திட்ட விவரம்

குணமாக்கும் கிறிஸ்துமாதிரி

குணமாக்கும் கிறிஸ்து

25 ல் 1 நாள்

கர்த்தரின் சித்தத்தின்படி, ஒரு முக்கியமான சத்தியத்தை போதிக்க இருக்கிறேன். இந்த சத்தியம் இன்றைக்கும் நமக்கு ஏற்ற ஒரு சத்தியமாயிருக்கிறது. ஆகவே தான் குணமாக்கும் கிறிஸ்துவைக் குறித்து வரப் போகிற அனுதின தியானத்தில் போதிக்க விரும்புகிறேன். குணமாக்கும் கிறிஸ்து என்றவுடனே, இது ஏதோ ஒரு புத்தகத்தின் தலைப்பு என்று எண்ணிவிட வேண்டாம். ‘குணமாக்கும் கிறிஸ்து’ ஒரு நிஜமான நபர், சொன்னதை அப்படியே நிறைவேற்றுகிறவர். எனவே சுகத்தையும், தெய்வீக ஆரோக்கியத்தையும் இன்றைக்கு நீங்கள் பெற்று அனுபிவிக்க முடியும் என்று சொன்னால் அது மிகையல்ல. நீங்கள் வியதிப்பட்டிருப்பது தேவ சித்தம் அல்ல என்பது வேதத்தை வாசிக்கும்போது எனக்கு நன்றாய் விளங்குகிறது.


கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக உலகம் முழுவதும் கடும் பண நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கடியை தேவனுடைய வார்த்தை மற்றும் தேவ ஆவினவரின் துணையுடன் தீர்க்க முயற்சி செய்யாமல் போகும்போது விசுவாசிகள் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். இது சங்கிலி தொடர் போல பல எதிர்மறையான விளைவுகளை உண்டாக்கி, உடல் ஆரோக்கியத்தை கெடுத்து, முடிவில் அகால மரணத்தைக் கூட ஏற்படுத்த முடியும். எனவே, திருச்சிபையில் உள்ள அனைத்து விசுவாசிகளுக்கும் ஏற்ற இந்த போதனைகளை விசுவாசிகள் கேட்டு, கற்றுக்கொண்டு, விசுவாசித்து, எப்போதும் ஆரோக்கியத்தோடும் பெலத்தொடும் வாழவேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்.


ஆத்துமா வாழ்ந்திருக்கும்போது மட்டுமே சரீரத்திலும் மற்றும் எல்ல விதத்திலும் நாம் வாழ்ந்திருக்க முடியும் என்று 3 யோவான் 2 கூறுவதை நாம் மறந்துவிடக்கூடாது. உங்களைக் குறித்து தேவனுடய சித்தத்தை வெளிப்பாடாக பெற்று, அதைப் புரிந்துகொள்ளும் போது, உங்களுடைய ஆவி, ஆத்துமா, சரீரத்தில் மிகப் பெரிய பாதிப்பை அது ஏற்படுத்தும்.


ஏசாயா 53ம் அதிகாரம், இயேசு நம்முடைய பாவங்களை சுமந்து நமக்கு பதிலாளாக மரித்தார் என்றும், அவர் பட்ட காயங்களும், தழும்புகளும் நாம் குணமாவதற்காகத்தான் என்றும் கூறுகிறது. இந்த வருடத்தில் மாத்திரமல்ல, உங்கள் வாழ்நாள் முழுவதிலும் நீங்கள் எந்தவிதமான வியாதியும் நோயும் இல்லாமல் வாழவேண்டும் என்பதே தேவனுடைய விருப்பம்.

வேதவசனங்கள்

நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

குணமாக்கும் கிறிஸ்து

பரிசுத்த வேதாகமம் ஒரு மத புத்தகம் அல்ல. அது தேவனுடைய வார்த்தை. வேதாகமத்தில், ஆசீர்வாதம் மற்றும் சாபங்கள் என இரண்டு முக்கியமான சக்திகளைக் குறித்து நீங்கள் நிறைய பார்க்கலாம். இதில், ஆசீர்வாதம் முற்போக்கான சக்தியாகவும், சாப...

More

இந்த திட்டத்தை உருவாக்கியதற்காக Christ Chapel Chennai க்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய http://christchapel.in க்கு செல்லவும்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்