திட்ட விவரம்

உங்கள் அன்றாட வாழ்க்கைக்கான வாக்குறுதிகள்மாதிரி

உங்கள் அன்றாட வாழ்க்கைக்கான வாக்குறுதிகள்

14 ல் 9 நாள்

எல்லைகளுக்கு ஒரு நோக்கம் உண்டு!

உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார். - நீதிமொழிகள் 3:5-6

நம் வாழ்விலே சுயகட்டுப்பாடு மற்றும் ஒழுக்கக் கட்டுப்பாட்டை பயிற்சிப்பதும், நம் வாழ்விலே எல்லைகளையும், எல்லை கோடுகளையும் நியமிப்பதும் நாம் செய்யக்கூடிய அதிமுக்கியமான காரியங்களில் சில. ஒழுக்கக் கட்டுப்பாடற்ற வாழ்க்கை என்பது கவலையீனத்தால் நிறைந்ததாக இருக்கின்றது.

தேவனுடைய பாதுகாப்பு மண்டலத்திலே நம்மை வைக்க தேவனுடைய வார்த்தையானது தேவையான எல்லைகளை நிர்ணயிக்கிறது. நாம் பாதுகாப்பாக இருக்கும்படி என்ன செய்யலாம், என்ன செய்யாமல் இருக்கலாம் என்று சொல்கிறது.

கிறிஸ்தவர்களாக, நாம் விளிம்பில் வாழ்வது சுவாரசியமாக இருக்கிறது என்று நினைக்கலாம். ‘ஆம்’ நான் விளிம்பில் வாழ்கிறேன் என்ற பிம்பத்தை விரும்பலாம். வாழ்க்கையை பார்க்கக் கூடிய பிரசித்தி பெற்ற வழியாக மாறிவிட்டது. ஆனால் உண்மையிலேயே தேவன் நாம் விளிம்பில் வாழ்வதை விரும்புவதில்லை. ஏனென்றால் நாம் விளிம்பிலே வாழ்கிறோம் என்றால் தவறு செய்யாமல் இருக்க எல்லைக்கோடு அங்கேயே இருக்க இயலாது.

நெடுஞ்சாலைகளில் கோடுகள் உண்டு. இரண்டு பக்கங்களிலும் ஒவ்வொன்று, நடுவிலும் ஒன்று. நாம் வாகனத்தை ஓட்டும் போது இந்த கோடுகள், நமக்கு பாதுகாப்பு அளிக்கின்றது. ஒரு புறம் இருக்கும் கோட்டை தாண்டி நாம் செல்வோம் என்றால் சாக்கடைக்குள் விழுந்து விடுவோம். நடுவில் இருக்கும் கோட்டை தாண்டுவோம் என்றால் நாம் கொல்லப்படலாம். நாம் அந்தக் கோடுகளை விரும்புகிறோம் ஏனென்றால் அவை நம்மை பாதுகாக்கிறது.

நம் தனிப்பட்ட வாழ்விலும் அப்படித்தான். நாம் எல்லைகளையும், எல்லைக் கோடுகளையும், ஓரங்களையும் கொண்டிருக்கும்போது நாம் ஒன்றாக உணர்வோம். தேவனுடைய சமாதானத்தை அனுபவிப்போம்.

இதற்கான விடை, நாம் வாழவேண்டிய எல்லைக் கோடுகளை நியமிக்கும் தேவனுடைய வார்த்தைக்கு செல்வதே ஆகும். அனுதினமும் தேவனே உங்கள் பாதையை நடத்தட்டும்.

ஜெபம்

என் வாழ்விலே எல்லைகளின் தேவையை நான் உணர்கிறேன். நான் உன்னுடைய வார்த்தையை வாசிக்கையில், என் வாழ்க்கையில் உம்முடைய ஆரோக்கியமான எல்லைகளை எப்படி பொருத்திக் கொள்வது என்பதை இன்றே எனக்கு காண்பீராக.

வேதவசனங்கள்

நாள் 8நாள் 10

இந்த திட்டத்தைப் பற்றி

உங்கள் அன்றாட வாழ்க்கைக்கான வாக்குறுதிகள்

ஜாய்ஸ் மேயரின் நடைமுறை வேதபாட போதனையுடன் உங்கள் நாளைத் தொடங்குங்கள். இப்படிப்பட்ட தினசரி பக்திக்கான வேத பாடங்கள் உங்களுக்கு நம்பிக்கையைத் தரும், உங்கள் மனதைப் புதுப்பிக்க உதவுகிறது மற்றும் ஒவ்வொரு நாளும் நீங்கள் நோக்கத்த...

More

இந்த திட்டத்தை வழங்கிய ஜாய்ஸ் மேயர் அமைச்சகங்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tv.joycemeyer.org/tamil/

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்