திட்ட விவரம்

இருதயத்தின் எதிரிகள்மாதிரி

Enemies Of The Heart

5 ல் 1 நாள்

ஆண்டி ஸ்டான்லி: இருதயத்தின் எதிரிகள்


தியானம் நாள் 1


குமிழும் எரிமலை


வேதப்பகுதி: மத்தேயு 15:1-20


நாம் பொதுவாக நம் நடத்தைகளை கண்காணிக்கிறோமே தவிர இருதயத்தின் போக்கை அல்ல. நம் நடத்தைகளில் நாம் விதி மீறி போகும் பொழுது பலர் அதை நமக்கு சுட்டி காட்டுவார்கள். ஆனால் நம் இருதயத்தின் போக்கை எப்படி கண்காணிக்க முடியும்? அது சற்று கடினமான காரியமே.


"வாயிலிருந்து புறப்படுகிறவைகள் இருதயத்திலிருந்து புறப்படுவரும்", "இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகள் புறப்பட்டுவரும்." - என்று இயேசு அன்று கூறியது இன்றைய சூழ்நிலைக்கும் பொருந்துவதாக இருக்கிறது.


இருதயத்தின் போக்கு ஒரு மர்மமே. எரேமியா தீர்க்கதரிசி கேட்டது போல "அதை அறியத்தக்கவன் யார்?" (எரேமியா 17:9). உண்மை என்னவெனில் யாராலும் அதை அறிய முடியாது. அதை நானும் ஆமோதிக்கிறேன். ஒருவேளை அதை புரிந்துக்கொள்ள நாம் முற்பட்டாலும் நம்மால் அதை ஆட்கொள்ள முடியாது - நாம் நம் இருதயத்தை கண்காணிக்க கற்றுக்கொள்ள இதுவே ஒரு முக்கிய காரணமாய் இருக்கிறது. உறங்கும் எரிமலை போல் நாம் எதிர்பார்க்காத நேரத்தில் உமிழ்ந்து தீமை உண்டாக்கலாம்.


திடீரென ஏற்படும் விவாகரத்து


திடீரென ஒரு குழந்தையின் குறையும் மதிப்பெண்கள், அவர்கள் அணுகுமுறையில் ஏற்படும் மாற்றங்கள்.


திடீரெனபொழுது போக்காக தொடங்கி, தீய பழக்கமாய் மாறும் காரியங்கள்.


சற்றும் எதிர் பார்க்காத நேரத்தில் நாம் அன்புவைப்பவர்களின் மனதை துளைக்கும் கொடிய வார்த்தைகள்.


நாம் அனைவரும் இவற்றை கண்டிருக்கிறோம், செய்துமிருக்கிறோம். இயேசு முன்பே கூறியது போல நம் இருதயத்தில் உதிக்கும் ரகசியங்கள், ரகசியங்களாகவே இருந்துவிடாது. நாளடைவில் அவை நம் வீட்டிலோ, வேலை ஸ்தலத்திலோ, நம் சுற்றுப்புறத்திலோ வெளிப்படும்.


நம் இருதயம் நம் ஒவ்வொரு உரையாடலிலும் நுழைகிறது, நம் உறவுகளை ஆட்க்கொள்கிறது. நம் வாழ்க்கை முழுவதும் நம் இருதயத்திலிருந்தே வெளிப்படுகிறது.நாம் வாழ்வதும், காப்பதும், வழிநடத்துவதும், மற்றவர்களுடன் தொடர்புப் படுத்திக்கொள்வதும், காதலிப்பதும், எதிர்கொள்வதும், எதிர்ச் செயலாற்றுவதும், மறுமொழி கூறுவதும், அறிவுறுத்துவதும், நிர்வகிப்பதும், சிக்கல்களைத் தீர்ப்பதும் நம் இருதயத்திலிருந்தே. நம் இருதயம், நம் உரையாடல்களின் தன்மையை மாற்றும் வல்லமை கொண்டது, நம் உணர்வுகளை மிகைப்படுத்தும் வல்லமை கொண்டது. நம் வாழ்க்கையின் எல்லா அரங்கங்களும் நம் இருதயத்தை ஊடுருவியே செல்கின்றன, எல்லா எண்ணங்களும் நம் இருதயத்தைக் கடக்காமல் எங்கும் செல்வதில்லை.


நம் இருதயத்தைக் கண்காணிக்கவும், புரிந்துகொள்ளவும், துயிமையாக்கவும் நாம் தையிரியமாக நம் பரம பிதாவினிடத்தில் உதவி கேட்கவேண்டும். அவர் நமக்குப் பதிலளிக்க ஆவலாய் இருக்கிறார், நம் இருதயத்தின் பழைய தீய எண்ணங்களை அகற்றி புதிய நல்ல எண்ணங்களை நம்மை நாளடைவில் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவைப் போல மாற்றும் எண்ணங்களைக் கொண்டு நிரப்ப அவர் ஆவலை இருக்கிறார்.


அடுத்த நான்கு நாட்களும், அனைவரும் எதிர்கொள்ளும் இருதயத்தின் நான்கு எதிரிகளைக் குறித்து இந்த தியானத்தில் பார்க்க இருக்கிறோம்.


சமீபத்தில் உங்கள் எண்ணங்களும், வார்த்தைகளும், நடக்கைகளும் உங்கள் இருதயத்தின் போக்கைக் குறித்து என்ன உணர்த்துகின்றன? இதைப் பற்றி உங்களுக்கு நெருக்கமான ஒருவரிடமும் அபிப்ராயம் கேளுங்கள்.


வேதவசனங்கள்

நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

Enemies Of The Heart

எப்படி ஒரு ஆரோக்கியமில்லாத இருதயம் உங்களுடைய சரீரத்தைப் பாதிக்க முடியுமோ, அப்படியே உணர்வு மற்றும் ஆவிக்குரிய ரீதியாக ஆரோக்கியமில்லாத இருதயம் உங்களையும், உங்கள் உறவுகளையும் பாதிக்க முடியும். அடுத்துவரும் ஐந்து நாட்களுக்கு...

More

ஆண்டி ஸ்டான்லி மற்றும் மல்ட்னோமா அவர்களுக்கு இத்திட்டத்தினை வழங்கியமைக்காக எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் தகவல் அறிய bit.ly/2gNB92i க்கு செல்லவும்

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்