திட்ட விவரம்

இங்கே துவங்குங்கள் | இயேசுவோடு முதல் படிகள்மாதிரி

Start Here | First Steps With Jesus

15 ல் 1 நாள்

  

மாற்கு 1 | என் பின்னே வாருங்கள்

வணக்கம் துவக்கும்படி வரவேற்கிறோம். ஒருவேளை நீங்கள் இப்பொழுது தான் துவங்கி இருந்தாலோ - அல்லது ஒருவேளை மறு த்துவக்கத்தை - இயேசுவோடு, அல்லது விசுவாசத்தை குறித்து ஆர்வம் கொண்டிருந்தாலோ, நீங்கள் சரியான இடத்தில் இருக்கிறீர்கள்.


ஆகையால் நாம் எங்கே துவங்குவது? நல்லது, சீஷர்களுக்கு, இவை அனைத்தும், "என் பின்னே வாருங்கள்" எனும் எளிய சொற்களோடு துவங்கியது. அதன் பின் தொடர்ந்த பயணம் அனைத்தையும் மாற்றும்.


ஆகவே நாமும் அங்கிருந்து துவங்குவோம்: இயேசுவை பின்தொடர்வது. நமது திட்டம் மிக எளிமையானது. நாம் இரண்டு வேத புத்தகங்களை வாசிப்போம். முதலாவது மாற்கு சுவிசேஷத்தில் உள்ள இயேசுவின் கதையை பின் தொடர்வோம்; அதன்பின் நம்முடைய கதையை பற்றி கொலோசெயர் நிருபத்தில் பேசுவோம். அன்று இயேசுவை பின்பற்றுவது என்றால் என்ன என்பதை மாற்கு சுவிசேஷத்தில் பார்ப்போம் மற்றும் இன்று இயேசுவை பின்பற்றுவது என்றால் என்ன என்பதை கொலோசெயரில் பார்ப்போம்.


வேத வாசிப்பு இந்த திட்டத்தில் முக்கிய பகுதி, ஆனால் நான் இந்த பயணத்தில் உங்களுக்கு துணையாய் இருந்து காரியங்களை விலக்குவேன். எல்லாவற்றிற்கும் மேலாக, பயணங்கள் ஒன்றாக பயணிப்பதை நன்று. ஒரு நண்பரை அழையுங்கள், நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்துகொள்ளும் முயற்சியில் நீங்கள் இயேசுவை அறிந்துகொள்வீர்கள்! நீங்களாகவே படிக்க துவங்கி, பின் அதை குறித்து அனுதினமும் - அல்லது வாரந்தோறும் பேசும்படி இங்கே உள்நுழையவும். அல்லது இதில் நீங்களும் நானும் கூட கலந்துரையாடலாம்.


சரி, நாம் உள்நுழைவோம். இன்று, மாற்கு அதிகாரம் 1, வசனம் 1 ல் இருந்து துவங்குவோம்:


"தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தின் ஆரம்பம்.”

அது அருமையான ஆரம்பம். முதலாவது, அது நற்செய்தி, நற்செய்தியை நான் விரும்புகிறேன். அது இயேசு எனும் மேசியாவை குறித்தது. மேசியா என்றால் "அபிஷேகம் பண்ணப்பட்டவர்"  - ஒன்றில் இருப்பதுபோல், தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர். மற்றும் இயேசுவே தேவ குமாரன்.


2-ம் வசனம் நூற்றாண்டுகள் முன்பாக ஒரு தீர்க்கதரிசனத்தோடு துவங்குகிறது:


“இதோ, நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன், அவன் உமக்கு முன்னே போய், உமக்கு வழியை ஆயத்தம் பண்ணுவான் என்றும்.”

தேவனின் தூதன் என்பவன் பிரசிங்கிக்கவும், இயேசுவுக்காக இருதயங்களை ஆயத்தப்படுத்தவும் அனுப்பப்பட்ட யோவான் எனும் மனுஷன். அவர் அவர்களை எவ்வாறு ஆயத்தப்படுத்தினார்? 4-ம் வசனம் சொல்கிறது, அவர் பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தை" குறித்துப் பிரசங்கம் பண்ணிக் கொண்டிருந்தான். மனந்திரும்புதல் முக்கியமானது. மனந்திரும்புதல் என்பது உங்கள் மனதை மாற்றி, திசையை மாற்றுவது. "நான் என்ன தவறு செய்தேன்" என்று உணர்ந்து அதில் இருந்து திரும்பி புது திசையை பின் தொடருங்கள். ஆகையால் ஜனங்கள் வெகு தூரத்தில் இருந்து வந்து யோவான் சொன்னதை கேட்டு, மனந்திரும்பி, ஞானஸ்நானம் பெற்றனர்.


இதுவே முக்கியம். இயேசு பின்பற்ற முதலாவது படி நம் திசையை மாற்றுவது. நீங்கள் செய்த தவறை அறிக்கையிட்டு, அதிலிருந்து திரும்பி, இயேசுவுக்கு நேராக திரும்பு. மனந்திரும்புதலுக்கு அடையாளமாக யோவான் தண்ணீரால் ஞானஸ்நானம் கொடுத்தார், ஆனால் அவர் சொன்னது இயேசு வர போகிறார், அவர் பரிசுத்த ஆவியினால் ஞானஸ்தானம் கொடுப்பார்.”


9-ம் வசனத்தில், இயேசு நாசரேத்தூரிலிருந்து வந்தார், அவருக்கு யோவான் ஞானஸ்நானம் கொடுத்தார். ஆனால் இயேசுவின் ஞானஸ்நானம் வித்தியாசமானது. ஆவியானவர் அவர் மேல் ஒரு புறாவை போல் வந்திறங்கினார், மேலும் 11-ம் வசனத்தில்:


“அன்றியும், நீர் என்னுடைய நேசகுமாரன், உம்மில் பிரியமாயிருக்கிறேன் என்று, வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று.”

இங்கே நாம் கவனிக்க அநேக காரியம் உண்டு, ஆனால் நான் உங்களுக்கு விட்டு விட விரும்புகிறேன். அவ்வாறே அது வேலை செய்யும். நான் பெரிய காரியங்கள் மேல் கவனம் செலுத்த விரும்புகிறேன், பின் நீங்கள் நுணுக்கங்களை படியுங்கள். வசனம் 14:


“யோவான் காவலில் வைக்கப்பட்ட பின்பு, இயேசு கலிலேயாவிலே வந்து, தேவனுடைய ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து. ‘காலம் நிறைவெறிற்று, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்று என்று அவர் சொன்னார். மனந்திரும்பி, சுவிசேஷத்தை விசுவாசியுங்கள்!’”

இயேசு ஒரு செய்தியோடு வந்தார்: தேவ ராஜ்யம் - தேவன் ஒரு ராஜாவாக அரசாளும் ஒரு இடம் - சமீபமாயிற்று. அது நம் கைக்கு எட்டும் தூரத்தில் உள்ளது. அதனால் அவர் ஜனங்களை மனந்திரும்புதலுக்கு என்று அழைத்தார் - தங்கள் பாவங்களை விட்டு திரும்பவும் - நற்செய்தியை விசுவாசிக்கவும்.


அவ்வாறு ராஜ்யம் சமீபமாயிருந்தால், அதை எவ்வாறு அடைவது? வசனம் 16:


“அவர் கலிலேயாக் கடலோரமாய் நடந்துபோகையில், மீன்பிடிக்கிறவர்களாயிருந்த சீமோனும், அவன் சகோதரன் அந்திரேயாவும் கடலில் வலைபோட்டுக் கொண்டிருக்கிறபோது அவர்களைக் கண்டார். இயேசு அவர்களை நோக்கி: என் பின்னே வாருங்கள், உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்றார்.’”

குறித்துக்கொள்ளுங்கள். தேவ ராஜ்யத்தை அடையும் சாவியானது இந்த இரண்டு வார்த்தையில் உள்ளது: இயேசுவை பின்பற்று.


வசனம் 18:


“உடனே அவர்கள் தங்கள் வலைகளை விட்டு, அவருக்குப் பின் சென்றார்கள்.”

பின்பற்ற வேண்டும் என்றால் எதையாகிலும் விடவேண்டியது அவசியம். இயேசு கடந்து போய் யாக்கோபையும் யோவானையும் (வேறே யோவான்) கண்டார், அவர்களும் அவர்களிடம் இருந்ததை விட்டு இயேசுவை பின்பற்றினார்கள்.


சில வேளை தங்கள் வாழ்க்கை மாறும் என்றோ அல்லது முழு உலகமும் மாறும் என்று சீஷர்கள் அறிந்தது உண்டோ என்று அச்ச்சரியப்பட்டுள்ளேன். அவர்கள் அவரை எவ்வளவு நம்பினார்கள் என்று தெரியவில்லை, ஆனால் ஆவார்கள் தங்கள் முதல் படிகளை எடுக்கும் அளவுக்கு அவர்கள் இயேசுவை நம்பி இருந்தனர்.


ஆகவே நாமும் அவர்களோடு இணைவோம். மாற்கு 1 வாசியுங்கள். பிசாசுகளை துரத்தும்போது இயேசுவின் அதிகாரத்தை பாருங்கள். வியாதியஸ்தர்களை குணமாக்கும்போது அவரது மனஉருக்கத்தை உணருங்கள். கற்றுக் கொடுக்கும்போது அவரது ஞானத்தை கேளுங்கள். மற்றும் நீங்கள் படிக்கும்போது, இயேசு நம்மை சில எளிய உண்மைகளின் தொகுப்பை நம்பவோ அல்லது தத்துவங்களை தியாணிக்கவோ இயேசு நம்மை அழைக்கவில்லை என்பதை புரிந்துக் கொள்ளுங்கள். மற்றும் அவர் நம்மை எந்த நிறுவனத்தையும் சேரும்படி அழைக்கவில்லை. அவர் நம்மை தன்னுடைய பயணத்தில் அவரோடு கூட சேரும்படி அழைக்கிறார். அவரை பின்பற்றும்படி நம்மை அழைக்கிறார்.


கருத்து பிரதிபலிப்பு மற்றும் கலந்துரையாடலுக்காக:

  • "என் பின்னே வாருங்கள்" என்று இயேசு சொன்னதை குறித்து உங்கள் கருத்து என்ன? "என்னை கேளுங்கள்" அல்லது "என்னை நம்புங்கள்" என்பதிலிருந்து அது எவ்வாறு வேறுப்பட்டுள்ளது”?
  • ஒரு கிறிஸ்துவன் என்பதன் பொருளை இந்த வார்த்தைகளில் எந்த வார்த்தை சிறந்த முறையில் விளக்குகிறது: மதம், விசுவாசம், தத்துவம், விதிமுறைகள், பயணம், உறவு? ஏன்?
  • நீங்கள் எவ்வாறு இயேசுவை குறித்து அறிந்து கொண்டீர்கள்? உங்கள் கதையை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

வேதவசனங்கள்

நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

Start Here | First Steps With Jesus

ஒருவேளை நீங்கள் இயேசுவையோ அல்லது வேதத்தையோ புதிதாக அறிந்திருந்தால், அல்லது புதிதாக அறிந்திருக்கும் நண்பருக்கு உதவ நேர்ந்தால் - இங்கே துவங்கவும். அடுத்த 15 நாட்களுக்கு, இந்த 5 நிமிட ஒலி வழிகாட்டிகள் உங்களை: மாற்கு மற்றும்...

More

இந்த திட்டத்தை வழங்கியதற்காக Through The Word அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் விவரங்களுக்கு, http://throughtheword.org என்ற இணையத்தளத்தை அணுகவும்

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்