திட்ட விவரம்

இரக்கத்தின் தேவன் - இயேசுவைப் போல நேசிக்க கற்றல்மாதிரி

 இரக்கத்தின் தேவன் - இயேசுவைப் போல நேசிக்க கற்றல்

4 ல் 1 நாள்




இரக்கத்தின் பொருள்

நான் மூலையில் இருந்தபடியே, கவனமாய் பார்த்துக் கொண்டிருந்தேன். நான் தலைவலியினால் நாள் முழுவதும் அவதிப்பட்டுக் கொண்டிருந்தும், புன்னகைத்தேன். அறை முழுவதும் புதிய விளையாட்டுச் சாமான்களும் பரிசுகளை சுற்றும் தாள்களும் சிதறிக்கிடந்தன. “என்னுடைய இரயில் வண்டி புத்தகம் உங்களுக்கு பிடித்திருக்கிறதா, பாட்டி?” என என் மகன் கேட்டான். அவன் தன் பிறந்த நாள் பரிசுப்பொருட்களை அனைவரிடமும் காட்டி பாராட்டுகளை பெற்றான். இரயில் வண்டி புத்தகத்தின் கடைசி பக்கத்தை திருப்பியபோது, அவன் அடுத்த பரிசை காட்ட தயாராய் இருந்தான். நான் துணிச்சலுடன் அதை எடுத்து விட நினைத்தேன்.

அவனை ஆறுதல்படுத்த முயற்சிப்பதே நான் செய்ய வேண்டிய சிறப்பான செயலாகும். என் மகனுக்கு காயம் பட்டிருந்தது, அது எனக்கு வலிக்கிறது.

“கேக் வெட்டும் நேரமாகிவிட்டது!” என்ற வாக்கியத்தை கேட்டதும். அவன் உணர்ச்சி வசப்பட்டு நான்கு வயதிற்கே உரித்தான வேகத்துடன் திரும்ப, காலுறை அணிந்து இருந்த அவன் பாதங்கள், வழுவழுப்பான தரையில் வழுக்கின. அவன் முகம் தரையில் பட்டு பற்கள் உதட்டில் பட்டு இரத்தம் வழிந்தது. கண்களில் கண்ணீரும் வாயில் இரத்தமும் வழிந்தன. நான் அவனை கைகளில் அள்ளி எடுத்து அவன் முதுகை தடவினேன். அவன் கண்ணீரும் இரத்தமும் என் சட்டையையும் விருந்தையும் நனைத்தன என் தோள்களில் அவன் முகம் புதைந்து இருக்க நாங்கள் ஆடும் நாற்காலியில் அமர்ந்தோம். அவன் அழுகையின் சத்தம் அதிகமானது மேலும் வலுத்தது.

என்னை நாள் முழுவதும் வாட்டிய தலைவலி என்னுடைய பயத்திலும் அக்கறையிலும் வேகமாக அடங்கியது. “எனக்கு அது சரியாக வேண்டும், என்னை விட்டு அது போக வேண்டும்!” ஒவ்வொரு விம்மலுடன் என் உடல்வலி மாறியது, என் தலையிலிருந்து என் இருதயத்திற்குள் மூழ்கியது. அதற்கு அடுத்த சில மணி நேரங்கள் விட்டுவிட்டு எழுந்து விம்மலுடன் வீக்கத்தின் மேல் வைத்த ஈரத்துணிகளால் நல்ல காலமாக, இரத்தம் உறைந்தது. நான் துணிச்சலுடன் அதை எடுத்து விட நினைத்தேன். ஆனால் அவனை ஆறுதல் படுத்த முயற்சிப்பதே நான் செய்ய வேண்டிய சிறப்பான செயலாகும். என் மகனுக்கு காயம் பட்டிருந்தது, அது எனக்கு வலிக்கிறது. இரக்கம், தயை, அனுதாபம், கருணை போன்ற வார்த்தைகளுக்கான அர்த்தத்தில் நிபுணர்கள் வேறுபட்டாலும், இவை இரக்கத்தின் அனைத்து பார்வையுமாய் நாம் “அன்பின் செய்கை” என விவரிக்கிறோம்.

இரக்கம் என்னும் பெயர்ச் சொல்லுக்கு தயவு காட்டுவது, இரக்க உணர்வு, மற்றவர்களின் துயரத்தை துடைக்கும் விருப்பம் என்பது பொருளாகும்.

பவுல் (குறிப்பிடுவது) “இரக்கம் உள்ள இருதயம்” என்பது நம் கவனத்தை அறிவியல் அல்லது தர்க்க அறிவில் இருந்து வேறுபட்ட, ஒரு ஆழமான மற்றும் நெருக்கமான அனுபவம்.

தயவு மற்றும் இரக்கம் போன்றவை நாம் தினந்தோறும் கேட்கும் வார்த்தைகள். மற்றவர்கள் அனுபவிக்கும் உடல், மனம், இருதயம் சார்ந்த வலிகளை நாம் காணும் போது நமக்கு ஏற்படும் உணர்வை வெளிப்படுத்துகிறது. துன்பப்படுபவருக்கும் நமக்கும் உள்ள தொடர்பு அதிகமாக இருந்தால் நாம் அதை எம்பதி என்கிறோம். துன்பப்படுபவரின் தோலினுள் நாம் தவழ்ந்து சென்று நாம் அவருடன் உணர்வினால் ஒன்றாக கலந்தது போல் இருக்கும். தேவையும் துன்பமும் எதிர்நோக்கும் போது நம் இரக்கத்தின் பிரதிபலன் மனமார்ந்த அக்கறையை வெளிப்படுத்துகிறது. நாம் அவர்களின் கண்கள் மூலம் கண்டு, இருதயங்களின் மூலம் உணர்கிறோம். அந்த ஒத்த உணர்வு நம் உள்ளார்ந்த மனதில் இருந்து வருகிறது.

பவுல் கொலோசெயர் 3:12 உள்ளுறுப்புகளை குறிக்க கிரேக்க பதத்தில் “இரக்கம் உள்ள இருதயம்” என்பது நம் கவனத்தை அறிவியல் அல்லது தர்க்க அறிவில் இருந்து வேறுபட்ட, ஒரு ஆழமான மற்றும் நெருக்கமான அனுபவம் என்று அர்த்தம்

வேதவசனங்கள்

நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

 இரக்கத்தின் தேவன் - இயேசுவைப் போல நேசிக்க கற்றல்

கிறிஸ்துவைப் போல தேவனின் அன்பு மற்றும் இரக்கத்தின் ஒரு வழியாக நீங்கள் எப்படி மாறலாம் என்பதைக் கண்டறியுங்கள் - அவரின் இரக்கம் ஒருபோதும் தோல்வியடையாது.

இந்த திட்டத்தை வழங்கியதற்காக எங்கள் தினசரி ரொட்டி - இந்தியாவுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tamil-odb.org/

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்