திட்ட விவரம்

வாலண்டைன் தினம்: ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டத்தில்மாதிரி

வாலண்டைன் தினம்: ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டத்தில்

5 ல் 1 நாள்

"வாலண்டைன் தினத்தின் தோற்றம்: ஒரு கிறிஸ்தவக் கண்ணோட்டம்"

ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டத்தில் மூலம் காதலர் தினத்தின் முக்கியத்துவத்தை அறிய வருவோம். இந்த கொண்டாட்டத்தின் பின்னணியில் உள்ள ஆழமான அர்த்தத்தைக் கண்டறியவும். ஒரு தியாகியாகிய செயிண்ட் வாலண்டைனின் தியாகத்தை கௌரவிக்கும் ஒரு உண்மை சம்பவத்திலிருந்து கலாச்சார மற்றும் காதல் அனுசரிப்பாக மாற்றப்பட்ட அதன் இன்றைய முக்கியத்துவத்தை சிந்திக்க முன்வருவோம். வாலண்டைன் தினம் என அழைக்கப்படுவது, சாக்லேட்டுகள் மற்றும் பூக்களுக்கு மத்தியில் அடிக்கடி கவனிக்கப்படாத ஆழமான கிறிஸ்தவ வேர்களைக் கொண்டுள்ளது என்பதை மறுக்க இயலாது. இது ஒரு கலாச்சார, மத மற்றும் வணிக கொண்டாட்டமாக பரிணமித்திருந்தாலும், அதன் கிறிஸ்தவ தோற்றம் ஆழமான உண்மையை அடிப்படையாக கொண்டுள்ளது மறந்து விடக்கூடாது.

உண்மை அன்புக்காக தன்னையே தியாகம் செய்த பரிசுத்த வாலண்டைன்

வரலாற்றுப் பின்னணியை ஆராய்ந்தால், தியாகியான செயிண்ட் வாலண்டைன் மூன்றாம் நூற்றாண்டு கிறிஸ்தவர், அவர் தனது நம்பிக்கைக்காக துன்புறுத்தலை எதிர்கொண்டார். அன்பிற்கான அவரது உறுதியான அர்ப்பணிப்பு மற்றும் கிறிஸ்துவின் பெயரில் அவரது இறுதி உயிர் தியாகம் ஒரு நினைவு நாளாக நிறுவ வழிவகுத்தது. காதலர் தினத்தின் முக்கியத்துவம் ஒரு கிறிஸ்தவ தியாகியான செயிண்ட் வாலண்டைனின் நினைவாக உள்ளது .என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

எவ்வாறாயினும், இந்த நினைவு நாள் காதலரின் அன்பின் கொண்டாட்டம் மட்டுமே அல்ல, மாறாக புனித வாலண்டைன் வெளிப்படுத்திய தியாக அன்பின் அங்கீகாரமாகும். அவரது நம்பிக்கைக்காக தியாகத்தை மேற்கொள்ள அவர் தயாராக இருந்தது அன்றைய தன்னுடைய சுய விருப்பத்துக்கு மாறாக அன்புடன் தன்னையே தியாகம் செய்ய முன்வந்தது பரிசுத்தமான அனபின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.

அன்பைப் பற்றிய வேதாகம நுண்ணறிவு:

தேவனுடைய பிள்ளைகளாக நாம் அன்பைப் பற்றிய நமது புரிதல் வேதாகமத்தில் ஆழமாக.எழுதப்பட்டுள்ளது. 1 யோவா 4:7-12 “பிரியமானவர்களே, ஒருவரிலொருவர் அன்பாயிருக்கக்கடவோம். ஏனெனில் அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது. அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து அவரை அறிந்திருக்கிறான். அன்பில்லாதவன் தேவனை அறியான். தேவன் அன்பாகவே இருக்கிறார்” என்று வசனங்கள் உறுதிப்படுத்துகின்றன. இந்த வேதாகம முன்னோக்கு அன்பை ஒரு காதல் நோக்கமாக மட்டும் பார்க்காமல், தெய்வீகத்துடனான நமது தொடர்பின் பிரதிபலிப்பாக பார்க்க நம்மை தூண்டுகிறது.

சுய-அன்பை பிறருடன் சமநிலைப்படுத்துதல்:

வாலண்டைன் தினத்தில் ஒரு குறிப்பிட்ட நபரிடம் மட்டுமே அன்பைக் கொண்டாடும் நிலையில் தன்னைத்தானே நேசிப்பது, குறித்த வேதாகம நிலைப்பாட்டை ஆராய்வது அவசியம். சுய-அன்பு சுயநலமானது என்ற தவறான கருத்துக்கு மாறாக, நம்மை நாமே நேசிக்கும்படி வேதாகமம் ஊக்குவிக்கிறது. நாம் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டிருக்கிறோம் (சங் 139:14)”நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், உம்மைத் துதிப்பேன், உமது கிர்யைகள் அதிசயமானவைகள், அது என் ஆத்துமாவுக்கு நன்றாய்த் தெரியும்” மற்றும் நமது சரீரங்கள் பரிசுத்த ஆவியின் ஆலயங்கள் (1 கொரி 6:19-20) “உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்று …” என்று அது நமக்குக் கற்பிக்கிறது. இதை ஒப்புக்கொள்வதன் மூலம், நாம் சுய-விருப்பம் மற்றும் தன்னைத்தான் நேசித்தலை ஒரு வேதாகம நிலைப்பாட்டில் இருந்து அறிந்துக்கொள்ளலாம்.

இருப்பினும், இந்த அன்பை பிறருக்கு வெளிப்படுத்துவது மிக முக்கியம். நம்மைப் போலவே அண்டை வீட்டாரையும் நேசிப்பதன் முக்கியத்துவத்தை இயேசுவே வலியுறுத்தினார் (மாற்கு 12:31). எனவே, தன்னைத்தான் நேசித்தலைப் பயிற்சி செய்யும் போது, ​​​​தேவப் பிள்ளைகள் பிறரை நேசிப்பதில் கவனம் செலுத்தவும், இணக்கமான மற்றும் இரக்கமுள்ள சமூகத்தை வளர்ப்பதற்கும் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

முடிவில், வாலண்டைன் தினத்தின் தோற்றம் குறித்த கிறிஸ்தவ கண்ணோட்டத்தைப் புரிந்துகொள்வதன் மூலம் கொண்டாட்டத்தின் முக்கியத்துவத்தை அறிய வருகிறோம். புனித வாலண்டைன் வெளிப்படுத்திய தியாக அன்பைப் பற்றி சிந்திக்கவும், அன்பைப் பற்றிய நமது புரிதலை வேதாகம கொள்கைகளுடன் இணைக்கவும் இத்தினம் நம்மை வருந்தி அழைக்கிறது. நாம் கொண்டாட்டங்களில் ஈடுபடும்போது, ​​அன்பிற்கான ஒரு முழுமையான அணுகுமுறையை ஏற்றுக்கொள்வோம் - இது தன்னைத்தான் நேசித்தல் மற்றும் பிறருக்கான அன்பு இரண்டையுமே உள்ளடக்கியது, தேவன் நமக்குக் காட்டிய ஆழமான அன்பில் வேரூன்றியுள்ளது. இந்த வாலண்டைன் தினம், நமது கிறிஸ்தவ நம்பிக்கையில் எடுத்துக்காட்டப்பட்ட அன்பின் நீடித்த மற்றும் வேறுபட்ட கோணத்தில் நமது கொண்டாட்டங்கள் அமையட்டும்.

நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

வாலண்டைன் தினம்: ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டத்தில்

வாலண்டைன் தினம் விடியும்போது, உண்மையான அன்பு, தியாகம் மற்றும் எதிர்பார்ப்புகளின் ஒருங்கிணைந்த சிந்தையை வெளிப்படுத்துகிறது. இதயத்தின் விஷயங்களில் நாம் செய்யும் தேர்வுகளைச் சுற்றியுள்ள வேதாகமம் ஞானத்தைப் பற்றி சிந்திப்பத...

More

இந்த திட்டத்தை வழங்கிய Annie David க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://ruminatewithannie.in

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்