திட்ட விவரம்

வெற்றிகரமான உறவுகள்மாதிரி

வெற்றிகரமான உறவுகள்

7 ல் 7 நாள்




அன்பை வெளிப்படுத்தும் வார்த்தைகள்…

உறவுகளை பற்றிய இந்த தொடரின் முடிவிற்கு கடந்து வந்துளோம்... இந்த தொடருக்கான அடித்தளத்தையும் உள்ளுயிர்ப்பையும் வழங்கிய, உறவு நிபுணர்களான எரிக் மற்றும் ரேச்சல் டூபோருக்கு விசேஷித்த நன்றி!

நீதிமொழிகள் புத்தகம் நம் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான சிறந்த அறிவுரைகளால் நிரம்பி வழிகிறது... நம்முடைய உறவுமுறைகள், வாழ்க்கை முறைகள் அல்லது நாம் தேர்ந்துகொள்பவைகள் இப்படி எதைபற்றி இருந்தாலும் சரி…

நாம் அனைவரும் வாரத்தில் ஒருமுறையாவது சந்திக்கும் கோபத்தின்

சூழ்நிலையை எப்படி சரிசெய்யலாம் என்பதான மகா ரகசியங்களை நீதிமொழிகள் 15 நம்மோடு பேசுகிறது. அது கூறுவது, "மெதுவான பிரதியுத்தரம் உக்கிரத்தை மாற்றும்; கடுஞ்சொற்களோ கோபத்தை எழுப்பும்." (வேதாகமம், நீதிமொழிகள் 15:1)

ஆண்டவருடைய உதவியோடு, புண்படுத்தும் வார்த்தைகளை கேட்கும்போது, கனிவான மென்மையான பதிலை உங்களால் பேசமுடியும். கோபத்தை மேலோங்க விடுவதை விட, மீண்டும் ஆண்டவரிடம் சென்று பெலத்தையும், நீங்கள் பேசவேண்டிய வார்த்தைகளையும் உங்களுக்கு தரும்படி கேளுங்கள்.

மற்றோரு வழிகாட்டும் குறிப்பை யாக்கோபு 1:19-20ல் காணலாம், அது சொல்வதாவது, "ஆகையால், என் பிரியமான சகோதரரே, யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயும் இருக்கக்கடவர்கள்; மனுஷருடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்கமாட்டாதே."

இந்த வார்தைகைளை நீங்கள் மனதில் எடுத்துக்கொள்வதால், நீங்கள் தன்னடக்கத்திலும் உணர்ச்சிகளை கையாளுவதிலும் வளர்வது மட்டுமின்றி (உணர்ச்சிகள் உங்களை கையாள்வதை விட), சம்பந்தப்பட்ட நபருடன் ஒரு சமாதான நிலைக்கு உங்கள் உறவு வந்துவிடும். ஆம், கோபம் மேற்கொள்ளவிருந்த சூழ்நிலைகளில் சமாதானத்தை கொண்டுவர ஆண்டவர் உங்களைப் பயன்டுத்துவார்!

இன்றைக்கும், இனி வரும் நாட்களிலும், பொருமையாக பேசுங்கள், அப்படி பேசும்போது, ​​கனிவாகவும் அன்பாகவும் பதிலளிக்க நான் உங்களை சவால் செய்கிறேன்…

உங்கள் வாய் சமாதானத்தையும் அன்பையும் தெரிவிக்கும் வார்த்தைகளால் நிரம்பியிருக்கட்டும். ஆண்டவரின் அன்பின் தூதராக இருங்கள்... உங்களுடைய வார்த்தைகள் இன்று குணமடைய செய்யட்டும்!

இந்த வாசிப்பின் உரைகள் "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்க மின்னஞ்சல்களிலிருந்து எடுக்கப்பட்டது. "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற ஊக்கமளிக்கும் தினசரி மின்னஞ்சலை பெறுவதற்கு இங்கே இலவசமாக பதிவு செய்யலாம்: https://tamil.jesus.net/

நாள் 6

இந்த திட்டத்தைப் பற்றி

வெற்றிகரமான உறவுகள்

அவரோடு உறவாடுவதற்காகவே ஆண்டவர் மனிதனை படைத்தார். நாம் உறவுமுறைக்குள் இருக்க வேண்டும் என்பதே ஆண்டவரின் விருப்பம். நாம் ஆண்டவரிடமும், நம்மோடும் மற்றவர்களோடும் நன்மையான, உறுதியான உறவுகளில் இருக்க வேண்டும் என்பதே ஆண்டவரின் த...

More

இந்த திட்டத்தை வழங்கியதற்காக tamil.jesus.netக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tamil.jesus.net/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=ReadingPlan&utm_content=successfulrelationships

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்