திட்ட விவரம்

உங்கள் வாழ்வின் மிகப் பெரிதான தீர்மானம்!மாதிரி

உங்கள் வாழ்வின் மிகப் பெரிதான தீர்மானம்!

6 ல் 5 நாள்

“தண்ணீர் ஞானஸ்நானம் : மாறிய வாழ்க்கையின் பகிரங்க அறிக்கை”


உங்களது இரட்சிப்பைப் பகிரங்கமாக அறிக்கை செய்வதற்கு ஞானஸ்நானம் ஒரு பிரதான வழி. தண்ணீர் ஞானஸ்நானம் பழைய வாழ்க்கைமுறையின் முடிவையும் புதிய வாழ்வின் தொடக்கத்தையும் கொண்டாடுகிறது. தனது உயிர்ப்புக்குப் பின்னர், பரமேறுவதற்கு முன்னர், இயேசு தமது சீஷர்களுக்கு தண்ணீர் ஞானஸ்நானத்தின் முக்கியத்துவத்தைப் போதித்தார். 


“ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி,   பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுங்கள்” (மத்.28:19) என்று இயேசு சொன்னார்.


புதிய ஏற்பாடு முழுவதும், விசுவாசிகள் ஞானஸ்நானம் பெற்ற எண்ணற்ற நிகழ்ச்சிகளைப் பார்க்கிறோம். தண்ணீர் ஞானஸ்நானம் எடுக்கிறவருக்கும், அதனைப் பார்ப்பவர்களுக்கும் முக்கியக் குறியீடுகளை உடையதாயிருக்கிறது. ஞானஸ்நானத்தில், தண்ணீருக்குள் முழுகுதல் பழைய வாழ்க்கைமுறை முற்றுப்பெற்றதையும், சுத்திகரிக்கப்பட்டு தண்ணீரை விட்டு வெளியே வருவது தேவனுக்குள் புதிய சிருஷ்டியாக உங்களது புதிய வாழ்வின் தொடக்கத்தையும் வெளியரங்கமாகச் சித்தரிக்கிறது.


லுக்கா 3:3 ஞானஸ்நானத்தை “மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானம்”  என்று சொல்லி, நமது பழைய வாழ்க்கையிலிருந்தும், பாவத்திலிருந்தும் விலகி வந்துவிட்டோம் என அறிக்கை செய்யும் செயலாகக் காட்டுகிறது. தண்ணீர் ஞானஸ்நானம் நம்மை இரட்சிப்பதோ அல்லது நமது பாவங்களை மன்னிப்பதோ இல்லை; மாறாக, நமது கிறிஸ்தவ வாழ்க்கையின் அத்தியாவசிய அம்சமாக, நாம் ஒரு மாறிய புதிய சிருஷ்டியாகி விட்டோம் என அறிக்கை செய்வதைத் திருஷ்டாந்தமாகக் காட்டுகிறது.  இப்படிப்பட்ட அறிக்கை   செய்ய அவசியமேயில்லாத ஒரே ஒரு நபர், இப்பூமியில் பாவமேயில்லாத வாழ்க்கை வாழ்ந்த இயேசு   ஒருவரே. 


ஆனால், லூக்கா 3:21-ன்   படி, “ஜனங்களெல்லாரும் ஞானஸ்நானம் பெற்றபோது, இயேசுவும் ஞானஸ்நானம் பெற்றார்”. 


நாம் பின்பற்றும்படி முன்மாதிரிகையாகவே இயேசு ஞானஸ்நானம் பெற்றார். தண்ணீர் ஞானஸ்நானத்தின் முக்கியத்துவத்தை இதைவிட எவரும் அழுத்திச் சொல்லமுடியாது. நீங்கள்   இதுவரையிலும் தண்ணீர் ஞானஸ்நானத்துக்கு ஒப்புக்கொடுக்கவில்லையென்றால், அதற்கு முக்கியத்துவம் கொடுத்து சீக்கிரம் ஒப்புக்கொடுங்கள். நமது   இரட்சிப்பைப் பகிரங்கமாக அறிக்கை செய்யவேண்டுமென வேதம் அறிவுறுத்துகிறது; வசனத்தை நம்புகிற அநேக சபைகளில், ஞானஸ்நானம்   எடுப்பதற்கான வாய்ப்புகளைத் தருகிறார்கள். இயேசுவின் மாதிரியைப் பின்பற்றுவது   எப்போதுமே வெற்றிதரும் யுக்திதான். தேவன் உங்களது உண்மைத்துவத்துக்கும், கீழ்ப்படிதலுக்கும் தக்கதாக நிறைவாய் ஆசீர்வதிப்பாராக!

நாள் 4நாள் 6

இந்த திட்டத்தைப் பற்றி

உங்கள் வாழ்வின் மிகப் பெரிதான தீர்மானம்!

நாம் எடுக்கும் அநேக தீர்மானங்கள், சில காரியங்களுக்கு முக்கியமானதாக இருக்கும். ஆயினும், ஒரே ஒரு தீர்மானம்தான் மிக முக்கியமானது. இந்த அசாதாரணமான, தேவனுடைய இலவசப் பரிசான இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ளும் தீர்மானத்தைப்பற்றிய   ஆ...

More

இந்த திட்டத்தை வழங்குவதற்காக நாங்கள் ட்வென்டி 20 நம்பிக்கை, இன்க் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, செல்க:http://www.twenty20faith.org/yvdev2

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்