திட்ட விவரம்

பரிசுமாதிரி

The Gift

5 ல் 1 நாள்

அதிசயத்தின் வேகத்தைத் தழுவுங்கள்



இது ஆண்டின் முக்கியமான நேரம், ஆம்! இது நமது கிறிஸ்துமஸ் கொண்டாட்ட காலம். இந்தக் கொண்டாட்டங்களுக்கு மத்தியில், சில நேரங்களில் நாம் செய்வதாக தீர்மானித்த வேலைகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகலாம், அவைகளைச் செய்ய முடியவில்லை என்ற எண்ணம் நமக்கு சோர்வை அளிக்கலாம், மேலும் விடுமுறைகள் நமது பழைய மனதின் ஆழ்ந்த ஏமாற்றங்களை கூட நினைவூட்ட கூடலாம்.



ஒருவேளை, நாம் கிறிஸ்துமஸ் கால பரபரப்பை இடைநிறுத்தி, ஆழ்ந்த மகிழ்ச்சியைக் கண்டறியத் தொடங்கினால்? ஆச்சர்யத்தின் வேகத்தைத் தழுவ நம் வேகத்தைக் குறைத்தால்? முடியுமா?



நம்மால் முடியும். உங்களாலும் கண்டிப்பாக முடியும். ஆனால் இந்த ஆண்டின் மிக அற்புதமான நேரத்தை அனுபவிக்க, இதை ஆண்டின் மிகவும் சிறப்பு வாய்ந்த நேரமாக மாற்ற வேண்டும். ஏனெனில் வியப்பும் நம் தேவனை வழிபடும் வழிபாடும் ஒன்றோடொன்று இணைந்து கைகோர்த்து செல்லக்கூடியவை.



இது எளிதான ஒன்றாக இல்லாதது போல் தோன்றலாம். ஒருவேளை, இந்த ஆண்டு உங்களுக்கு மிகவும் கடினமான ஒன்றாக இருந்திருக்கலாம். ஒருவேளை நீங்கள் நேசிப்பவரின் இழப்பையோ, ஒரு கனவின் இழப்பையோ அல்லது உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று நீங்கள் நினைத்தீர்களோ அவ்வாறு இல்லாமல் துன்பம் நிறைந்ததாக மாறியிருக்கலாம். ஒருவேளை நீங்கள் நீண்ட காலமாக நன்மையான ஒரு விஷயத்தை எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கலாம். எப்படியாக இருந்தாலும், உங்கள் கடந்த கால அனுபவங்கள் உங்கள் எதிர்கால எதிர்பார்ப்புகளை ஆணையிட வேண்டியதில்லை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.



நாம் வணங்கும்போது, ​​வணங்குபவரின் மீதோ அல்லது வணங்கப்படுபவை மீதோ பிரமிப்பை வெளிப்படுத்துகிறோம். ஆண்டின் இந்த நேரத்தில், நாம் அனைவரும் வழிபடுவதற்கு காரணம் இருக்கிறது - அது நமது தற்போதைய சூழ்நிலைகளுடன் பிணைக்கப்படவில்லை. இயேசுவின் மூலம் நாம் பெற்ற கிருபையின் வரத்தின் காரணமாக நாம் வழிபடுகிறோம்.



இயேசுவின் பிறப்பைப் பற்றி சில ஞானிகள் கேள்விப்பட்டதால் என்ன நடக்கிறது என்று பாருங்கள்:



அவர்கள் அந்த நட்சத்திரத்தை கண்ட போது, மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தார்கள். அவர்கள் அந்த வீட்டுக்குள் பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாய் விழுந்து அதைப் பணிந்துகொண்டு, தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்கத்தையும் வெள்ளைப்போளத்தையும் அதற்குக் காணிக்கையாக வைத்தார்கள். (மத்தேயு 2:10,11)



தேவன் நமக்கு ஒரு இரட்சகரை அனுப்புவார் என்கின்ற வாக்கு நிறைவேற பல நூறு ஆண்டுகளாக மக்கள் காத்திருந்தார்கள். தேவன் தம்முடைய வாக்குறுதிகளைக் காப்பாற்றுகிறார் என்பதற்கான சிறந்த நினைவூட்டல்களில் கிறிஸ்துமஸ் ஒன்றாகும். தேவன் நம்முடன் இருக்க விரும்புகிறார் என்பதைக் காட்ட அவர் இயேசுவை இறுதி பரிசாக அனுப்பினார்.



சாஸ்திரிகள் தடையற்ற மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். அவர்கள் களி கூர்ந்தனர். அவர்கள் முழங்காலில் விழுந்து, இவ்வளவு ஆச்சரியத்தை எதிர்கொள்ளும் போது நாம் செய்யக்கூடிய ஒரே காரியத்தை செய்தார்கள் அதாவது தங்கள் தலைகளைத் தாழ்த்தி இயேசு கிறிஸ்துவை வணங்கினார்கள்.



கடவுளை வணங்குவதன் மூலமும், இயேசு கிறிஸ்துவை நமக்கு பரிசாக கொடுத்ததற்காக அவருக்கு நன்றி தெரிவிப்பதன் மூலமும் ஆச்சரியத்தின் வேகத்தை மெதுவாக்குங்கள். அடுத்த சில நாட்களில், ஞானிகள் (சாஸ்திரிகள்), அவர்கள் இயேசுவுக்குக் கொடுத்த பரிசுகள் மற்றும் அந்த பரிசுகள் எவ்வாறு நம்மை ஆலயத்திற்கு அழைத்துச் செல்லும் என்பதைப் பற்றி மேலும் பேசுவோம். கிறிஸ்மஸின் மகிழ்ச்சியை மீட்டெடுப்பதற்கான நடைமுறை வழிகளைப் பற்றி நாம் பேசுவோம், மேலும் நமது அதிசய உணர்வை மீட்டெடுக்க தேவனிடம் கேட்போம்.



ஜெபியுங்கள்: தேவனே, இந்த கிறிஸ்மஸ் அதிசயத்தின் வேகத்தில் என்னை மெதுவாக்குங்கள். நீங்கள் யார் என்பதை எனக்கு நினைவூட்டி, உங்களை மகிழ்ச்சியுடன் வணங்க எனக்கு உதவுங்கள். நான் செய்ய வேண்டியவை பட்டியலில் கவனம் செலுத்துவதை நிறுத்திவிட்டு, உங்கள் குமாரன் இயேசுவின் பரிசில் கவனம் செலுத்த எனக்கு உதவுங்கள். இயேசுவின் நாமத்தில், ஆமென்



சிந்தனை: இந்த கிறிஸ்துமஸில் உங்கள் ஆச்சரிய உணர்வை எவ்வாறு அதிகரிக்கலாம்? கிறிஸ்மஸ் சீசன் முழுவதும் நீங்கள் வழிபடும் சில வழிகள் யாவை?

நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

The Gift

இது ஆண்டின் மிக அற்புதமான நேரம், ஆனால் விடுமுறை நாட்கள் பொதுவாக நாம் கண்ணை மூடி திறப்பதற்குள் வேகமாக கடந்து செல்லும். இந்த கிறிஸ்மஸ் காலங்களில், நாம் வேதத்தை தியானிப்பதன் மூலம் நம் வாழ்வின் அதிசயங்களை மறுபடியும் மீட்டெடு...

More

இந்தத் திட்டத்தை வழங்கிய LifeChurchக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் விபரங்களுக்கு https://www.life.church/ஐ பார்வையிடுங்கள்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்