திட்ட விவரம்

உண்மையாகவே என்னால் பாவ சோதனைகளை மேற்கொள்ள முடியுமா?மாதிரி

Can I Really Overcome Sin and Temptation?

5 ல் 1 நாள்

உண்மையாகவே என்னால் பாவ சோதனைகளை மேற்கொள்ள முடியுமா?


1 சாமுவேல் 13:14-ஐ நாம் வாசிக்கும்போது, கர்த்தர் சவுலின் ராஜ்யபாரத்தை தள்ளி, “தம்முடைய இருதயத்திற்கு ஏற்ற ஒரு மனுஷனை தேடி, அவனை சவுலின் இடத்தில், தம் ஜனங்கள் மேல் தலைவனாய் இருக்க கட்டளையிட்டார்” என்று தீர்க்கதரிசி சாமுவேல் சவுலிடம் சொல்கிறார்.



ஆனால் பல வருடங்கள் கழித்து, “கர்த்தருடைய இருதயத்திற்கு ஏற்ற” அதே மனுஷன், வேறொருவரின் மனைவியோடு கூட தவறான உறவு வைத்து, அவளை கர்ப்பமாக்கியது மாத்திரமில்லாமல் அவளுடைய கணவனை திட்டமிட்டு கொலை செய்து, அவளை தனக்கு மனைவியாக்கி கொண்டான்.



இந்த ஒற்றை சம்பவத்தில் தாவீது ராஜா பத்து கட்டளைகளில் ஒன்பதை மீறியிருக்கிறார்:



10: தன்னுடைய அயலானின் மனைவியை இச்சித்தார்.



9: தம்முடைய பாவத்தை குறித்து பொய் சொன்னார்.



8: அவளை தனக்கென்று திருடிக்கொண்டார்.



7: விபச்சாரம் செய்தார்.



6: அவள் கணவனை கொலை செய்தார்.



5: தன்னுடைய பெற்றோர்களை கனவீனம் பண்ணினார்.



2: பத்சேபாளை விக்கிரகமாக கொண்டிருந்தார்.



1 மற்றும் 3: கர்த்தருக்கும், அவர் பரிசுத்த நாமத்திற்கும் தூஷணத்தை கொண்டு வந்தார்.



நமக்கு தெரிந்த வரையிலும், ஓய்வு நாளின் கற்பனையை மீறவில்லை என்று நினைக்கிறோம்.



கர்த்தரின் இருதயத்திற்கு ஏற்ற மனுஷன் இப்படி செய்ய வேண்டுவதென்ன?



நாம் ஏன் பாவம் செய்கிறோம்? பாவ சோதனைகளை நாம் மேற்கொள்வது எப்படி? மேற்கொள்ளாத போது நாம் என்ன செய்ய வேண்டும்?



இவைகளை தாம் நாம் அடுத்த நான்கு நாட்களுக்கு கற்றுக்கொள்ள போகிறோம்.



சோதிக்கப்படுவதை எதிர்பாருங்கள்


இயேசு கிறிஸ்து பிசாசினுடைய சோதனைகளையெல்லாம் மேற்கொண்ட பிறகு, “பிசாசானவன் சிலகாலம் அவரை விட்டு விலகி போனான்” என்று வாசிக்கிறோம் (லூக்கா 4:13). நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே சோதனைகளை சந்தித்திருப்பாரானால், நாமும் சோதிக்கப்படுவது அதிக நிச்சயமே.



பிசாசு நிஜமானவன். அவன் உங்களை மிகவும் வெறுக்கிறான். நீங்களே அவனுடைய எதிரி. பிசாசு “ஆதிமுதற்கொண்டே மனுஷகொலைபாதகனும், பொய்யனும் பொய்க்கு பிதாவுமாய் இருக்கிறான்” என்று இயேசு கிறிஸ்து நம்மை எச்சரித்திருக்கிறார். (யோவான் 8:44). அவன் “கெர்ச்சிக்கிற சிங்கம் போல எவனை விழுங்கலாம் என்று வகைதேடி சுற்றி திரிகிறான்.” (1 பேதுரு 5:8). அவன் நம் ஒவ்வொருவரையும் சோதித்து, ஏமாற்ற முயற்சிப்பான்.



ஏனென்றால்: “பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து பாவத்தை பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும் போது, மரணத்தை பிறப்பிக்கும்” (யாக்கோபு 1:15).



குறித்து வைத்துக்கொள்ளுங்கள்: பாவம் உங்களை, நீங்கள் செல்லவேண்டிய தூரத்தை காட்டிலும் அதிக தூரம் கொண்டு சென்று, நீங்கள் தங்க வேண்டிய நேரத்தை காட்டிலும் அதிக நேரம் தங்க வைத்து, நீங்கள் செலுத்த வேண்டிய கிரயத்தை காட்டிலும், அதிக கிரயத்தை செலுத்த வைத்துவிடும்.



எப்போதும்



தாவீது இராஜாவை கேட்டு பாருங்கள். 2 சாமுவேல் 12-ஐ வாசித்து, பாவத்தின் கொடுமையான விளைவுகளை அறிந்து கொள்ளுங்கள்.


நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

Can I Really Overcome Sin and Temptation?

"நான் ஏன் அந்த பாவத்தோடு கூட போராடி கொண்டிருக்கிறேன்" என்று என்றைக்காவது உங்களை பார்த்து நீங்களே கேட்டிருக்கிறீர்களா? ரோமர் 7:15 -ல் அப்போஸ்தலனாகிய பவுல் சொல்கிறார் பாருங்கள்: "நான் விரும்புகிறதை செய்யாமல், நான் வெறுக்கி...

More

இந்த தியான திட்டத்தை எங்களுக்கு அளித்தமைக்கு 'டெனிசன் போரம்' என்ற இணைய பக்கத்திற்கு எங்களது நன்றிகளைத் தெரிவித்து கொள்கிறோம். மேலும் விபரங்களுக்கு: http://www.denisonforum.org

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்