திட்ட விவரம்

நம்பிக்கை, கடின உழைப்பு மற்றும் ஓய்வுமாதிரி

Trust, Hustle, And Rest

4 ல் 1 நாள்

நம்பிக்கை, கடின உழைப்பு மற்றும் இளைப்பாறுதல்


“சலசலப்பை உண்டாக்குவது” சொல்லும்போது அது வியாபார உலகில் மிக பிரபலமான ஒரு வார்த்தையாக இருக்கிறது. சுறா மீன் தொட்டி முதலீடு செய்கிறவர்கள் தொழில் முனைவோரை வியாபாரத்தைப் பெருக்க இன்னும் சலசலப்பை உண்டாக்க சொல்கிறார்கள். ஒவ்வொருவரும் அவர்களுடைய சலசலப்பை உயர்த்த முயற்சி செய்கிறார்கள், அதோடு கூட அவர்களுடைய 9 மணி - 5 மணி வேலையையும் காத்துக்கொள்ள முயற்சி செய்கிறார்கள். ஆனால் வேதாகமம் நம்முடைய சலசலப்பைக் குறித்து என்ன சொல்கிறது?ஒரு புறத்தில் வேதாகமம் தெளிவாக கடும் உழைப்பை மெச்சிக்கொள்கிறது. கொலோசெயர் 3:24 சொல்கிறது, "எதைச் செய்தாலும், அதை மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள். ஆனால் கிறிஸ்துவர்களாக நாம் உலகத்தை போல கடின உழைப்பை கொண்டாடலாம், ஆனால் கூடவே நம்முடைய சலசலப்போ அல்லது நாமோ அல்ல தேவனே நல்ல முடிவுகளை தருகிறார் என்ற வேதாகம சத்தியத்தை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும். (உபாகமம் 8:17-18). கிறிஸ்துவர்களாக நாம் உண்மையான இளைப்பாறுதலைப் பெற்றுக்கொள்ள கடின உழைப்பிற்கும் தேவனை நம்பும் விசுவாசத்திற்கும் இடையே உள்ள உறவை புரிந்துகொள்ளவேண்டும்.


யோசுவா 6-ஆம் அதிகாரம் இந்த ஊறவைக்க குறித்து புரிந்துகொள்ள நல்ல நிகழ்வாக இருக்கிறது. இஸ்ரவேலர்கள் யோசுவாவினால் வாக்குத்தத்தம்ப்பண்ணப்பட்ட தேசத்திற்கு வழிநடத்தப்பட்ட வேளையில் ஒரு பெரிய தடையை சந்தித்தார்கள்: உட்புகுறைகூடாத எரிகோ. யோசுவா 6:2 சொல்வதுபோல, "கர்த்தர் யோசுவாவை நோக்கி: இதோ, எரிகோவை உன் கையில் ஒப்புக்கொடுத்தேன்," ஆனால் யோசுவா மற்றும் இஸ்ரவேலர்கள் மீது ஒரு இயற்க்கைக்கு மாறான பெலத்தை கொடுத்து எரிகோவை அவர்காளாகவே வீழ்த்தசெய்யாமல், அவர்மீது அவர்கள் முழு விசுவாசத்தையும் வைக்கவேண்டும் என்று விரும்பினார். தேவன் யோசுவா இஸ்ரவேலர்களை எரிகோவை சுற்றி ஏழு நாள் நடந்து செல்லவும் பிறகு முடிவில் அந்த பட்டணத்து சுவர்களின்மீது ஒரு மகாபெரிய சத்தத்தையும் கொடுக்க கட்டளையிட்டார்.


மற்ற சரித்திர நிகழ்வுகளை போல, "தேவன் ஞானிகளை வெட்கப்படுத்த பேதைகளை உபயோகித்தார்". யோசுவாவும் இஸ்ரவேலர்களும் அவர்கள் சொந்த பெலத்தினால் அந்த யுத்தத்தை வெற்றிபெற செய்யாமல், தேவன் மாத்திரமே மகிமையைப் பெற்றுக்கொள்ளும்படியான திட்டத்தை செய்தார். இஸ்ரவேலர்களுக்கு வெற்றியை கொடுப்பதற்கு முன்னால், தேவன் தருவார் என்று அவர் மீது அவர்கள் விசுவாசிக்க வேண்டும் என்று விரும்பினார். கண் சிமிட்டாமல் யோசுவா அதையே செய்தார். இஸ்ரவேலர்கள் தேவனுடைய திட்டத்தை நம்பினார்கள். அதற்குப்பிறகு அவர்கள் நடந்து, எக்காலம் ஊதி, எரிகோ மதில் விழும் மட்டும் கத்தினார்கள் - சலசலப்பு செய்தார்கள்.


ஆம் இஸ்ரவேலர்கள் நடந்ததினாலோ, கத்தினத்தினாலோ, சலசலப்பு செய்ததினாலோ எரிகோ மதில் விழவில்லை. அது தேவனால் தான் நடந்தது. நான் நினைக்கிறன் அதுதான் தேவன் இஸ்ரவேலர்களும் நாமும் காணவேண்டும் என்று விரும்புகிறார். நம்முடைய கடின உழைப்பு நல்ல காரியம் தான். ஆனால் நம்முடைய சலசலப்பில் நம்புவது என்பது இஸ்ரவேலர்கள் அவர்கள் கத்தினத்தினால்தான் உட்புகிரக்கூடாத மதில்கள் கீழே விழ செய்தன என்று நம்புவதற்கு ஒப்பாகும்.


யோசுவாவும் இஸ்ரவேலர்களும் நமக்கு காட்டுவதுபோல், விசுவாசம், சலசலப்பு ஆகியவற்றிற்கு மத்தியில் இருக்கும் உறவை நாமே சரிசெய்ய முயற்சிக்கக்கூடாது. அதற்கு பதிலாக நாம் அதை.ஏற்று கொள்ளவேண்டும். இந்த எண்ணங்கள் மாறுப்பட்டவைகள் அல்ல. அவைகள் ஒன்றோடு ஒன்று இணைக்க பட்டவைகள். நீதிமொழிகள் 16-இல் சாலொமோன் சொல்வதுபோல, விசுவாசம் மற்றும் சலசலப்பிற்கு மத்தியில் ஒரு சமநிலை இருக்கிறது, அதுவே தேவனை மகிமைப்படுத்தி நமக்கு இளைப்பாறுதலையும் கொடுக்கும். இந்த வேத பகுதியைத்தான் நாம் வரும் மூன்று நாட்கள் தியானிப்போம்.


வேதவசனங்கள்

நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

Trust, Hustle, And Rest

கடினமாக உழைக்க நம்முடைய வேதாகமம் கற்றுக் கொடுக்கிறது, இருப்பினும் கர்த்தர் சொல்லுகிறார் -நாம் அல்ல- கிரியைகளின் பலனைத் தருபவர் கர்த்தர் ஒருவரே என்பதாக. இந்த நான்காவது நாளின் திட்டத்தில், ஒரு கிறிஸ்தவராக, நம்பிக்கைக்கும் ...

More

இந்த திட்டத்தை வழங்கியமைக்காக ஜோர்டான் ரெய்னர் க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, செல்க: http://www.jordanraynor.com/trust/

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்