்தின்படி நியாயமாக நடப்பதாக மத நம்பிக்கையின்படி நடப்பதாக காட்டிக் கொண்டவர்களை மாத்திரமே அழைத்திருப்பார்கள். 



ஆனால், மறுபுறம், இயேசுவோ அனைவரையும் அழைக்கிறார். நீங்கள் என்ன தவறு செய்திருந்தாலும் அல்லது எவ்வளவு தகுதியற்றவர்களாக இருந்தாலும் – நீங்கள் அவரோடு உறவு கொள்ள, தேவனோடைய பந்திக்கு அழைக்கப்படுகிறீர்கள். கலகக்காரருக்கும் சட்டத்தை-உடைப்பவர்களுக்கும் அவரிடத்தில் இடமுண்டு.



இது பரிசேயர்களுக்கு எரிச்சலூட்டியது ஏனெனில் அவர்கள் பரிசுத்தம், நியாயமான தூய்மை, சரியான நடத்தை தேவனோடுள்ள உறவுக்கு வழிநடத்தும் என எண்ணினர். ஆனால் இயேசுவுக்குத் தெரியும் எனவே பரிசுத்தம், அல்லது நீதியான நடக்கை தேவனோடு உறவு கொள்வதன் மூலமாக வருவது என உணர்த்தும் விதமாக நடந்து கொண்டார். 



வேறு விதமாக சொன்னால்: தேவன் உங்களை நேசிக்கும் முன்னர் மாறு, என்று சொல்வதை விட, தேவன் உங்களை நேசிக்கிறார், அவரது நேசம் உங்களை மாற்றும். என்று விசுவாசிக்கவும் சொல்லவும் விரும்புகிறார். இயேசு ஒருவருடைய வாழ்க்கை முறையில் மாற்ற ஆரம்பிக்கவில்லை; அவர் தேவ அன்பில் ஆரம்பித்தார், ஏனெனில் தேவ அன்பு, காலப்போக்கில் நமது குணங்களையும் வாழ்க்கையையும் மாற்றிவிடும் என்பதை அவர் அறிந்திருந்தார். 



தேவன் நாம் விசுவாசிக்கும் முன்னரே, நம் நடக்கைககள் மாறும் முன்னரே அவருடையவர்கள் ஆகும்படி அழைக்கிறார், இது இயேசுவின் மூலமான அழைப்பு. ஏனெனில் நமது இந்த அழைப்பு நமது நன்மையின் அடிப்படையில் அல்ல, அவருடைய கிருபையின் அடிப்படையில். 



இயேசுவின் பந்தி தேவன் எப்படி கிருபையோடு எல்லா விதமான மக்களையும் ஏற்றுக் கொள்கிறார் என்பதை பற்றியக் கதையை சொல்லுகிறது. 



நம்முடைய பந்தி எப்படிப்பட்டதான கதையை சொல்லுகிறது என்று நான் அதிசயிக்கிறேன்? 


வேதவசனங்கள்

நாள் 1நாள் 3

இந்த திட்டத்தைப் பற்றி

Who Is Jesus?

இயேசுவே கிறிஸ்தவ நம்பிக்கையின் மையமாய் இருக்கிறார். இந்த 5 நாள் திட்டம் இயேசு யார் என்பதை பற்றிய ஆழமான தோற்றத்தைக் காண்பிக்கிறது. இயேசு: பாவங்களை மன்னிக்கிறவர், பாவிகளின் சிநேகிதர், ஒளியாயிருக்கிறவர், அற்புதங்களை நடப்பிக...

More

இத்திட்டத்தை வழங்குவோர் ஆல்பா மற்றும் ஆல்பா யூத் சீரிஸ். இத்திட்டம் வாழ்க்கையின் பெரிய கேள்விகளை ஆராயும் 13-பகுதிகளை உடையது.மேலும் அறிந்து கொள்ள: http://alpha.org/youth

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்