திட்ட விவரம்

பரிசுத்த யுத்தம்: கடின உழைப்பை தழுவுங்கள், நன்கு-ஓய்வு கொள்ளுங்கள்மாதிரி

Holy Hustle: Embrace A Work-Hard, Rest-Well Life

10 ல் 1 நாள்

எங்கள் வீட்டில், உழைப்பு என்பது ஒரு பயத்திற்குரிய வார்த்தை அல்ல. உழைப்பு என் வாழ்வின் இயற்கையே.


கடின உழைப்பு என்னும் வார்த்தையின் அகராதி வரையறையைப் பார்க்கும்போது, ​​இதன் பொருள் "விரைவாகவோ அல்லது ஆற்றலுடனோ செயல்படுவது" என்பதாகும். கொலோசெயர் 3:24 ஐ இது உங்களுக்கு நினைவூட்டவில்லையா? "நீங்கள் எதைச் செய்தாலும், அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள். " கடினமாக உழைப்பதைப் பற்றி நான் குற்ற உணர்ச்சியுடன் இருக்கும்போதும், ​​இப்போது பிரபலமாகத் தோன்றும் ஓய்வு மற்றும் ஆன்மா கவனிப்பு மாதிரிகளைப் பின்பற்ற முயற்சிக்கும்போதும், ​​நான் சோம்பேறித்தனத்தில் பெரிதும் சாய்வதைக் உணர்ந்தேன். நான் வேறொ வழியைத் தேடி, இடைவிடாமல் வேலை செய்யும் போதும், ​​உலகின் அவசரகால வரையறையைப் பின்பற்றி, பாடுபடும் போதும் நான் களைப்பாகிக் கொண்டிருபபையும் உணர்ந்தேன்.


எப்பக்கத்திலும், நான் பரிதாபமாக உணர்ந்தேன்.


ஆறு நாட்களிலும் பூமி முழுவதையும், அதிலுள்ள அனைத்தையும் ஒன்றுமில்லாமல் இருந்தவற்றிலிருந்து படைத்த தேவனை நாம் சேவிக்கின்றோம். தேவன் நமக்கு மாதிரியாக-ஆற்றல்மிக்க, ஆக்கபூர்வமான, கடின உழைப்பைத் தொடர்ந்து ஓய்வெடுத்தார். இந்த மாதிரி நவீன உழைப்புடன் எவ்வாறு பொருந்துகிறது என்பதைப் பற்றி நான் ஜெபித்தபோது, ​​கடவுள் சில விஷயங்களை எனக்கு வெளிப்படுத்தினார்:


  1. தேவனை மகிமைப்படுத்துவதற்கும் அவருடைய ராஜ்யத்திற்கு சேவை செய்வதற்கும் நாம் கடினமாக உழைக்கும்போது அது தவறு அல்ல.
  2. கடின உழைப்பின் ஆசீர்வாதத்தைக் குறித்து வேதமும் உதாரணங்களை வழங்குகிறது.
  3. படைப்பின் முதல் ஆறு நாட்களைப் போலவே நம் வாழ்னின் 100 சதவீதமும் வாழந்து விட்டு, ஏழாம் நாளை புறக்கணிக்க முடியாது.

உழைப்பு என்பது முன்னோக்கியே போக வேண்டும் என்றோ, அல்லது சக பணியாளர்களை தாண்டி முன்னேறுவதோ, அல்லது நாம் நமது வேலை ஸ்தலங்களில் பிரகாசிப்பது இல்லை. பரிசுத்த உழைப்பு என்பது கொலோசெயர் 3:24ன் கட்டளையை பின்பற்றி வாழ்வது, அதாவது தேவன் நம்மை எங்கே வைத்திருக்கிறாரோ அதிலே நிலையாய் இருப்பதோடு, நமது உழைப்பின் வாழ்க்கையின் மத்தியிலும் ஓய்வெடுக்கும் சமநிலையை கண்டுபிடிப்பதே ஆகும்.


இன்று, உங்களது தற்போதைய வேலை / ஓய்வு சமநிலை பற்றிய பிராத்தனைக்கு நேரம் எடுத்து ஜெபம் செயுங்கள். உங்கள் வாழ்க்கைக்கான தேவனின் திட்டத்துடன் வரிசைப்படுத்த முடியாத இடங்களையும் வெளிப்படுத்த தேவனிடம் கேளுங்கள், அது நீங்கள் உங்கள் வாழ்கையில் மிகவும் கடினமாக உழைப்பதும் மற்றும் மிகக் குறைந்த ஓய்வுள்ள அல்லது மிக அதிகமான ஓய்வும் உழைப்பில்லா வாழ்க்கையாகவும் இருக்கலாம். உங்கள் இலக்குகளை எழுதுவதற்கு நேரத்தை செலவிடுங்கள், வரவிருக்கும் ஆண்டில் நீங்கள் சாதிக்க விரும்பும் அனைத்தையும் எழுதுங்கள், பின்னர் அமைதியாக தேவனிடம் அந்த இலக்குகளை வழங்கி ஜெபியுங்கள்.


அவர் உங்கள் இருதயத்தில் வெளிப்படுத்தி எதை நீக்கிவிட சொல்லுகிறாரோ அதை ஒதிக்கிடுங்கள் மற்றும் எதை புதிதாக சேர்க்க சொல்லுகிறாரோ அதை சேர்த்துக் கொள்ளுங்கள். உங்களுடைய வேலையின் மூலம் தேவனுடைய நாமத்தை எப்படி மகிமைப்படுத்த முடியும் என்பதைக் காட்டும்படி தேவனிடம் கேளுங்கள், மற்றும் உங்களுடைய பேராசைக்காகவும், புகழின் தேடலுக்காகவும், போட்டியை நோக்கி நீங்கள் ஓடியதற்காகவும் மன்னிப்பு கேளுங்கள்.



***


இந்த தியானப் பகுதி பின் குறிப்பிடப்பட்டுள்ளத்தில் இருந்து எடுக்கப்பட்டதுபரிசுத்த யுத்தம்: கடின உழைப்பை தழுவுங்கள், நன்கு-ஓய்வு கொள்ளுங்கள்வழங்கியவர் கிரிஸ்டல் ஸ்டைன். வெட்கமின்றி வேலை செய்வது பற்றியும் குற்ற உணர்வு இல்லாமல் ஓய்வு எடுப்பது பற்றியும் மேலும் அறிய, இந்த இணைப்பை அணுகவும்https://amzn.to/2I3ow1d.





நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

Holy Hustle: Embrace A Work-Hard, Rest-Well Life

சமநிலை. இது நாம் நமது வாழ்வில் கேட்கும்"கடினமாக உழையுங்கள்!" என்ற சத்தங்களின் மத்தியிலும் "இன்னும் ஓய்வுக்கொள்ளுங்கள்" என்ற முறுமுறுப்புகளின் மத்தியிலும், அதிகமாக ஏங்கும் ஒரே காரியம். நமது வாழ்விற்கான தேவனின் திட்டம் அது...

More

இந்த திட்டத்தை வழங்கியமைக்காக கிரிஸ்டல் ஸ்டைன் மற்றும் ஹார்வெஸ்ட் ஹவுஸ் வெளியீட்டாளர்களுக்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.மேலும் தகவல் அறிய https://www.harvesthousepublishers.com/books/holy-hustle-9780736972963 க்கு செல்லவும்

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்