திட்ட விவரம்

பாரத்திலிருந்து விடுதலைமாதிரி

பாரத்திலிருந்து விடுதலை

4 ல் 1 நாள்

வழி 1 :கர்த்தருக்குள் நம்மை திடப்படுத்திக் கொள்ளுதல்

தாவீது மிகவும் நெருக்கப்பட்டான்; சகல ஜனங்களும் தங்கள் குமாரர் குமாரத்திகளினிமித்தம் மனக்கிலேசமானதினால், அவனைக் கல்லெறியவேண்டும் என்று சொல்லிக்கொண்டார்கள்; தாவீது தன் தேவனாகிய கர்த்தருக்குள்ளே தன்னைத் திடப்படுத்திக்கொண்டான்.

1 சாமுவேல் 30:6

தேவனுக்காகவும் இஸ்ரவேலுக்காகவும் வைராக்கியம் பாராட்டின தாவீதின் வாழ்க்கையில் திடீரென்று ஒரு புயல்காற்று அடித்தது. தன்னை துரத்தின சவுலுக்கு தப்பியோடி அவனும் அவன் மனுஷரும் தன்தன் குடும்பத்தோடு வாழ்ந்திருந்த சிக்லாகை, அமிலக்கியர் வந்து அவர்கள் இல்லாத நேரத்தில், அவர்களுடைய மனைவிகளையும் சிறியோரையும் பெரியோரையும் சிறை பிடித்து பட்டணத்தை அக்கினையினால் சுட்டரித்தனர். இத்தகைய சூழ்நிலையில் தாவீதின் மனுஷர் அவன் மேல் குற்றம் சாட்டி அவனை கல்லறிய வேண்டுமென்று இருந்தனர். தாவீது மிகவும் நெருக்கப்பட்டான்.

அவன் தன் குடும்பத்தை இழந்து நிற்கிறான். அதோடு தன்னைச் சார்ந்த மனுஷரும், தங்களுடைய குடும்பத்தையும் எல்லா உடைமைகளையும் கொடுத்து விட்டு நிற்கிறார்கள் என்ற வேதனை தாவீதுக்கு. இதுவரைக்கும் பராமரித்து வந்த மனுஷர் இப்பொழுது தன்மேல் குற்றம் சாட்டும் விதமாக கல்லெரிய நினைக்கிறார்கள் என்ற துக்கம்.

இவைகளின் மத்தியில் தாவீது என்ன செய்ய வேண்டுமோ அதை சரியாக தெரிந்தெடுத்து அவ்விக்கட்டுகளிலிருந்து வெளியே வந்தான். அவன் என்ன செய்தான்?கர்த்தருக்குள் தன்னை திடப்படுத்திக் கொண்டான்(1 சாமு 30:6). பெலன் இல்லாமல் போகும் மட்டும் மிகவும் அழுது, பின்பு யோசிக்க ஆரம்பித்தான். தன்னை ராஜாவாக்குவேன் என்ற தேவனுடைய வாக்குத்தத்தங்களை நினைவு கூர்ந்தான். இச்சூழ்நிலையில் இருந்து கட்டாயம் தேவன் விடுவிப்பார் என்று விசுவாசித்து, தூசியில்( துக்கத்தில்) உட்காராமல் எழுந்திருந்து தன்னைத் தானே உற்சாகப்படுத்திக் கொண்டு, தேவனுக்குள் தன்னை தைரியப்படுத்திக் கொண்டான். பின்பு தேவனிடம் விசாரித்து அமலேக்கியரை பின்தொடர்ந்து, இழந்த எல்லாவற்றையும் திரும்ப பெற்றுக் கொண்டான்.விசுவாசத்தின் மூலம் தன்னையும் விடுவித்துக் கொண்டான். மற்றவர்களையும் நெருக்கத்திலிருந்து விடுதலையாக்கினான்.

இதுபோலவே எதிர்பாராத இழப்புகள் மத்தியிலும்,நாம் உதவி செய்தவர்கள் நம்மை எதிர்க்கும் போதும்,நம்மை சார்ந்தவர்கள் பெரிய ஆபத்தான சூழ்நிலையில் இருக்கும்போதும் நாம் கர்த்தருக்குள் நம்மை திடப்படுத்திக் கொள்ள வேண்டும். அதாவது அவரை விசுவாசித்து முன்னேறிச் செல்ல வேண்டும்.

விசுவாசம் - நாம் கால்கள் இடறி போகாமல் காத்துக் கொள்ளும். விசுவாசம் - பெலப்படுத்தும், விசுவாசம் - முன்னேறிச் செல்ல உதவி செய்யும். விசுவாசம் - நம்மை வெட்கப்படாமல் வெற்றியை காணச் செய்யும்.

எனவே, விசுவாசம் கேட்பதினாலே வரும், தேவனுடைய வசனத்தைக் கேட்பதினாலே விசுவாசம் வரும்.

ரோமர் 10:17 IRVTAM

நாம் தளறும்போது தேவனுடைய வார்த்தைகளை விசுவாசிப்போம்! நம்மை விடுவித்துக் கொள்வோம்!

வேதவசனங்கள்

நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

பாரத்திலிருந்து விடுதலை

" எபிரெயர் 12:1 -..., மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற ...

More

இந்தத் திட்டத்தை வழங்கியதற்காக India Revival Ministriesக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://indiarevivalministries.org/

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்