திட்ட விவரம்

கிறிஸ்து பிறப்பின் காட்சிமாதிரி

The Nativity Scene

4 ல் 1 நாள்

  



இயேசுவின் பிறப்பு காட்சியை, இயேசுவின் தாயாகிய மரியாள் இல்லாமல் நினைத்து பார்ப்பதென்பது இயலாத காரியமாகும். ஏனெனில் அவள் அதின் மிகமுக்கியமான கதாபாத்திரங்களில் ஒன்றாவாள். அருமையான இந்த இளம்பெண்ணின் மூலமாகத்தான் தேவகுமாரன் பாடுகள் நிறைந்த இவ்வுலகில் நுழைந்தார், பின்னர் சிலுவையின் மீதான தன்னுடைய மரணத்தினால் அதை மீட்டெடுத்தார். 



ஆனால் தேவனுடைய இந்தத் திட்டம் நிச்சயமாகவே மரியாள் தனக்கென்று வைத்திருந்த திட்டமல்ல. உண்மையில் சொல்லப்போனால், அவள் அநேகமாக காபிரியேல் தன்னை சந்தித்து, தான் ஒரு குழந்தைக்குத் தாயாகப் போகும் செய்தியை அறிவித்த அந்நாளில் இருந்ததை விட முற்றிலும் வேறான விதத்தில் தன்னுடைய வாழ்க்கையைக் கற்பனைசெய்து வைத்திருந்திருப்பாள். தனக்கு நியமிக்கப்பட்டிருந்த யோசேப்பை மணந்துகொண்டு மகிழ்ச்சியான ஒரு குடும்ப வாழ்வை ஆரம்பிப்பதே அவளுடையத் திட்டமாயிருந்திருக்கும். மேலும், அவள் இன்னும் புருஷனை அறியாதிருக்கையில் எப்படி ஒரு குழந்தைக்குத் தாயாக முடியும்?



அவள் ஒரு குழந்தைக்குத் தாயாவதென்பது முடியாத ஒரு காரியம் போல் தோன்றியது, ஆனால் காபிரியேல் அவளிடம், தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை என்று சொல்லி, பரிசுத்த ஆவியின் பலத்தினால் அவள் கர்ப்பவதியாவாள் என்றும், அவளுக்குப் பிறக்கப்போகும் குழந்தை தேவனுடைய குமாரன் என்னப்படும் என்றும் விளக்கிக் கூறினான். 



மரியாள் தன்னுடைய சொந்த விருப்பங்களைத் தேவன் தன் வாழ்வில் வைத்திருந்த திட்டங்களுக்காக விட்டுக்கொடுத்தாள். அவள் தேவதூதனிடம், “இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது” என்று சொன்னாள். இது எவ்வளவு ஒரு மகத்துவமான செயல், இல்லையா? 



மரியாள் தன்னுடைய திட்டங்கள், மற்றும் விருப்பங்களைத் தேவனுடைய அழைப்பிற்காக விட்டுக்கொடுக்க ஆயத்தமாயிருந்தாள். திருமணமாத தாய் என்ற நிலை அவமானத்திற்கு வழிவகுக்கும் என்பதையும், யோசேப்பு தன்னை நம்பமாட்டான் என்பதையும் அவள் அறிந்திருந்த போதிலும், தேவனுடைய திட்டங்கள் தன்னுடையத் திட்டங்களைக் காட்டிலும் மேலானவைகள் என்ற தன்னுடைய நம்பிக்கையில் அவள் உறுதியாயிருந்தாள். 



நம்முடைய வாழ்விலும்கூட நாம் இதை நினைவில் வைத்துக்கொள்வது அவசியமாகும். நம்முடைய வாழ்க்கைக்கென்று நாம் பல திட்டங்கள் மற்றும் இலக்குகளை வைத்திருக்கின்றோம், ஆனால் தேவன் நாம் நினைப்பதிலும் பெரிதானவைகளைச் செய்யவல்லவர் என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. 



சிந்தனைக்கான கேள்விகள்:



தேவதூதன் தன்முன் தோன்றியபோது மரியாளுக்கு எப்படி இருந்திருக்கும் என நீங்கள் நினைக்கிறீர்கள்?



உங்களுடையத் திட்டங்களே அல்லாமல், தேவன் உங்களுக்காக வைத்திருக்கும் திட்டங்கள் என்னவாயிருக்கலாம்?



நீங்கள் நினைப்பதைக் காட்டிலும் மேலானதைத் தேவன் செய்யவல்லவர் என்ற நம்பிக்கையில் நீங்கள் உறுதியாயிருக்கும்படிக்கு, மரியாளிடமிருந்த அதே விசுவாசத்தை தேவன் உங்களுக்கும் கொடுக்கும்படி தேவனை நோக்கி ஜெபம் பண்ணுங்கள்.


வேதவசனங்கள்

நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

The Nativity Scene

கிறிஸ்துவ குடும்பங்கள் அநேகர் இயேசுவின் பிறப்பை சித்தரிக்க கிறிஸ்து பிறப்பின் காட்சியை வீடுகளில் அமைப்பதுண்டு. பெரும்பாலும் நாம் மரியாள், யோசேப்பு, மேய்ப்பர்கள், ஆடுகள் மற்றும் ஞானிகள் அந்த தொழுவத்தின் முன்னணையில் உள்ள ச...

More

யூத் கமிஷன் இன்டர்நேஷனல் அவர்களுக்கு இத்திட்டத்தினை வழங்கியமைக்காக எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் தகவல் அறிய http://yciclubs.com க்கு செல்லவும்

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்