திட்ட விவரம்

தேவன் + இலக்குகள்: ஒரு கிறிஸ்தவராக இலக்குகளை எவ்வாறு அமைப்பதுமாதிரி

GOD + GOALS: How To Set Goals As A Christian

5 ல் 1 நாள்

நாள்: 1 ஒரு கிறிஸ்தவராக நமக்காக இலக்குகளை வைத்துக்கொள்வது சரியா?



நீங்கள் தேவனைப் பின்பற்றவும், நோக்கத்துடன் இலக்குகளை அடையவும் விரும்புகிறீர்கள். ஆனால் இலக்குகளை நிர்ணயிப்பது உங்களுக்கான தேவனின் திட்டங்களிலிருந்து உங்களை வெளியே‌ வழிநடத்துமோ என்று நீங்கள் கவலைப்படுகிறீர்கள். ஆகவே தான், நீங்கள் "ஒரு கிறிஸ்தவராக இலக்குகளை நிர்ணயிப்பது சரியா? இதை எப்படி செய்வது மற்றும் அவருடைய விருப்பத்திற்கு ஏற்ப இருப்பது பற்றி தேவனுடைய வார்த்தை என்ன கூறுகிறது?" என்று ஆச்சரியப்படுகிறீர்கள். இலக்குகள், குறிக்கோளுடன் திட்டமிடுதல் மற்றும் நமக்கு வழங்கப்பட்டதை நன்றாகப் பராமரிப்பது பற்றி வேதாகமத்தில் தேவன் நிறைய விஷயங்களை குறிப்பிட்டுள்ளார்.



ஒரே பதில்: இலக்குகள் நல்லது தான்! இயேசுவுக்கு கூட இலக்குகள் இருந்தன. நாம் தற்செயலாக அல்ல, நோக்கத்துடன் வாழ வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். நீங்கள் அவருடைய விருப்பத்தை கேட்கிறீர்கள், தேடுகிறீர்கள் என்பதே இந்த வாழ்க்கையை நீங்கள் சிறப்பாக செய்ய விரும்புகிறீர்கள் என்பதாகும். தேவனுடைய வார்த்தையே சரியான இலக்குகளை எவ்வாறு நிர்ணயிப்பது மற்றும் எப்படி அவற்றை அடைய உந்துதலாக இருப்பது என்பதை உங்களுக்கு வெளிச்சம் போட உள்ளது.



ஆனால், அதற்காக வேதாகமத்தில் இலக்கை நிர்ணயிப்பதற்கான சரிபார்ப்பு பட்டியல் அல்லது விரைவான தீர்வு சூத்திரத்தைக் கண்டுபிடிக்க எதிர்பார்க்க வேண்டாம். அது அவ்வளவு சுலபமாக இருந்தால், நாம் பட்டியலைப் படித்து, அதைச் சரிபார்த்து, நமது திட்டங்களைப் பற்றி ஒருபோதும் பேசாமல் செய்திருப்போம். இது விதிகளைப் பின்பற்றுவதைப் பற்றியது அல்ல, தனித்துவமான வரங்களையும், பயன்படுத்தக்கூடிய தாலந்துகளையும் கொண்டு உங்களை உருவாக்கியவருடனான உறவைப் பற்றியது அதாவது தேவனுடான உறவு.



நல்ல இலக்குகளை வைத்துக்கொள்வதற்கு மாற்று? குறிக்கோள் இல்லாமல் வாழ்க்கை போகிற போக்கில் சுற்றித் திரிவதாகும். இதைப் பற்றி சிந்தியுங்கள். வேதாகமத்தில் உள்ள முக்கிய நபர்கள் எவரும் ஒன்றும் செய்யாமல் உட்கார்ந்திருந்தார்களா? அவர்களுடைய தவறியது உண்மைதான், ஆனால் மோசே, தாவீது, சாலமோன், எஸ்தர், ரூத், யோவான், பவுல், மற்றும் இயேசுவுக்கு இலக்குகள் இருந்தன, மேலும் அவர்கள் தேவனின் பலத்தினாலும் ஞானத்தினாலும் அவரை அண்டி நடந்தனர். இதையே நீங்களும் செய்ய போகிறீர்கள், ஒரு சிறிய படி எடுத்து வைத்து விசுவாசத்தில் ஒரு பெரிய பாய்ச்சலை பாயப்போகிறீர்கள்.



என்னுடன் சேர்ந்து ஜெபம் செய்யுங்கள்:ஆண்டவரே, நான் உம்மைப் பின்பற்ற விரும்புகிறேன், என் வாழ்க்கைக்காக உமது விருப்பத்துடன் இணையும் இலக்குகளை அமைத்துக் கொள்கிறேன். உமது பெரிய நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட தனிப்பட்ட பரிசுகள் மற்றும் திறமைகளுடன் என்னை உருவாக்கியதற்கு நன்றி. நீர் செல்லும் இடத்திற்கு நான் செல்ல விரும்புகிறேன். நீர் விரும்பும் வழியில் இலக்குகளை எவ்வாறு அமைப்பது என்பதை எனக்குக் காட்டும். திட்டமிடல் மற்றும் நோக்கம் குறித்த உமது ஞானம் எனக்குத் தேவை, எனவே நீர் எனக்குக் கொடுத்ததை நான் சேமிக்க உதவும் - எனது நேரம், எனது பணம், எனது வேலை, எனது உறவுகள், எனது உடல்நலம் இவற்றை நான் இருக்கும் இடத்திலேயே உமக்காக பயன்படுத்த உதவும். உம்முடைய சத்தியத்திற்கு என் கண்களைத் திறந்து, அது என் தலையிலிருந்து என் இதயத்திற்கு என் கைகளுக்கு நகர்த்த உதவுங்கள். இயேசுவின் நாமத்தில். ஆமென்!


நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

GOD + GOALS: How To Set Goals As A Christian

ஒரு கிறிஸ்தவராக நமக்காக ஒரு இலக்கை வைத்துக்கொள்வது சரியா? நமக்கு எப்படி தெரியும் அந்த இலக்கு தேவனிடமிருந்து வந்ததா அல்லது நமது ஆசையா என்று? சரி, கிறிஸ்தவ இலக்கு எப்படி இருக்கும்? இந்த 5 நாள் வாசிப்பு திட்டத்தில், வேதத்தை...

More

இந்த திட்டத்தை எங்களுக்கு அளித்த கல்டிவேட் வாட் மேட்டர்ஸ் அமைப்பிற்கு எங்கள் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் விவரங்களுக்கு http://www.cultivatewhatmatters.com/youversion/ என்ற வலைத்தளத்தை அணுகவும்

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்