திட்ட விவரம்

அழுத்தத்தை (stress-ஐ) எப்படி மேற்கொள்வது?மாதிரி

அழுத்தத்தை (stress-ஐ) எப்படி மேற்கொள்வது?

7 ல் 6 நாள்




தாக்குதலுக்கான திட்டம் உன்னிடம் உள்ளதா?

இன்று நான் உனக்கு ஒரு சிறிய கதையைச் சொல்லி ஆரம்பிக்க விரும்புகிறேன். ஏற்கனவே ஒருமுறை உலக கோப்பையை வென்ற சிறந்த விளையாட்டுக் குழுவுடன் நீ பின் அறையில் இருக்கிறாய் என்று கற்பனை செய்து கொள். அன்றைய சுற்றுக்கான விளையாட்டை விளையாட வீரர்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றனர், ஒருவேளை அவர்களின் வாழ்க்கையின் மிகசிறந்த ஆட்டத்திற்காகக் கூட இருக்கலாம். இது ஒரு முக்கியமான தருணம்... இந்த நேரத்தில் வீரர்களில் ஒருவர் பயிற்சியாளரிடம், “இன்றைய ஆட்டத்திற்கான உத்தி என்ன?” என்று கேட்கிறார். அதற்கு பயிற்சியாளர், “எனக்குத் தெரியாது, என்னிடம் உண்மையாக ஒரு திட்டமும் இல்லை. உங்களால் முடிந்த சிறந்த ஆட்டத்தை ஆடுங்கள்!” என்று பதிலளிக்கிறார்.

இப்படிப்பட்ட பதிலில் ஒரு அர்த்தமுமில்லை! இந்த பயிற்சியாளர் தனது அணியையும், தன்னையும், தோல்விக்கு தயார்படுத்தியிருக்கிறார்… எதிரியை எதிர்கொள்ள தெளிவான திட்டம் இல்லாமல், இந்த அணி, சிறந்த வீரர்களை உள்ளடக்கியிருந்தாலும், வெற்றிபெற வாய்ப்பில்லை.

மன அழுத்தத்துடன் இதை ஒப்பிட்டு பார்ப்போம். நாம் மன அழுத்தத்தால் பாதிக்கப்படும்போது, மேலும் பரபரப்பாவது அல்லது ஒன்றுமே செய்யாமல் முடங்கடிக்கப்பட்டதுபோல் இருப்பது போன்ற குணாதிசயங்கள் நம்மில் காணப்படும்.

ஆனால் இது நீ செய்யக்கூடிய விஷயங்களின் எண்ணிக்கையைப் பற்றியது அல்ல... மாறாக சரியானதைச் செய்வதைப் பற்றியது. உனக்கு ஒரு திட்டம், தெய்வீக உத்தி (strategy) தேவை. அதனால்தான், முதலாவதாக ஆண்டவருடன் நேரத்தைச் செலவிட்டு உன் நாளைத் தொடங்குவது அவசியமான செயல்களில் ஒன்றாகும்.

இது மிகவும் வெளிப்படையான ஒன்றுதான், ஆனாலும்... பல மக்கள் தங்கள் நாட்களை பதட்டத்தில் தொடங்குகிறார்கள் - snooze பொத்தானை அழுத்தி, தாமதமாகாமல் இருக்க எழுந்தவுடன் ஓடுகிறார்கள், விஷயங்களை அல்லது பொருட்களை மறந்துவிடுகிறார்கள், ஓட்டத்தில் சாப்பிடுகிறார்கள். இங்கே மன அழுத்தம் வளமாக வளர செழிப்பான சூழ்நிலை உள்ளது.

இயேசு நமக்கு சொன்னார், "திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்." (யோவான் 10:10)

நாம் அனைவரும் வாழ்வதற்காகவே, நிறைவான வாழ்வு வாழ, விளிம்புவரை அர்த்தத்துடன் நிரம்பியிருக்கும், நிரம்பி வழிந்து வாழும் வாழ்க்கையை வாழவே இயேசு வந்தார். என்ன ஒரு வியக்கத்தக்க வாக்குறுதி...

ஆண்டவர் உனக்கு ஜீவன் என்ற பரிசைக் கொடுத்தார், நீ அதை முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். அதை அனுபவிப்பதற்கான சிறந்த வழி ஆண்டவருடன் தனிப்பட்ட மற்றும் நெருக்கமான உறவைக் கொண்டிருப்பதாகும். ஆனால் அங்கு செல்வது, அவருடன் நேரத்தை செலவிடுவதிலிருந்து தொடங்குகிறது.

உன் அன்றாட நாளை அவருடன் பேசுவதன் மூலமும் அவருடைய வார்த்தையில் உள்ள வாக்குதத்தங்களை வாசிப்பதன் மூலமும் ஏன் தொடங்கக்கூடாது?

ஆண்டவர் உன்னுடைய சிறந்த நண்பராக இருக்க விரும்புகிறார், அவசரகாலத்தில் நீ அழுத்தும் பொத்தானாக மட்டும் அல்ல. நீ அவருடைய சாம்பியன் (champion)! பரிசுத்த ஆவியானவர் உன் தெய்வீக பயிற்சியாளர், உனக்கு கற்றுக்கொடுப்பவர்.

ஆண்டவரின் உத்திகளைப் பெறவும், தடைகளை ஒவ்வொன்றாகக் கடக்கவும் அவருடன் நேரத்தைச் செலவிடு.

நான் உன்னைப் பாராட்டுகிறேன், உனக்காக ஜெபிக்கிறேன்!

வேதவசனங்கள்

நாள் 5நாள் 7

இந்த திட்டத்தைப் பற்றி

அழுத்தத்தை (stress-ஐ) எப்படி மேற்கொள்வது?

பல பொறுப்புகளின் மத்தியில் தத்தளித்து கொண்டிருக்கிறாயா? குடும்ப பாரம், வேலை பாரம், சமுதாய பாரம் என்று பலவிதமான பாரங்கள் உன்னை அழுத்துகிறதா? எல்லா பாரங்களும் பிரச்சனைகளும் உன்னை அநேக சிந்தனைகளில் ஆழ்த்துகிறதா? எதை செய்யவே...

More

இந்தத் திட்டத்தை வழங்கியதற்காக XXக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=overcomestress

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்