திட்ட விவரம்

தேவனின் இருதயத்தை தினமும் தேடுதல் - ஞானம்மாதிரி

Seeking Daily The Heart Of God - Wisdom

5 ல் 1 நாள்



ஞானம் தேடுபவர்கள்



ஞானம் ஒரு நேசத்துக்குரிய காரியமாகும். மக்கள் ஞானத்திற்கு ஈர்க்கப்படுகிறார்கள். இது கவர்ச்சிகரமான மற்றும் வெற்றிகரமானதாகும். ஞானம் கர்த்தரிடம் இருந்து வரும் ஒரு வார்த்தை. அதனால் அதன் மதிப்பு பிரமிக்கதக்கதாகும். ஞானத்தின் காரணத்தால் தான் நாம் தேவாலயம் செல்கிறோம், வேதாகம போதனை கேட்கிறோம் மற்றும் பழைய வழிகாட்டிகளுடன் ஈடுபடுகிறோம். ஞானத்தைத் தேட வேண்டும், கேட்க வேண்டும். இது இயற்கையாக வரவில்லை; அது ஒரு பரிசு
ஞானம் விலைமதிப்பற்றது மற்றும் மிகவும் மதிப்புமிக்கது. இது உங்களைத் தொந்தரவு செய்யும் முடிவுகளிலிருந்து வாழ்நாள் முழுவதும் உங்களைப் பாதுகாக்கும் ஒரு பரிசு, மேலும் தொடர அல்லது நிறுத்த உங்களுக்கு நம்பிக்கையைத் தருகிறது. ஞானம் என்பது கர்த்தர் தனது வீரர்களின் சார்பாக பயன்படுத்தும் ஒரு ஆயுதம். ஞானம் குழப்பத்தை குறைத்து தெளிவை தருகிறது. இது சிறிய வெற்றிகளின் வரிசையாக முடிவுகளை தெளிவாக்குகிறது. இது வரவிருக்கும் ஆபத்தைக் குறித்து எச்சரிக்கிறது.



இருப்பினும், ஞானிகள் கூட பாவத்திலிருந்து விடுபடுவதில்லை. ஒரு புத்திசாலி ஆண் அல்லது பெண்ணுக்கு இன்னும் பொறுப்புணர்ச்சி தேவை - உண்மையில், ஞானிகள் பெருமைக்கு ஆளாகிறார்கள் (எரேமியா 9:23). புத்திசாலித்தனமான இதயம் பெருமையுடன் ஒன்றிணைந்தால் அது விதிகளுக்கு மேலே உயரக்கூடும் என்று நினைக்கிறது. இது ஆரம்பத்தில் மிகவும் நுட்பமானதாக இருக்கலாம், ஆனால் அதன் உள்நம்பிக்கைகள் காலத்தால் பாதிக்கப்பட்ட அடித்தளத்தைப் போல அழுகத் தொடங்குகின்றன. பெருமை கட்டுக்குள் வைக்கப்படாவிட்டால், அது ஞானத்தை திமிராக மாற்றும். ஒரு காலத்தில் ஞானமுள்ளவராக இருந்து பின்னர் கர்த்தரைப் பற்றிய பயத்தை குறைத்து, பெருமையை அனுமதித்த ஒரு தலைவரின் நிலைமை வருத்தமளிக்கிறது. ஞானம் என்பது கர்த்தரின் ராஜ்யத்துக்காக முயற்சிகள் முன்னெடுக்க அவர் தரும் பரிசு. அதை தனக்குத்தானே செலவு செய்தால், அது சுயசேவையாகிறது.



ஆகவே முன்னுரிமையைக் கர்த்தருக்கு கொடுக்கும் உண்மையான ஞானிகளைத் தேடுங்கள். ஒரு பிறழ்ந்த ஞானம் ஆன்மீக முறைகேட்டால் கெட்டுப் போகும்; ஆனால் தூய்மையான ஞானம் ஆன்மீக வாழ்க்கையை அளிக்கிறது. இது - பணிவு மற்றும் கீழ்ப்படிதலுடன் கூடிய - ஞானம் நம் வாழ்வை நன்கு முடிக்க நம்மை தயார் செய்கிறது. உண்மையான ஞானம் எல்லா சூழ்நிலைகளுக்கும் பொருத்தமானது. வேதாகமம், புத்தகங்கள், மக்கள், சூழ்நிலைகள், திரைப்படம், வாழ்க்கை அனுபவங்கள் மற்றும் படைப்புகள் ஆகியவற்றில் அதைத் தேடுங்கள். நீங்கள் அதைக் கண்டுபிடித்தவுடன், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். ஞானத்தின் விளைவுகளுக்காக கர்த்தருக்கு நன்றி கூறுங்கள். அவருடைய மகிமைக்கும் அவருடைய நோக்கங்களுக்கும் அதைப் பயன்படுத்துங்கள். மேன்மையின் உணர்வுக்குப் பதிலாக ஞானம் உங்களை தாழ்த்த நீங்கள் விட்டுக் கொடுங்கள். நாம் அனைவருமே கர்த்தரின் ஞானத்தை தேடுபவர்கள். நாம் பரலோகம் செல்லும் வரை அதைத் தேடுவோம்.



ஞானம் செயலாற்றல் உள்ளது, உயிருடன் இருக்கிறது, எப்போதும் கர்த்தரிடமிருந்து ஒரு புதிய உட்செலுத்துதலை ஏற்கிறது. ஜெபத்தைக் கர்த்தரின் ஞானத்துக்கு ஒரு பாலமாக உபயோகியுங்கள். அவருடைய முன்னோக்குக்காகவும், இந்த விஷயத்தில் அவருடைய இதயத்தின் விருப்பத்தையும் அடிக்கடி அவரிடம் கேளுங்கள். உங்கள் பரலோகத் தகப்பனை நெருங்குவதற்கு துதிப்பதிலும் அவரைச் சார்ந்து இருப்பதிலும் ஞானத்தை அனுமதியுங்கள். உங்கள் புத்திசாலித்தனமான நோக்கங்களை அவரிடம் அடிக்கடி அர்ப்பணியுங்கள். புத்திசாலித்தனமான முடிவெடுக்கும் வடிகட்டியாக உங்கள் பரலோகத் தகப்பனை வைத்திருங்கள்.



மற்றவர்களுக்கு தாராளமாக ஞானத்தை விநியோகிப்பவராக இருங்கள், உங்கள் இருதயத்தை மக்கள் அறிந்துகொள்ள நேரம் ஒதுக்குங்கள், உங்களை கர்த்தரை நம்ப வைத்த வாழ்க்கைப் படிப்பினைகளைப் புரிந்துகொள்ளுங்கள். நம் அனைவருக்குமே பிறருடன் பகிரத் தக்க ஞானம் உள்ளது. மற்றொருவரின் துன்பங்களைக் கேட்க நேரத்தை ஒதுக்குங்கள். அவர்களின் “மனதின் மேல்” பரந்து கிடக்கும் பிரச்சினைகளுக்கு கவனம் தேவை. அவர்களை பொறுமையோடு புரிந்து கொள்ளுங்கள், புரிந்த பின்னர் பணிவோடு உங்கள் விருப்பங்களை அவர்கள் பரிசீலனைக்கு அளியுங்கள். ஞானம் கண்ணியமானது. சக ஞானத்தைத் தேடுபவர் கிருபையின் ஆவியோடு கேட்டால் பதில்களைத் கொடுக்கிறது.



ஞானத்தை நாடுங்கள் மற்றும் கொடுங்கள் - கர்த்தருக்கு தாழ்மையுடன் சமர்ப்பிக்கப்படும் ஞானம்.



கர்த்தரின் இதயத்தை தினமும் தேடுங்கள் என்ற தியானத்திலிருந்து வாசிக்க: https://www.wisdomhunters.com/


நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

Seeking Daily The Heart Of God - Wisdom

நாம் கடந்து செல்லும் அன்றாட வாழ்க்கைப் பாதையில் நம்மை உற்சாகப்படுத்தி, ஊக்கப்படுத்தி நமக்கு உதவி செய்வதே தேவனின் இருதயத்தைத் தினமும் தேடுதல் என்ற 5-நாள் வாசிப்பு திட்டத்தின் நோக்கமாகும். பாய்டு பெய்லி அவர்கள் சொல்கிறார்க...

More

இந்த திட்டத்தை வழங்கியதற்காக Wisdom Hunters நிறுவனம் மற்றும் பாய்டு பெய்லி அவர்களுக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் விவரங்களுக்கு https://www.wisdomhunters.com/ என்ற இணையதளத்தை அணுகவும்

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்