திட்ட விவரம்

மறுரூபமாக்க மறுரூபமாகுமாதிரி

மறுரூபமாக்க மறுரூபமாகு

3 ல் 3 நாள்

திருச்சபையில்  நமது  பங்கு 


சகோதரரே, நீங்கள் எல்லாரும் ஒரே காரியத்தைப்  பேசவும்.... உங்களுக்குப் புத்தி  சொல்லுகிறேன்  - 1 கொரிந்தியார்  1:10


தேவன் கொடுத்த  அதிகாரத்துடன், திருச்சபையில் 


இருந்த  பிளவுகளை  இணைக்கும்  பாலமாக  பவுல்  செயல்படுகிறார் . அவர் எந்த  கட்சியினரையும்  சாராமல் தேவனுக்குச் சேவை  செய்வதையே  பிரதானப் படுத்துகிறார் . இன்றையத் திருச்சபைகளும்  எண்ணற்ற  கருத்து  வேறுபாடுகளையும் , எண்ணங்களையும்  கொண்டிருக்கிறது . மாற்று  கருத்துக்கள்  கவனத்துடன் , தகுந்த  விளக்கத்துடன்  களையப்பட வேண்டும் .  இந்தவிதமான  அபிப்பிராய  பேதங்கள் , நாம்  அனைவரும்  கிறிஸ்துவைப்  பின்பற்ற  வேண்டும்  என்ற ஒரே  நோக்கத்துடன்  செயல்பட்டால்  எளிதில்  தீர்வு  காணலாம் . தங்கள்  சிந்தனைகளிலும்  கருத்துக்களிலும்  மாறுபடுகிறவர்கள் , அந்த  உயரிய  நோக்கத்தை  உடைத்து , இரண்டு  குழுக்களாகப்  பிரிந்து  தவறான  போதனைகளைப்  பிரசங்கிக்கிறவர்களாகிறார்கள் . அவர்கள்  விசுவாசத்தின்  ஆரம்ப  நிலைக்கே  கொண்டுவரப்பட்டு , கிறிஸ்துவை  மட்டுமே  முளைக்கல்லாகக்  கொண்டு  புத்தம்  புதிய  ஆரம்பத்தைச்   செய்யும்படி  ஊக்குவிக்கப்படவேண்டும் . இந்த  சிறப்பான  தொழில்  நுட்ப  கண்டுபிடிப்புகளின்  காலத்திலும்  கிறிஸ்து  மட்டுமே  முக்கியப்படுத்தப் படவேண்டும் . இயேசு  கிறிஸ்துவைப்  பூரணமாக  வெளிப்படுத்துவதே  நமது  அனுபவமாக  இருந்து ,  மற்றவர்களும்  தங்களைக்  கிறிஸ்துவில்  மட்டுமே  முக்கியப்படுத்த  ஈர்க்கப்படவேண்டும்.  எனவே  நாம் , சடங்காச்சாரங்களுக்கும்  , பழமையான  பழக்க வழக்கங்களுக்கும்  இடம்  கொடாமல் , கிறிஸ்துவை  மட்டுமே  மகிமைப் படுத்தும் அதிகாரத்துடன்  நற்செய்தியைப்  பிரசங்கிக்க வேண்டும் .  


நாம்  நமது  பகுதியைச்  செவ்வனே  செய்யும் பொழுது  தேவன் அவருடைய  வல்லமையை  விளங்கச்செய்வார் .


"...பவுல்  உங்களுக்காகச்  சிலுவையில்  அறையப்படவில்லை ."


நாம்  இன்னும்  பாவிகளாயிருக்கையில்  கிறிஸ்து  நமக்காகச் சிலுவையில்  மரித்தார்  என்பதே  முக்கியமானது . வேறு  தேவதூதரோ , நியாயப் பிரமாணத்தைப்  போதிக்கிற ஆசாரியர்களோ  மரிக்கவில்லை. அணைத்து  செயல்களிலும்  கிறிஸ்து  ஒருவரை  மட்டுமே  மகிமைப் படுத்துவோம் .  மற்றவரை  அல்ல.  பார்க்கக்கூடிய  செயல்களை  நம்பி , அற்புதங்களை எதிர்பார்த்து  தர்க்கங்களை  எழுப்புகின்றனர். அவர்களை  கிறிஸ்து  மரித்த  சிலுவைக்கு  நேராக  நடத்துவது  அவசியம்.  அதுதான்   தேவனுடைய  வல்லமையையும் , அன்பையும்  விளக்குகின்ற  அற்புதம் .


ஆகையால் தேவனால் அழைக்கப்பட்டவர்கள்  என்று  கருதுகிற  நாம்  ஒரு  எளிமையான  நிலைப்பாட்டை  ஏற்றுக்  கொள்ளவேண்டும்.  அது  என்னவென்றால்  நாம்  அறிவுள்ளவனாகவோ  அல்லது பலசாலியாகவோ  இருந்ததினால்  தேவன் அழைக்கவில்லை .


ஆனால் நமது  அறிவீனத்திலும்  ஞானிகளை வெட்கப்படுத்துவதற்குமே  நம்மை தேவன் தெரிந்து  கொண்டார் .


இழிவான  உலகக் காரியங்கள்  நமது  இருதயத்தை  நெருக்கியிருந்தாலும்,  தேவனுடைய  உன்னதமான  அழைப்புக்குத் தகுதியுள்ளவர்களாகும்படி , நம்முடைய  வாழ்க்கையைக்  தேவன் பொறுப்பெடுத்துக்கொண்டு  அவருடைய  மகிமைக்காக  நம்மைப்  பயன்படுத்த  அனுமதிப்போம் .  

வேதவசனங்கள்

நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

மறுரூபமாக்க மறுரூபமாகு

தேவன் நம்மை அழைத்ததின் நோக்கத்தை அறிந்து அனுபவிப்பது, சாட்சியுள்ள வாழ்க்கை வாழ்வது, பிறருக்கு அவருடைய இரட்சிப்பின் கிரியையை அறிவிப்பது, எதிர் கால நம்பிக்கையுடன் நிகழ்காலங்களைக் கடத்தல், தேவன் தெரிந்து கொண்ட தகுதியுள்ள பா...

More

ഈ പദ്ധതി നൽകിയതിന് സി ജെബരാജിന് നന്ദി പറയാൻ ഞങ്ങൾ ആഗ്രഹിക്കുന്നു. കൂടുതൽ വിവരങ്ങൾക്ക്, സന്ദർശിക്കുക: http://jebaraj1.blogspot.com/

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்