திட்ட விவரம்

“பலங்கொண்டு திடமனதோடு வாழுங்கள்!மாதிரி

“பலங்கொண்டு திடமனதோடு வாழுங்கள்!

8 ல் 3 நாள்

“பரலோகத்தின் தூதுவர் – பரிசுத்த ஆவியானவர்”


ஒரு தேசத்தின் சார்பாக இன்னொரு தேசத்துக்கு அனுப்பபட்டு,, அந்த ஜனங்கள் மத்தியில் வாழ்ந்து, இரு   தேசங்களுக்கும் இடையே நல்லெண்ணத்தையும், சமாதானத்தையும்   நிலவச் செய்வதே ஒரு தூதுவரின் பணி. அவரது சொந்த தேசத்தின் அதிகாரத்தோடும், பெருந்தன்மையோடும், ஆதாரங்களோடும் தனது கடமைகளைத் தூதுவர் நிறைவேற்றுவார். அவர்மேல் அவரது   தேசம் வைத்திருக்கிற முழுநம்பிக்கையின் காரணமாக, தனது பணிகளை கௌரவத்தோடு முழுமையாகச் செய்து முடிப்பார். 


பல வழிகளில், பரிசுத்த ஆவியானவரின் பணி, பரலோகத்தின் தூதுவருக்கு   உரித்தான பணியை ஒத்திருக்கிறது. பரிசுத்த ஆவியானவர் தேவனுடைய எல்லா அதிகாரம், வல்லமை, ஆதாரம் எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து, அவரது பிரசன்னத்தின் மூலமாகவும், பணியின் மூலமாகவும் பூமியின்   மேலுள்ள ஒவ்வொரு மனிதருக்கும் தேவனுடைய அன்பை வெளிப்படுத்துகிறார்.


சீடரோடு வாழ்ந்த காலம்   முடிவடையும் நேரம் வந்தபோது, இயேசு தாம் சென்றபிறகும்   அவர்கள் தனித்துவிடப்பட மாட்டார்கள் என்று சொன்னார். அவர்களோடு இருந்து, அவர்களை நடத்தவும், அவர்களுக்குப் போதிக்கவும், அவர்களுக்கு ஆறுதல் செய்யவும் அவரது இடத்தில் இருக்கும்படியாக வரப்போகிற   இன்னொருவரைப் பற்றி சொன்னார்; அவரே, பரிசுத்த ஆவியானவர்.


“நான் போகாதிருந்தால், தேற்றரவாளன் (பரிசுத்த ஆவியானவர்} உங்களிடத்தில் வரார்; நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன்” (யோவான் 16:7) என்று இயேசு   சொன்னார்.


இயேசுவின் பணி இந்த பூமியில்   நிறைவேறியபிறகு, அவர் திரும்ப வரும்வரையிலும் அவரத் இடத்தில்   நம்மோடு இருக்கும் படியாகப் பரிசுத்த ஆவியானவரை அனுப்பினார். பரிசுத்த ஆவியானவர்   நமது வாழ்வில் வழிகாட்டியாகவும், தலைவராகவும், தேற்றரவாளராகவும், ஆலோசகராகவும் செயல்படுகிறார்.   தமது சீடர்களிடம் பரிசுத்த ஆவியானவரைக் குறித்து இயேசு இவ்வாறு விளக்கினார்:


“என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்” – யோவான் 14:26.


தேவனது பிரசன்னம் இன்றைக்கு நம்மோடு பரிசுத்த ஆவியானவரின்   வடிவில் இருக்கிறது. இன்றைய உலகிலும், நமது வாழ்விலும் அவர் தீவிரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

வேதவசனங்கள்

நாள் 2நாள் 4

இந்த திட்டத்தைப் பற்றி

“பலங்கொண்டு திடமனதோடு வாழுங்கள்!

நீங்கள் தனித்திருக்கவில்லை.   வாழ்க்கை எத்தனை சவால்களை நம்மீது எறிந்தாலும்,   நீங்கள் ஒரு நாள் விசுவாசியோ அல்லது முப்பது நாள் விசுவாசியோ யாராயிருந்தாலும்   இந்த உண்மை எல்லோருக்கும் பொருந்தும். இந்த வாசிப்புத் திட்டத்தில்...

More

இந்த திட்டத்தை வழங்குவதற்காக நாங்கள் ட்வென்டி 20 நம்பிக்கை, இன்க் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, செல்க:  http://www.twenty20faith.org/yvdev2

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்