திட்ட விவரம்

உண்மையான அன்பு என்ன?மாதிரி

What Is True Love?

12 ல் 4 நாள்

சுவிசேஷத்திற்கு நமது மறுமொழி.

வாசிக்க:எபேசியர் 2:1-10,1:1-15 மற்றும் 3:14-21.

நற்செய்தி உங்களுக்கு மிகவும் பரிச்சயமானதாகவோ அல்லது அன்னியமானதாகவோ இருக்கலாம். அதைக் குறித்து சிந்தித்து, மெதுவாக, ஜெபத்தோடு, தியானம் செய்யுங்கள். இதில் உங்களுக்கு உதவிட, வேதவசனங்களையும், வாசிப்புப்பகுதியையும் தெரிந்து எடுத்துள்ளோம். சுவிசேஷம் உங்கள் உள்ளத்திலும், இதயத்திலும், நல்ல தெளிவை, வல்லமையை, மென்மையைக் கொண்டுவர ஆண்டவரிடம் வேண்டுங்கள்.



இயேசுவையும் அவரது தியாகத்தையும் புரிந்து கொள்ளவும், நம்மையும் நமது இதயத்தையும் ஆண்டவர் எப்படி காண்கிறார் என்பதை அறிந்து கொள்ளவும் விழைகின்றோம். நாம் ஏமாற்றப்பட விரும்புவதில்லை. சுவிசேஷம் என்பது ஒரு அறிவு சார்ந்த பயிற்சி அல்ல; நமது இதயம் சார்ந்த ஒரு தேடுதல்.



உங்கள் வாழ்க்கையில் சுவிசேஷத்தின் வல்லமையைக் குறித்தும், உங்கள்மீது அதன் தாக்கம் பற்றியும் சிந்தியுங்கள். அடுத்த சில நாட்கள் தொடர்ந்து இதையே செய்யுங்கள். உங்கள் நாட்காட்டியின் துணையோடு, ஆண்டவரைத் துதிக்கவும், சுவிசேஷத்தின் மூலம் உங்கள் வாழ்க்கையில் அவர் செய்துள்ள எல்லாவற்றையும் கொண்டாட வும், செலவிடுவதற்கென 15-20 நிமிடங்களைக் குறிப்பிட்டு, ஒரு வாரத்திற்குப் பின்னுள்ள ஒரு நாளையும் நேரத்தையும் பிரத்யேகப் படுத்துங்கள்.



நீங்கள் நற்செய்தியைத் தியானிக்கும்போது, உங்களிடம் பூரண நேர்மையோடும், ஆண்டவரிடத்தில் முற்றிலும் வெளிப்படையாகவும் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். உங்களது சந்தேகங்கள், கேள்விகள், அலட்சியம், இருதயக்கடினம், அக்கறைஇன்மை, பொதுவான அவிசுவாசம், எதுவாக இருந்தாலும் அதை அவரிடம் தெரிவியுங்கள். கிறிஸ்துவுக்குள் இருக்கும் போது நாம் எதற்கும் பயப்படத் தேவையில்லை. நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், நம்மை மன்னிப்பதற்கு அவர் உண்மையுள்ளவராக இருக்கிறார் என்று நமக்கு அவர் வாக்களித்திருக்கிறார். (1 யோவான் 1:9)
நாள் 3நாள் 5

இந்த திட்டத்தைப் பற்றி

What Is True Love?

அன்பு என்றால் உண்மையாக என்ன என்று எல்லாரும் அறிய விரும்புகிறோம். ஆனால், அன்பை பற்றி பைபிள் என்ன சொல்லுகிறது என்று சிலர் தான் பார்கின்றனர். அன்பு என்பது வேதாகமத்தின் ஒரு மைய கருத்து, மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையின் மிக முக்...

More

இந்த திட்டத்தை வழங்குவதற்காக, திசில்பென்ட் மினிஸ்ட்ரிஸ் க்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய, www.thistlebendministries.org க்கு செல்லவும்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்